கோடாக், ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகளை வாங்க ஐடியா இருக்கா? இப்போ வாங்குங்க.! அதிரடி தள்ளுபடி.!
இந்திய சந்தையில் தற்போது அதிநவீன ஸ்மார்ட் டிவிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளன. அதுவும் தற்போது பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டிக் கொண்டு அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்கின்றன. இந்நிலையில் பிளிப்கார்ட் தளத்தில் கோடாக் மற்றும் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகளுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் 40-இன்ச் கோடாக் 7எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட் டிவி மற்றும் 40-இன்ச் ஒன்பிளஸ் Y1 ஸ்மார்ட் டிவிக்கு தான் சலுகை கிடைத்துள்ளது. குறிப்பாக 40-இன்ச் கோடாக் 7எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட் டிவிக்கு 28 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த கோடாக் ஸ்மார்ட் டிவியை ரூ.14,999-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த கோடாக் ஸ்மார்ட் டிவியை வாங்கினால் கூடுதல் சலுகை கிடைக்கும்.

அதேபோல் 40-இன்ச் ஒன்பிளஸ் Y1 ஸ்மார்ட் டிவி மாடலுக்கு தற்போது 32 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடலை தற்போது ரூ.18,999-க்கு வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி ஒன்பிளஸ் டிவியை இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும்.
கோடாக் டிவி அம்சங்கள்: இந்த 40-இன்ச் கோடாக் 7எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட் டிவி ஆனது ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1920 x 1080 பிக்சல், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த கோடாக் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த 40-இன்ச் கோடாக் 7எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட் டிவி மாடல்.
குறிப்பாக 40-இன்ச் கோடாக் 7எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட் டிவி மாடலில் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. பின்பு ஏஆர்எம் கார்டெக்ஸ்-ஏ53 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல். அதேபோல் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது 40-இன்ச் கோடாக் 7எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட் டிவி.

24 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த 40-இன்ச் கோடாக் 7எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட் டிவி மாடல். எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல செயலிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும். அதேபோல் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஆப்டிகல் ஈதர்நெட், டூயல் பேண்ட் வைஃபை மற்றும் புளூடூத் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.
ஒன்பிளஸ் டிவி அம்சங்கள்: 40-இன்ச் ஒன்பிளஸ் Y1 ஸ்மார்ட் டிவி ஆனது 1920 x 1080 பிக்சல்ஸ் மற்றும் ஃபுல் எச்டி ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் 240 நிட்ஸ் ப்ரைட்னஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல். அதேபோல் இந்த ஒன்பிளஸ் Y1 ஸ்மார்ட் டிவி மாடலில் Cortex-A53 பிராசஸர் வசதி உள்ளது.

ஒன்பிளஸ் Y1 ஸ்மார்ட் டிவி மாடலில் கூகுள் அசிஸ்டண்ட் ஆதரவு மற்றும் குரோம்காஸ்ட் ஆதரவும் உள்ளது. பின்பு 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களுடன் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்.
அதேபோல் இந்த 40-இன்ச் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவியில் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல செயலிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி பெசல்-லெஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஆப்டிகல் ஈதர்நெட், டூயல் பேண்ட் வைஃபை மற்றும் புளூடூத் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல்.


Click it and Unblock the Notifications








