வெறும் ரூ .2,000 விலையில் தரமான சவுண்ட் பார் அறிமுகம்.. எங்கே வாங்கலாம்?

|

ஐகியர் (iGear) நிறுவனம் அதன் வயர்லெஸ் சவுண்ட் கேட்ஜெட்ஸ் பட்டியலில் புதிதாக ரேஸர்பீட் (RazorBeat) என்ற சவுண்ட் பார் சாதனத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் 1 ஆண்டு நிலையான தொழில் உத்தரவாதத்துடன், உள்ளமைக்கப்பட்ட சப் வூபர் உடன் கூடிய ஐஜியர் ரேஸர்பீட் 10W ப்ளூடூத் சவுண்ட்பார் வெறும் ரூ .2,000 விலைக்கு கிடைக்கிறது.

வெறும் ரூ .2,000 விலையில் தரமான சவுண்ட் பார் அறிமுகம்..எங்கே வாங்கலாம்

ரேஸர்பீட் 10W செயல்திறனைக் கொண்டுள்ளது மற்றும் தனிப்பட்ட ஆடியோவிற்கான முழுமையான புளூடூத் ஸ்பீக்கர் அமைப்பாகவும் இதை நீங்கள் பயன்படுத்தப்படலாம். கச்சிதமான மற்றும் ரீசார்ஜ் செய்யக்கூடிய, ரேஸர்பீட் மிகவும் சிறியதாக இருப்பதால், உங்கள் சாலை பயணத்தின் போதும் இதை நீங்கள் அவுட்டோர் பயன்பாட்டிற்கும் கையில் எடுத்து செல்லலாம் என்று நிறுவனம் கூறியுள்ளது.

இந்த சிறிய 10W ரேஸர்பீட் சவுண்ட்பார் கூடுதல் பாஸிற்கான உள்ளமைக்கப்பட்ட சப் வூபரை கொண்டுள்ளது. இது உயர்ந்த பாஸ் மற்றும் மிருதுவான அதிகபட்ச ஆடியோ தரம் உள்ளிட்ட சிறந்த கூர்மையான ஆடியோ செயல்திறனை உருவாக்குகிறது. பயணரின் ஆடியோ அனுபவத்தை அடுத்த நிலைக்கு எடுத்து செல்கிறது. பல உள்ளீடுகளுடன் இருக்கும் இந்த ஐஜியர் ரேஸர்பீட் சவுண்ட் பார் சாதனத்தை நீங்கள் தனிப்பட்ட புளூடூத் ஸ்பீக்கர் அமைப்பாகவும் பயன்படுத்தப்படலாம்.

இது உங்கள் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் லேப்டாப்களுடன் இணைக்கக்கூடிய புளூடூத் வி 5.0 மற்றும் AUX உள்ளீட்டைக் கொண்டுள்ளது. முற்றிலும் தனித்துவமான இசை அமைப்பைக் கொண்டிருக்க உங்களுக்கு பிடித்த எம்பி 3 பிளேலிஸ்ட்டுடன் பென் டிரைவ் அல்லது மைக்ரோ எஸ்டி கார்டையும் இதில் நீங்கள் பயன்படுத்தலாம். அதற்கான தனிப்பட்ட ஸ்லாட்களும் இந்த புதிய சவுண்ட் பார் சாதனத்தில் வழங்கப்பட்டுள்ளது.

கடைசியாக, ஐகியர் ரேஸர்பீட் சவுண்ட்பார் TWS ஐக் கொண்டுள்ளது, எனவே உங்கள் அறையில் இரண்டு ரேஸர்பீட் சாதனத்தை இணைத்து நீங்கள் சரவுண்ட் சவுண்ட் ஒலியுடன் புதிய ஸ்டீரியோ அனுபவத்தை அனுபவிக்க முடியும்,முடியும். மேலும் இது 1500 எம்ஏஎச் ரிச்சார்ஜபிள் பேட்டரியால் இயக்கப்படுகிறது. ரேஸர்பீட் சவுண்ட்பார் உங்களுக்கு 4 முதல் 5 மணிநேர இடைவிடாத இசையை வழங்க கூடிய ஆற்றல் கொண்டது.

மலிவு விலையில் சிறந்த ஆடியோ சாதனம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் இந்த புதிய ஐகியர் ரேஸர்பீட் (RazorBeat) என்ற சவுண்ட் பார் சாதனத்தை வாங்கலாம். சவுண்ட் பார் சாதனம் இப்படி ஒரு கம்மி விலையில் கிடைப்பது என்பதே சற்று அரிதான ஒரு விஷயம் தான். அதுவும் குறைந்த விலையில் மிரட்டலான சிறப்பம்சங்கள் உடன் வெளிவந்துள்ள இந்த புதிய சவுண்ட் பார் சாதனத்தை நிச்சயமாக பயனர்கள் ட்ரை செய்து பார்க்கலாம்.

ப்ளூடூத் ஸ்பீக்கர் வாங்க நினைப்பவர்களும் இந்த சாதனத்தை வாங்கி பயன் அடையலாம். ப்ளூடூத் ஸ்பீக்கர் ஆகவும் இந்த சாதனம் செயல்படுகிறது என்பது கூடுதல் சிறப்பு. அதுமட்டுமின்றி, இந்த சாதனம் TWS அம்சத்தை ஆதரிக்கிறது. TWS என்பது ட்ரூலி வயர்லெஸ் ஸ்டீரியோ என்று அர்த்தம். இரண்டு சவுண்ட் பார் சாதனத்தை ஒரே ப்ளூடூத் இணைப்பின் கீழ் இணைத்து நீங்கள் ஸ்டீரியோ அனுபவத்தை சரவுண்ட் தரத்தில் அனுபவிக்கலாம் என்பது இந்த் சாதனத்தின் மற்றொரு சிறப்பாகும்.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
iGear RazorBeat wireless 10W Soundbar Launched in India at Just Rs 2000 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X