56W ஸ்பீக்கர்கள்.. QLED டிஸ்பிளே.. டால்பி விஷன்.. இந்தியாவில் அறிமுகமான புதிய 4கே டிவிகள்..
டிசிஎல் (TCL) நிறுவனத்தின் சப்-பிராண்டான ஐஃபால்கான் (iFFALCON) நம்ப முடியாத விலையில் புதிய 4கே ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஐஃபால்கான் நிறுவனம் தற்போது கியூ73 (Q73) 43-இன்ச், 50-இன்ச், 55-இன்ச், 65-இன்ச் 4கே கியூஎல்இடி டிவிகளை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய ஐஃபால்கான் கியூ73 டிவிகள் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 16:09 ஆஸ்பெக்ட் ரேஷியோ (16:09 aspect ratio), 450 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது. அதேபோல் இந்த டிவிகளின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த டிவிகளில் MEMC டெக்னாலஜி ஆதரவு உள்ளது.

ஐஃபால்கான் கியூ73 43-இன்ச், 50-இன்ச், 55-இன்ச், 65-இன்ச் 4கே கியூஎல்இடி டிவிகளில் டால்பி விஷன் (Dolby Vision) எனும் அம்சம் உள்ளது. இது தியேட்டர் அனுபவத்தை வழங்கும் என்றே கூறலாம். மேலும் இந்த டிவிகள் 120 ஹெர்ட்ஸ் கேம் ஆக்சிலரேட்டர் வசதி மற்றும் கேம் மாஸ்டர் டெக்னாலஜி ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த டிவிகளை நம்பி வாங்கலாம்.
அதேபோல் டால்பி அட்மோஸ் (Dolby Atmos), டிடிஎஸ் விர்ச்சுவல்:எக்ஸ் (DTS Virtual:X) உள்ளிட்ட ஆடியோ அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஐஃபால்கான் கியூ73 டிவிகள். குறிப்பாக ஐஃபால்கான் கியூ73 43-இன்ச் மற்றும் 50 இன்ச் ஸ்மார்ட் டிவிகள் 30 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டு வெளிவந்துள்ளன.
மேலும் ஐஃபால்கான் கியூ73 55-இன்ச் மற்றும் 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் 56 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளன. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால இந்த டிவிகள் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த டிவிகளில் ஸ்டாண்டர்ட் (Standard), மூவி (Movie), மியூசிக் (Music), வாய்ஸ் (Voice), கேம் (Game), ஸ்டேடியம் (Stadium), பர்சனல் (Personal) ஆகிய சவுண்ட் மோட்கள் வருகின்றன.
ஐஃபால்கான் கியூ73 43-இன்ச், 50-இன்ச், 55-இன்ச், 65-இன்ச் 4கே கியூஎல்இடி டிவிகள் கூகுள் டிவி (Google TV) இயங்குதளத்தைக் கொண்டுள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவிகளை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் லோ லேட்டன்சி காஸ்டிங், ஓகே கூகுள், ஸ்மார்ட் ரிமோட் கண்ட்ரோல், இன்ஸ்டன்ட் பவர் ஆன் (Instant Power On) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளன ஐஃபால்கான் கியூ73 டிவிகள்.
இந்த டிவிகளுக்கு 1 வருட வாரண்ட்டி வழங்கப்படுகிறது. அதேபோல் எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், லேன் ( LAN), ஏவி இன் (AV IN), ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஐஃபால்கான் ஸ்மார்ட் டிவிகள். குறிப்பாக இந்த டிவிகளில் வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0 போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகளும் உள்ளன.

ஐஃபால்கான் கியூ73 43-இன்ச் டிவியின் விலை ரூ.26,999-ஆக உள்ளது. பின்பு இதன் 50-இன்ச் டிவி மாடலின் விலை ரூ.1,10,900, 55-இன்ச் டிவி மாடலின் விலை ரூ.1,16,990, 65-இன்ச் டிவி மாடலின் விலை ரூ.1,62,900. தற்போது இந்த ஐஃபால்கான் கியூ73 டிவிகளை பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்தியாவில் டிசிஎல் நிறுவனம் விரைவில் அசத்தலான டிவிகளை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் சியோமி, ஒன்பிளஸ், சாம்சங் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் விதமாக டிவிகளை அறிமுகம் செய்துவருகிறது. பின்பு டிசிஎல் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட் டிவிக்கும் அதிக வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








