முன்னெச்சரிக்கை : இதுதான் உங்கள் பாஸ்வேர்ட் என்றால் உடனே மாற்றி விடவும்..!

கீழே தொகுக்கப்பட்டுள்ள பாஸ்வேர்ட்களில் ஏதேனும் உங்கள் பாஸ்வேர்ட் உடன் ஒற்றுப்போனால் உடனே அதை மாற்றி விடவும், இல்லையேல் உங்கள் அக்கவுண்ட் எப்போது வேண்டுமானாலும் ஹாக் செய்யப்படலாம்..!

|

நமது மொபைல்போன்கள் தொடங்கி இமெயில், பேஸ்புக், ட்விட்டர், வங்கி அக்கவுன்ட் வரையிலாக எல்லாமே 'பாஸ்வேர்ட்' என்ற ஒரு பாதுகாப்பு வளையத்திற்குள் தான் இயங்குகிறது. அந்த பாதுகாப்பனது நமக்கு நாமே வழங்கி கொள்ளும் பாதுகாப்பு என்பதை உணர்ந்து தெளிவாக செயல்பட்டால் எந்த விதமான சிக்கலும் இல்லை.!

மீறி, பாஸ்வேர்ட்தனில் உங்கள் சோம்பேறித்தனத்தையும், முட்டாள்த்தனத்தையும் காட்டினால் 'வம்பை விலை கொடுத்து வாங்குகிறீர்கள்' என்று தான் அர்த்தம். இதற்கு சமீபத்தில், பேஸ்புக் சிஇஒ-வான மார்க் சூக்கர்பெர்க்கின் ட்விட்டர் மற்றும் பின்இன்ட்ரஸ்ட் அக்கவுன்ட்களின் பாஸ்வேர்ட்கள் ஹாக்கர்களால் கண்டுபிடிக்கப்பட்டதே சாலச்சிறந்த சைபர்-க்ரைம் எடுத்துக்காட்டாகும். உங்களுக்கு அது நடக்க வேண்டாம்..!

பாஸ்வேர்ட் #01

பாஸ்வேர்ட் #01

123456 (2014-ஆம் ஆண்டில் இருந்து இதை நீங்கள் மாற்றவே இல்லை என்றால் விரைவில் மாற்றி விடவும் )

பாஸ்வேர்ட் #02

பாஸ்வேர்ட் #02

PASSWORD (எப்போதுமே இந்த பாஸ்வேர்ட்தனை நீங்கள் மாற்றியதே இல்லை எனில் முதல் வேலையாக மாற்றி அமைக்கவும்)

பாஸ்வேர்ட் #03

பாஸ்வேர்ட் #03

12345678 (இதுபோன்ற மிகவும் எளிமையாக நினைவில் வைத்துக் கொள்ள நினைத்து ஏற்படுத்தப்படும் எண் கணித வடிவங்கள் மிக எளிமையாக பிறரால் கண்டுபிடிக்கப்படும்)

பாஸ்வேர்ட் #04

பாஸ்வேர்ட் #04

qwerty (பெரும்பாலான கம்ப்யூட்டர் மற்றும் லாப்டாப்களின் பாஸ்வேர்ட் இதுவாகத்தான் இருக்கும் )

பாஸ்வேர்ட் #05

பாஸ்வேர்ட் #05

12345 (மேலுமொரு எளிமையான எண் வடிவ பாஸ்வேர்ட்)

பாஸ்வேர்ட் #06

பாஸ்வேர்ட் #06

footbaal (சிலர் தங்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டின் பெயரை பாஸ்வேர்ட் ஆக வைக்கும் பழக்கம் கொண்டுள்ளனர். உங்கள் பொழுதுபோக்கு என்னவென்று தெரிந்துவிட்டாலே உங்கள் அக்கவுண்ட் எளிமையாக ஹாக் செய்யப்படும்)

பாஸ்வேர்ட் #07

பாஸ்வேர்ட் #07

123456789 (சிலர் பாஸ்வேர்ட் பலமாக இருக்க வேண்டும் என்று நினைத்து 9 எண்களை வழங்குவார்கள். ஆனால், அவர்களின் பாஸ்வேர்ட் எவ்வளவு பலவீனமாக இருக்கிறது என்பதை ஹாக் செய்யப்பட்ட பின்பே அறிவர்)

பாதுகாப்பு உறுதி :

பாதுகாப்பு உறுதி :

உங்கள் அக்கவுண்ட்களும், அதன் பாஸ்வேர்ட்களும் தெளிவானதாகவும் பலமானதாகவும் இருக்கிறதா..? என்ற கேள்வியை அவ்வபோது உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், உங்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்..!

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

சூடாகும் லாப்டாப்பை 'காப்பர்' நாணயங்கள் பயன்படுத்தி 'கூல்' ஆக்கலாம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
If your password is one of these, change it. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X