அந்த காலம்தான் மாஸ்: ஐகியர் அறிமுகம் செய்த விண்டேஜ் வைப்ஸ்- ப்ளூடூத் ரேடியோ வாங்கலாமா?

|

IGear விண்டேஜ் வைப்ஸ் சாதனம் குறித்து பார்க்கையில், இது இசையை ரசிக்க விரும்பும் அனைவருக்குமான சாதனமாக இருக்கிறது. இந்த சாதனம் எஃப்எம், ஏஎம், எஸ்டபிள்யூ மூலம் உள்ளூர் வானொலி தொடர்புகளை ப்ளூடூத் ஆடியோவுக்கான கேஜெட்களை இணைக்கும் அம்சத்தோடு வருகிறது.

அந்த காலம்தான் மாஸ்: ஐகியர் அறிமுகம் செய்த விண்டேஜ் வைப்ஸ்!

ஐகியர் விண்டேஜ் வைப்ஸ் சாதனத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 7-பேண்ட் ப்ளூடூத், எம்பி3 பிளேயர் மற்றும் எமெர்ஜென்ஸி டார்ச் அம்சத்தோடு கூடிய ரேடியோவாக வெளியாகியுள்ளது. ஐகியர் விண்டேஜ் வைப்ஸ் சாதனமானது பிளாக் மற்றும் வெண்கலம் என இரட்டை தோற்றத்தில் வருகிறது. இந்த சாதனமானது ரூ.2,250-க்கு கிடைக்கிறது. இது ஒரு ஆண்டு தொழில் உத்தரவாதத்துடன் அமேசான்.இன் மற்றும் பிளிப்கார்ட்.காமில் கிடைக்கும்.

விண்டேஜ் வைப்ஸ் சாதனமானது இசையை ரசிக்க விரும்பும் பயனர்கள் அனைவருக்கும் தனித்துவமான சாதனமாக இருக்கும். ஐகியர் விண்டேஜ் வைப்ஸ் எஃப்எம், ஏஎம் மற்றும் எஸ்-டபிள்யூ ஆகியவை கொண்ட 7 பேண்ட் ரேடியோ அமைப்பைக் கொண்டுள்ளது. அதோடு இதன்மூலம் தங்களுக்கு பிடித்த உள்ளூர் வானொலி சேனல்களுடன் அல்லது அந்தந்த பகுதியில் இருக்கும் நிலப்பரப்பு வானொலி தளங்களுடன் இணைக்க முடியும். எஃப்எம், எஸ்டபிள்யூ வானொலிகளுக்கான தொலைநோக்கி ஆண்டெனாவை கொண்டிருக்கிறது. இந்த சாதனம் தொலைதூர பகுதிகளில் கூட ரேடியோ சிக்னல்களை பெற உதவுகிறது. இந்த சாதனமானது 80ஸ்-களில் ஒரு வானொலியை மீண்டும் டியூன் செய்வதற்கு ஆகச்சிறந்த உணர்வை வழங்குகிறது. அதேபோல் அனலாக் டயல் மாடல்கள் மற்றும் ஸ்விட்ச் தொகுதி கட்டுப்பாடு, ரேடியோ டியூனிங் பயன்முறை வசதி இருக்கிறது.

ஐகியர் விண்டேஜ் வைப்ஸ் உள்ளமைக்கப்பட்ட எம்பி3 பிளேயரையும், தேவையான இடத்தில் சிறந்த ட்ரீர் அனுபவத்தை வழங்க மியூசிக் பிளேலிஸ்ட் யூஎஸ்பி பென்டிரைவ் மற்றும் டிஎஃப் கார்ட் பொருத்தும் வசதி இருக்கிறது. மேலும் ப்ளூடூத் வி5.0 இணைப்பையும் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது டேப்லெட், லேப்டார் ஆடியோ ஸ்ட்ரீம் செயல்திறனுடன் வருகிறது.

அந்த காலம்தான் மாஸ்: ஐகியர் அறிமுகம் செய்த விண்டேஜ் வைப்ஸ்!

ஐகியர் விண்டேஜ் வைப்ஸ் சாதனமானது 8வாட்ஸ் ஆடியோ ஸ்பீக்கர் சிஸ்டம் 4-வே சார்ஜிங் முறையைக் கொண்டிருக்கிறது. இது நிலையான 220வோல்ட் ஏசி மின் இணைப்புகள் மற்றும் நிலையான 5வோல்ட் டிசி மைக்ரோ யூஎஸ்பி சார்ஜர் உடன் பயன்படுத்தலாம். இது 1200 எம்ஏஎச் ரீசார்ஜ் செய்யக்கூடிய லித்தியம் அயன் பேட்டரி கொண்டிருக்கிறது.

அதேபோல் இந்த சாதனத்தை வெளிப்புறத்ததில் பயன்படுத்தும் போது சூரிய ஒளியை பயன்படுத்தியும் ரீசார்ஜ் செய்யலாம். மேலும் எதுவும் கிடைக்காத பட்சத்தில் இரண்டு பின்புற பாக்ஸை பாப் செய்து அதன் மூலம் இயக்கலாம். ஐகியர் நிறுவனர் கமலேஷ் சர்மா புதிய ஆடியோ சாதனம் குறித்து கூறுகையில், இது விண்டேஜ் வைப்ஸ் சாதனமாகும், சிறந்த அனுபவத்தை வழங்கவும் கடந்த காலத்தை மீண்டும் வாழ விரும்பும் அனைவருக்கும் இது சிறந்த தேர்வாக இருக்கும் எனவும் கூறினார். சோலார் சார்ஜிங் உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்பத்தின் மூலம் இது தனித்துவமான கேஜெட்டாக அமையும் என குறிப்பிட்டார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
IGear Vintage Vibes Launched With Solar Charging, Emergency torch and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X