Just In
- 23 hrs ago
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- 1 day ago
பட்ஜெட் விலையில் 5G போனை களமிறக்கும் Samsung: என்னென்ன அம்சங்கள்?
- 1 day ago
இந்திய அரசு போட்ட புது உத்தரவு.! செய்யவே மாட்டோம்னு சொன்ன Jio, Airtel, Vi.! என்னாச்சு தெரியுமா?
- 1 day ago
பெரிய மனுஷன்பா! Google-ல் குற்றம் கண்டுபிடித்த 2 இந்தியர்கள்.. ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த சுந்தர் பிச்சை!
Don't Miss
- Sports
"ஒரே ஒரு குறைதான்.. சரி செய்தால் நம்.1 பவுலர் ஆகலாம்".. உம்ரானுக்கு முகமது ஷமி முக்கிய அட்வைஸ்!
- News
களம் இறங்கிய காங்கிரஸ்..ஆதரவா? எதிர்த்து போட்டியா? மநீம நிர்வாகிகளுடன் இன்று கமல் இறுதி ஆலோசனை
- Automobiles
கார்களுக்கு பதிலா இந்த ஆட்டோக்களையே வாங்கிடலாம் போல... விலையோ கம்மி, வசதியோ மிக அதிகம்!
- Lifestyle
Today Rasi Palan 23 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் பண பிரச்சனை நீங்கிடும்...
- Finance
Budget 2023:பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் 5 முக்கிய அறிவிப்புகள்..!
- Movies
Bigg Boss Tamil 6: பிக் பாஸ் டைட்டில் வின்னர் அசீமுக்கு 50 லட்சத்துடன்.. சொகுசு காரும் பரிசு!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
ரூ.15,000 விலையில் 43-இன்ச் ஸ்மார்ட் டிவி வாங்க சூப்பர் சான்ஸ்: குதூகலப்படுத்தும் Flipkart ஆபர்.!
பிளிப்கார்ட் நிறுவனம் தற்போது Flipkart Big Saving Days 2022 என்ற சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனை இன்று தொடங்கி வரும் டிசம்பர் 21-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சியோமி, ரியல்மி, ஒன்பிளஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் முன்னணி நிறுவனங்களின் 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் பட்டியலை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

தாம்சன் 9ஏ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி
முன்பு ரூ.29,999-க்கு விற்பனை செய்யப்பட்ட 43-இன்ச் தாம்சன் 9ஏ சீரிஸ் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி, தற்போது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.15,999-க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது இந்த ஸ்மார்ட் டிவிக்கு 46 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால் ரூ.1500 வரை தள்ளுபடி கிடைக்கும். ARM Cortex-A53 பிராசஸர், 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், 40 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்டு 9 இயங்குதளம் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி.
கோடாக் 7எக்ஸ்ப்ரோ 43-இன்ச் அல்ட்ரடி எச்டி 4கே ஸ்மார்ட் டிவி
கோடாக் 7எக்ஸ்ப்ரோ 43-இன்ச் அல்ட்ரடி எச்டி 4கே ஸ்மார்ட் டிவி மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 41 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது முன்பு ரூ.33,999-க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட் டிவி, தற்போது ரூ.19,999-க்கு வாங்க கிடைக்கிறது. பின்பு அல்ட்ரா எச்டி 4கே ஆதரவு, 40 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், ARM Cortex A53 பிராசஸர், 2ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.
ரியல்மி 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி
பிளிப்கார்ட் தளத்தில் ரியல்மி 43-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடலுக்கு 38 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது முன்பு ரூ.35,999-க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த ரியல்மி ஸ்மர்ரட் டிவியை தற்போது ரூ.21,999-க்கு வாங்க முடியும். இதுதவிர தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கும் பயனர்களுக்கு ரூ.1500 தள்ளுபடி கிடைக்கும். 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், குவாட்-கோர் ARM Cortex-A55 பிராசஸர், 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், குரோம்காஸ்ட் ஆதரவு, கூகுள அசிஸ்டண்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி ஸ்மார்ட் டிவி.

iFFALCON 43-இன்ச் அல்ட்ரடி எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி
iFFALCON 43-இன்ச் அல்ட்ரடி எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி மாடலுக்கு தற்போது பிளிப்கார்ட் தளத்தில் 55 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது முன்பு ரூ.49,999-க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட் டிவி தற்போது ரூ.21,999-க்கு வாங்கக் கிடைக்கிறது. பின்பு அல்ட்ரா எச்டி 4கே ஆதரவு, 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், 2ஜிபி ரேம், டால்பி ஆடியோ ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.
43-இன்ச் ஒன்பிளஸ் Y1S ஸ்மார்ட் டிவி
பிளிப்கார்ட் தளத்தில் 43-இன்ச் ஒன்பிளஸ் Y1S ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடலுக்கு 21 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. முன்பு ரூ.31,999-க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி தற்போது ரூ.24,999-க்கு வாங்க கிடைக்கிறது. இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடி கிடைக்கும். Gamma Engine, 64-பிட் பவர்ஃபுல் பிராஸசர், பெசல்-லெஸ் டிசைன், ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம், குரோம்காஸ்ட் ஆதரவு 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் எனப் பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி.
43-இன்ச் எம்ஐ 5ஏ ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி
பிளிப்கார்ட் தளத்தில் சியோமி நிறுவனத்தின் எம் 5ஏ ஸ்மார்ட் டிவிக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட் டிவியை தற்போது ரூ.24,999-க்கு வாங்க முடியும். மேலும் தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடி கிடைக்கும். 1.5ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், Cortex A55 64-bit Quad Core பிராசஸர், ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் டிவி.

43-இன்ச் மோட்டோரோலா Revou 2 ஸ்மார்ட் டிவி
43-இன்ச் மோட்டோரோலா Revou 2 அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவிக்கு பிளிப்கார்ட் தளத்தில் 39 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியை தற்போது ரூ.23,749-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு, குவாட்-கோர் பிராசஸர், 2ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், டால்பி விஷன், எச்டிஆர் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா ஸ்மார்ட் டிவி
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470