வியக்கவைக்கும் விலையில் விற்பனைக்கு வரும் 75-இன்ச் iFFALCON ஸ்மார்ட் டிவி.!

மேலும் மவுஸ், கீபோர்ட், சேமிப்பக சாதனம்போன்ற சாதனங்கள் இந்த ஸ்மார்ட் டிவியுடன் பயன்படுத்த முடியும்.

|

டிசிஎல் நிறுவனம் தொடர்ந்து புதிய மற்றும் உயர்ந்த தொழில்நுட்பம் கொண்ட சாதனங்களை அறிமுகம் செய்வதில் அதிகளவு ஆர்வம் காட்டி வருகிறது. மேலும் இந்நிறுவனம் தற்சமயம் இந்தியாவில் புதிய ரக iFFALCON ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துவருகிறது, அதன்படி இப்போது 75-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே iFFALCON ஆண்ட்ராய்டு எல்இடி டிவி மாடலை கொண்டுவந்துள்ளது, இந்த சாதனத்தின் மாடல் எண் 72எச்2ஏ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் விலை மதிப்பு ரூ.1,64,999-ஆக உள்ளது. விலை கொஞ்சம் அதிகம் தான், இருந்தபோதிலும் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் வசதிகளைக் கொண்டுஅ வெளிவந்துள்ளது. இந்த 75-இன்ச் iFFALCON ஸ்மார்ட் டிவி மாடல்.

வியக்கவைக்கும் விலையில் விற்பனைக்கு வரும் 75-இன்ச் iFFALCON டிவி.

எல்ஜி, சாம்சங் போன்ற பல்வேறு நிறுவனங்களுக்கு போட்டியாக தான் இந்த 75-இன்ச் iFFALCON ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது டிசிஎல் நிறுவனம்.

பிக்சல் திர்மானம்:

பிக்சல் திர்மானம்:

75-இன்ச் iFFALCON ஸ்மார்ட் டிவி மாடல் பொதுவாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளதால் சிறந்த பொழுதுபோக்குகளை உருவாக்க முடியும, உதரணமாக வீடியோ கேம், ஆன்லைன் வீடியோ போன்ற பல்வேறு அம்சங்கள். பின்பு சிறந்த அனுபவத்தை பெறும் பிரீமியம் அம்சங்களுடன் வருகிறது இந்த ஸ்மார்ட்டிவி மாடல். குறிப்பாக இந்த 4கே யுஎச்டி டிவி மாடல் 3840 x 2160 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

மற்ற ஸ்மார்ட் டிவிகளில் இடம்பெறாத கலர் கமெட் தொழில்நுட்ப ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு
மிகவும் அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் சிறந்த பார்வை அனுபவத்தை எளிதாக்கும் பின்பு அனைத்து நிறங்களையும் மிகத் துல்லியமாக காட்டும் அம்சத்தை கொண்டுள்ளது.

உங்களுக்கு பிடித்த எச்டிஆர் ப்ரோ மற்றும் எச்டிஎம்ஐ, யுஎஸ்பி, போன்ற அமசங்கள் இந்த டிவியில் உள்ளது, பின்பு இணையம் வழியே ஸ்ட்ரீம் செய்தாலும் எச்டிஆர் உள்ளடக்கத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள்.

இந்த iFFALCON டிவி மாடல் பொதுவாக எம்இஎம்சி 120ஹெர்ட்ஸ் ஐ பயன்படுத்துகிறது, இது திரைப்படம், விளையாட்டு மற்றும் போன்றவற்றை மகிவும் துல்லியமாக காட்டும்.

ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம்:

ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம்:

75-இன்ச் iFFALCON ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல் பொறுத்தவரை ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் அமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ள, பின்பு தனித்துவமான ஒலி அமைப்பைக் கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனத்தின் முன்புறம் 4ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளது எனவே தியேட்டர் அனுபத்தை வழங்கும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்.

ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் பொதுவாக டால்பி டிஜிட்டல் மற்றும் டிடிஎஸ் அம்சங்களையும் வழங்குகிறது, திரைப்படம் மற்றும் விளையாட்டுக்கு தகுந்தபடி இந்த டிவி மாடல் தெளிவான ஒலி அமைப்பை கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் சான்றிதழ்

கூகுள் சான்றிதழ்

75-இன்ச் iFFALCON மாடல் கூகுள் சான்றிதழ் பெற்ற ஆண்ட்ராய்டு டிவி ஆகும். மேலும் யூடியூப், நெட்ஃபிக்ஸ் போன்ற பல்வேறு கூகுள் செயலிகளை இந்த சாதனத்தில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஆண்ட்ராய்டு
7.0 இயங்குதளம் கொண்டுள்ளதல் சமீபத்திய அனைத்து செயலிகளையும் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியில் கூகுள் குரல் கட்டளை ஆதரவு உள்ளது, எனவே நீங்கள் ஆன்லைனில் குரல் மூலம் பாடல்களை தேர்வு செய்யும் முடியும். பின்பு க்ரோம்காஸ்ட் ஆதரவும் உள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்.

இந்த 75-இன்ச் iFFALCON குரல் தேடல் அம்சம் பொறுத்தவரை ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி மற்றும் உங்கள் சொந்த பிராந்திய மொழியில் இணைய உள்ளடக்கத்தை தேடலாம். இது தவிர, ஹாட்ஸ்டார், சன் என்.டி.இ.எக்ஸ், ஜீ 5, போன்ற சில சான்றிதழ் பயன்பாடுகள் இந்த தொலைக்காட்சியுடன் இணைக்கப்படும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு ரிமோட் கண்ட்ரோலில் நெட்ஃபிக்ஸ் ஒரு பிரத்யேக பொத்தானைக் கொண்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட் டிவி சாதனம் குவாட்-கோர் சிபியு மற்றும் டூயல்-கோர் ஜிபயு ஆதரவைக் கொண்டுள்ளது, பின்பு 2.5ஜிபி ரேம்
மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது, எனவே வீடியோ கேம் மற்றும் பல்வேறு ஆப் வசதிகளை மிக எளிமையாக இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியும்.

வடிவமைப்பு:

வடிவமைப்பு:

iFFALCON ஸ்மார்ட் டிவி மாடல் சூப்பர் பெசல்ஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட் டிவியின் முன்புறம் கீழே ஹர்மன் கார்டன் ஸ்பீக்கர்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் மெட்டாலிக் ஃபிரேம் அம்சம் மற்றும் அல்டரா சிலிம் வசதி இடம்பெற்றுள்ளது, இந்த அம்சங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வெளிவந்துள்ளது என்று தான் கூறவேண்டும்.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

75-இன்ச் iFFALCON ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல் பொதுவாக 3எச்டிஎம்ஐ போர்ட், 2யுஎஸ்பி போர்ட், ஒரு கேமிங் கன்சோல், செட் டாப் பாக்ஸ் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது, மேலும் மவுஸ், கீபோர்ட், சேமிப்பக சாதனம் போன்ற சாதனங்கள் இந்த ஸ்மார்ட் டிவியுடன் பயன்படுத்த முடியும்.

பின்பு இந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி சிறந்த தியேட்டர் அனுபவம், இணையற்ற ஆடியோ வெளியீடு, அதிவேக இணைய உள்ளடக்கம் போன்ற பல்வேறு வசதிகளைக் கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

Best Mobiles in India

English summary
iFFALCON 75H2A raises the bar for Android TVs with impressive features : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X