யாரு சாமி அவன்.. வெறும் ரூ.8,499 போதும்.. 200 இன்ச் LED புரொஜெக்டர்.. 3750 லுமென்ஸ்.. எந்த மாடல்?
ரூ.10,000 பட்ஜெட்டுக்குள் ஹோம் தியேட்டர் அனுபவத்தை கொடுக்கும் புரொஜெக்டர் வேண்டுமானால், 200 இன்ச் புரொஜெக்சனுடன் இந்திய மார்கெட்டில் அறிமுகமாகி இருக்கும் ஐபால் லுமோரா 40 ஸ்மார்ட் புரொஜெக்டர் (iBall Lumora 40 Smart Projector) மாடலை கண்ணை மூடிக்கொண்டு வாங்கி கொள்ளலாம்.
இந்தியாவில் ஐபால் நிறுவனத்தின் லுமோரா 40, லுமோரா 50 மற்றும் லுமோரா 60 ஆகிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் புரொஜெக்டர் மாடல்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் ரூ.10,000 பட்ஜெட்டுக்குள் கிடைக்கும் லுமோரா 40 மாடலானது ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்று இருக்கிறது. ஏனென்றால், 200 இன்ச் புரொஜெக்சன் கிடைக்கிறது.

இதுபோக 3750 லுமென்ஸ் கொண்ட மாடலாக இருக்கிறது. ஆட்டோ போகஸ், ஆட்டோ கீஸ்டோன் போன்ற பீச்சர்களும் வருவதால், விற்பனையிலும் பட்டையை கிளப்ப இருக்கிறது. 30,000 மணி நேரங்களுக்கு எல்இடி லைப்ஃபான் கிடைக்கிறது. இப்போது, இந்த ஐபால் லுமோரா 40 மாடலின் முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
ஐபால் லுமோரா 40 அம்சங்கள்: (iBall Lumora 40 Specifications): இந்த பட்ஜெட்டிலும் 3750 லுமென்ஸ் பிரைட்னஸ் மட்டுமல்லாமல், 720p நேட்டிவ் ரெசொலூஷன் கொடுக்கிறது. ஆகவே, எச்டி (HD) ரெசொலூஷனில் வீடியோக்களை பார்த்து கொள்ளலாம். இதுபோக 1080p ரெசொலூஷன் சப்போர்ட் இந்த ஐபால் லுமோரா 40 மாடலுக்கு உள்ளது.
ஆகவே, எச்டி மட்டுமல்லாமல், ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷனிலும் வீடியோக்களை பார்த்து கொள்ளலாம். 85 முதல் 508 செ.மீ வரையில் புரொஜெக்சனை இந்த ஐபால் லுமோரா 40 கொடுக்கிறது. ஆகவே, 200 இன்ச் வரையில் புரொஜெக்சன் செய்து கொள்ள முடியும். வீட்டில் மூவிக்கள் மற்றும் சீரிஸ்களை பார்க்கை ஏற்ற மாடலாக இருக்கிறது.
ஏனென்றால், ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) கொடுக்கும் மாடலாக இந்த ஐபால் லுமோரா 40 ஸ்மார்ட் புரொஜெக்டர் கிடைக்கிறது. 90 டிகிரியில் டில்ட் செய்யும்படியான டிசைனில் கிடைக்கிறது. ஆகவே, எளிதாக ஒரு இடத்தில் பிக்ஸ் செய்து, வீடியோக்களை பார்த்து கொள்ளலாம்.
ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 12 OS) கொடுக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி குவாட் கோர் ப்ராசஸர் (Quad Core Processor) கிடைக்கிறது. ஆகவே, ஆப் சப்போர்ட் (App Support) கிடைக்கிறது. நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video) மற்றும் யூடியூப் (YouTube) உள்ளிட்ட ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம்.
மொத்தமாக 30,00 மணி நேரங்களுக்கு லாம்ப்லைப் கொடுக்கும் மாடலாக இந்த ஐபால் லுமோரா 40 கிடைக்கிறது. கனெக்டிவிட்டியை பார்க்கையில், ப்ளூடூத் வி5.4 (Bluetooth v5.4) கிடைக்கிறது. மேலும், வை-பை (Wi-Fi) கிடைக்கிறது. ஆகவே, மிராகாஸ்ட் (Miracast) மற்றும் ஐஓஎஸ் வயர்லெஸ் காஸ்டிங் (iOS Wireless Casting) கிடைக்கிறது.
எச்டிஎம்ஐ ஏஆர்சி (HDMI ARC), யூஎஸ்பி (USB) மற்றும் ஹெட்போன் ஜாக் (Headphone Jack) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ப்ளூடூத் மட்டுமல்லாமல், ஐஆர் கன்ட்ரோல் கிடைக்கிறது. ஆகவே, ரிமோட் வழியாக இந்த ஐபால் லுமோரா 40 ஆண்ட்ராய்டு புரொஜெக்டர் மாடலை பயன்படுத்தி கொள்ளலாம். 770 கிராம் எடை வருகிறது.
இன்டிகிரேடட் ஸ்பீக்கர்கள் (Integrated Speakers) உள்ளன. இவ்வளவு பீச்சர்களை கொடுத்தும், இந்த ஐபால் லுமோரா 40 ஆண்ட்ராய்டு புரொஜெக்டர் மாடலின் விலை ரூ.8,499 ஆக மட்டுமே இருக்கிறது. இதுவும் அறிமுக விலையாக மட்டுமே இருக்கிறது. லுமோரா 50 மற்றும் லுமோரா 60 மாடல்களின் விலைகள் அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications
