புதிய சோனி ப்ராவியா டிவி, வயர்லெஸ் ஹெட்போன்கள் மற்றும் கேமராக்கள் அறிமுகம்.!

பெர்லின் இல் நடைபெற்ற ஐ.எப்.ஏ. 2018 வர்த்தக நிகழ்ச்சியில் சோனி நிறுவனம் தனது சமீபத்திய தயாரிப்புகளை நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியது.

By Sharath
|

பெர்லின் இல் நடைபெற்ற ஐ.எப்.ஏ. 2018 வர்த்தக நிகழ்ச்சியில் சோனி நிறுவனம் தனது சமீபத்திய தயாரிப்புகளை நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியது.

ஜப்பானிய எலக்ட்ரானிக் நிறுவனமான சோனி தன் புதிய பிராவிய மாஸ்டர் 4K டிவி, WH-1000XM3 வயர்லெஸ் ஹெட்போன், WF-SP900 ஸ்போர்ட் ஹெட்போன், புதிய சைபர்ஷாட் கேமிரா மற்றும் பேஷன் துணை கிட்களை ஐ.எப்.ஏ. 2018 நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தது.

பிராவிய மாஸ்டர் டிவி

பிராவிய மாஸ்டர் டிவி

புதிய பிராவிய மாஸ்டர் டிவி வரிசையில் A9F சீரிஸ் மற்றும் Z9F சீரிஸ் ஆகிய மாடல் 4K டிவிகளை, தயாரிப்பு பட்டியலில் இனைத்துள்ளதாகச் சோனி அறிவித்தது. இந்த புதிய A9F சீரிஸ் மற்றும் Z9F சீரிஸ் 4k டிவிகள் முன்பதிவுக்குத் தயாராக உள்ளது என்று சோனி நிறுவனம் நிகழ்ச்சியில் தெரிவித்தது.

இந்த 55இன்ச் திரை கொண்ட புதிய A9F சீரிஸ் மற்றும் Z9F சீரிஸ் டிவிகளின் விலை 4,500 டாலர் இன்றி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி கிட்டத்தட்ட ரூ .3,20,000 என்ற விலைக்கு முன்பதில் கிடைக்கப்பெறுகிறது.

இரண்டு டிவிக்கும் இடையே இருக்கும் வித்தியாசமானது, A9F டிவி 4K எச்டிஆர் ஓஎல்இடி பேனல்லுடன் அதிக மாறுபாட்டு விகிதத்தில் வருகின்றது, அதே போல் Z9F டிவி 4K எல்இடி பேனலை மட்டும் கொண்டுள்ளது இது பெரிய 75 இன்ச் அளவிலும் கிடைக்கிறது.

சோனி வயர்லெஸ் ஹெட்போன்:

சோனி வயர்லெஸ் ஹெட்போன்:

சோனியின் சமீபத்திய நாய்ஸ் கேன்சலிங் WH-1000XM3 வயர்லெஸ் ஹெட்போன்களில் எச்டி நாய்ஸ் கேன்சலிங் ப்ராஸஸ்ஸர் QN1 பயன்படுத்தப்பட்டுள்ளது. எச்டி நாய்ஸ் கேன்சலிங் ப்ராஸஸ்ஸர் QN1 செயலி விமானத்தில் குறைந்த மற்றும் அதிக சத்தங்களை தடுத்து பயனர்களுக்கு அட்டகாசமான அனுபவத்தை வழங்குகிறது.

பாஸ்ட் சார்ஜ் செய்வதற்கு ஒரு யூ.எஸ்.பி - சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தல் போதும் தொடர்ந்து 5 மணி நேரம் வரை பின்னணி சேவை வழங்குகிறது. சோனி WH-1000XM3 வயர்லெஸ் ஹெட்போன் வெறும் 350 டாலர்க்கு அனைத்துச் சோனி விற்பனை மையங்களிலும் கிடைக்கிறது. இந்திய மதிப்பின் படி கிட்டத்தட்ட ரூ.25,000 க்கு சோனி வயர்லெஸ் ஹெட்போன் வாங்கலாம்.

சோனி ஸ்போர்ட் ஹெட்போன்:

சோனி ஸ்போர்ட் ஹெட்போன்:

ஆப்பிள் இன் ஏர்போட்ஸ்-க்கு போட்டியாக சோனி ஸ்போர்ட் ஹெட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது, சோனி WF-SP900 ஸ்போர்ட் ஹெட்போன் வாட்டர் ப்ரூப் மற்றும் டஸ்ட் ப்ரூப் உடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "உண்மையான வயர்லெஸ்" ஹெட்போன் ஆகும். உள் சேமிப்பு வசதி மற்றும் ப்ளூடூத் வசதி என சோனி WF-SP900 ஸ்போர்ட் ஹெட்போன் நவம்பர் மாதம் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை சுமார் ரூ.23,000ல் இருந்து துவங்கும் என்று சோனி தெரிவித்துள்ளது.

சோனி சைபர்ஷாட் DSC-HX99 மற்றும் DSC-HX95 கேமராக்கள்

சோனி சைபர்ஷாட் DSC-HX99 மற்றும் DSC-HX95 கேமராக்கள்

சைபர் சைபர்ஷாட் DSC-HX99 மற்றும் DSC-HX95 கேமிராக்கள் ஜூம் தொழில்நுட்பத்துடன் மிகச் சிறிய உருவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு கேமராக்களும் 30x 24-720mm f / 3.5-6 சமமான ஜூம் மற்றும் 1.5 இன்ச் அளவு 1 / 2.3 அங்குல உணர்கருவிகள் மூலம் ஜூம்தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இரண்டு காமிராக்கள் 10 FPS பர்ஸ்ட் கேப்ச்சர், 4K, 30fps வீடியோ, ஐ போகஸ், ரா படப்பிடிப்பு மற்றும் ஆப்டிகல் பட நிலைப்படுத்தல் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. சோனி சைபர்ஷாட் HX99 மற்றும் HX95 க்கான விலை
ரூ.46,000 இல் இருந்து துவங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
IFA 2018: Sony announces new Bravia TVs, wireless headphones, cameras : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X