பெர்லின் IFA கண்காட்சியில் கவர்ந்த எலக்ட்ரானிக் பொருட்கள்

By Siva
|

ஐரோப்பாவின் மிகப்பெரிய எலக்ட்ரானிக் கன்ஸ்யூமர் கண்காட்சி பெர்லின் நகரில் கடந்த 2ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

ஜியோ சவால் : ஏற்றுக்கொள்ளும் பிஎஸ்என்எல், சாதிக்குமா..?!

செப்டம்பர் 8வரை நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில் வாடிக்கையாளர்களை கவர்ந்த எலக்ட்ரானிக் மற்றும் ஸ்மார்ட்போன் வகைகள் குறித்து தற்போது பார்ப்போம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சாம்சங் கியர் 3 ஸ்மார்ட் வாட்ச்:

சாம்சங் கியர் 3 ஸ்மார்ட் வாட்ச்:

வாங்க இங்கே கிளிக் செய்யவும்

இந்த ஸ்மார்ட்வாட்ச் இரண்டு மாடல்களில் வெளிவந்துள்ளது. கிளாசிக் மற்றும் ரஹ்டு ஃப்ரொண்டியர் ஆகிய இரண்டு மாடல்களும் வாடிக்கையாளர்களின் மனதை கவரும் வகையில் உள்ளது. ரஹ்டு ஃப்ரொண்டியர் மாடல் ஜிபிஎஸ் வசதியுடன் இருப்பதால் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. இரண்டு மாடல்களும் ஐபி68 சர்டிபிகேட் பெற்றுள்ளதோடு இரண்டும் வாட்டர் ரெசிஸ்டெண்ட் வசதியை கொண்டுள்ளது. இதன் விலை சுமார் ரூ.20,000 என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோ இசட் ப்ளே, லெனொவா யோகா புக் மற்ற்ம் யோகா 910:

மோட்டோ இசட் ப்ளே, லெனொவா யோகா புக் மற்ற்ம் யோகா 910:

வாங்க இங்கே கிளிக் செய்யவும்

ஸ்மார்ட்போன்களில் புதிய வரவான மோட்டோ இசட் ப்ளேயின் பேட்டரியின் தன்மை அனைவராலும் பாராட்டப்படுகிறது. 3.5mm மனதை கவரும் ஹெட்போன் மற்றும் கேமிரா ஆகியவை இதன் ப்ளஸ்கள். லெனோவா நிறுவனத்தின் லெனொவா யோகா புக் ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் ஆகியவற்றில் இயங்கும் தன்மை உடையது. மேலும் யோகா 910 என்ற டச் ஸ்க்ரீன் லேப்டாப்பும் இந்த கண்காட்சியில் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆசஸ் ஜென் வாட்ச் 3

ஆசஸ் ஜென் வாட்ச் 3

ஆசஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள முதல் ஸ்மார்ட் வாட்ச், ஆசஸ் ஜென் வாட்ச் 3 என்பதுதான். 1.39 இன்ச் அமோல்ட் டிஸ்ப்ளே மற்றும் ஸ்னாப்டிராகன் 2100 பிராஸசர் கொண்டது. மேலும் ஒரு டேப்ளட் அறிமுகமாகியுள்ளது. ஜென்பேட் 3S 10 என்ற இந்த டேப்ளட் 9.7-இன்ச் மற்றும் 2048 x 1536 டிஸ்ப்ளே கொண்டது. மெடியாடெக் 8176 பிராஸசர், 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் கெப்பாசிட்டி கொண்டது. மேலும் பிங்கர்பிரிண்ட் சென்சார் வசதியும் இதில் உண்டு.

இதுதவிர ஜென்புக் 3, டிரான்ஸ்பார்கர் 3 Pro, டிரான்ஸ்பார்மர் 3, மற்றும் ROG G701VI நோக்புக்ஸ் ஆகியவை இந்த கண்காட்சியில் அறிமுகமாகியுள்ளது.

ஏசர் லிக்யூட் Z6, Z6 ப்ளஸ், குரோம்புக்ஸ்:

ஏசர் லிக்யூட் Z6, Z6 ப்ளஸ், குரோம்புக்ஸ்:

இந்த கண்காட்சியில் ஏசர் நிறுவனம் ஏசர் லிக்யூட் Z6, Z6 ப்ளஸ் என்ற இரண்டுவித ஆண்ட்ராய்டு சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் உலகின் முதல் வளைந்த ஸ்க்ரீன் லேப்டாப், 13 இன்ச் அளவுள்ள குரோம் புக், ஆகியவை இந்த கண்காட்சியில் கிடைக்க பெற்ற புதிய வரவுகள்

எச்.டி.சியின் ஒனெ A9 தயாரிப்புகள்:

எச்.டி.சியின் ஒனெ A9 தயாரிப்புகள்:

எலக்ட்ரானிக் நிறுவனங்களில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான எச்.டி.சியின் ஒனெ A9 இந்த கண்காட்சியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 5-inch HD 720p டிஸ்ப்ளே மற்றும் குவாட்கோர் மெடியாடெக் Helio P10 பிராஸசர் கொண்ட இந்த சாதனத்தில் 2 GB மற்றும் 3 GB of ரேம் உள்ளது. இதன் இண்டர்னல் ஸ்டோரேஜ் 16 GB அல்லது 32 GB அளவில் உள்ளது. 2,300 mAh திறன் கொண்ட பேட்டரியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
At the IFA 2016 day 1 event, Samsung announced the Gear S3, Asus unveiled ZenWatch 3, ZenPad 3S 10, and many laptops and Lenovo announced the Moto Z Play, Lenovo Yoga Book, and Yoga 910 covertible. Also, HTC launched One A9s, and Acer launched many devices.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X