ஹுவாய் வாட்ச் GT 2 அறிமுகம் ஆகிறது எப்படி முன்பதிவு செய்யலாம்!

|

ஹுவாய் நிறுவனம் அதன் இரண்டாம் தலைமுறை ஸ்மார்ட்வாட்ச் மாடலான ஹுவாய் வாட்ச் GT 2 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் உங்களுக்கு வேண்டும் என்றால் முன்பதிவு செய்ய என்ன செய்யவேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

ஹுவாய் வாட்ச் GT 2 ஸ்மார்ட்வாட்ச்

ஹுவாய் வாட்ச் GT 2 ஸ்மார்ட்வாட்ச்

ஹுவாய் நிறுவனம் ஹுவாய் வாட்ச் GT 2 ஸ்மார்ட்வாட்ச் மாடலை செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஐஎஃப்சி 2019 நிகழ்ச்சியில் முதல் முறையாகக் காட்சிக்கு அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து இந்த ஹுவாய் வாட்ச் GT 2 தற்பொழுது அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படவிருக்கிறது.

எப்பொழுது அறிமுகம்?

எப்பொழுது அறிமுகம்?

டிசம்பர் 5ம் தேதி இந்த புதிய ஹுவாய் வாட்ச் GT 2 ஸ்மார்ட்வாட்ச் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று ஹுவாய் நிறுவனம் தனது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. டிசம்பர் 5ம் தேதி அறிமுகத்திற்குப் பின் ஹுவாய் வாட்ச் GT 2 ஸ்மார்ட்வாட்ச் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்குக் கிடைக்கும்.

டிசம்பர் 6 முதல் அனைத்து டிசம்பர் 6 முதல் அனைத்து "ஜியோ கட்டணமும் உயர்வு": எவ்வளவு தெரியுமா?

ஹுவாய் வாட்ச் GT 2 'நோடிஃபை மி'

ஹுவாய் வாட்ச் GT 2 'நோடிஃபை மி'

அதேபோல் ஹுவாய் வாட்ச் GT 2 ஹுவாய் வலைத்தளத்திலும் மற்றும் நிறுவனத்தின் ரீடைல் கடைகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும் என்று ஹுவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் ஹுவாய் வாட்ச் GT 2 வாட்சிற்கான 'நோடிஃபை மி(notify me)' அம்சம் இப்பொழுதே திறக்கப்பட்டுள்ளது.

முன்பதிவிற்கான ஆப்ஷன்

ஹுவாய் நிறுவனம் ஹுவாய் வாட்ச் GT 2 ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தபின் பயனர்களுக்கு முன்பதிவிற்கான ஆப்ஷன்கள் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஹுவாய் வலைத்தள பக்கத்தில் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

மர்மத்தை உடைத்த நாசா: விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு- புகைப்படம் வெளியீடுமர்மத்தை உடைத்த நாசா: விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு- புகைப்படம் வெளியீடு

ஹுவாய் வாட்ச் GT 2 ஸ்மார்ட்வாட்ச் சிறப்பம்சம்

ஹுவாய் வாட்ச் GT 2 ஸ்மார்ட்வாட்ச் சிறப்பம்சம்

 • 1.39' இன்ச் அமோல்ட் டிஸ்பிளே (46 mm வெர்ஷன்)
 • 1.2' இன்ச் அமோல்ட் டிஸ்பிளே (42 mm வெர்ஷன்)
 • கூகுள் நிறுவனத்தின் வாட்ச் OS
 • எஸ்எம்எஸ் செய்திகள், மின்னஞ்சல், காலண்டர் மற்றும் சமூக ஊடக நோட்டிபிகேஷன்
 • ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார்
 • ஏர் பிரஷர் சென்சார்
 • ஜியோமேக்னெட்டிக் சென்சார்
 • கைரோஸ்கோபிக் சென்சார்
 • ஆக்சிலோமீட்டர் சென்சார்
 • வாட்டர் மட்டும் டஸ்ட் ப்ரூஃப்
 • 2 வாரம் நீடிக்கும் 455 எம்.ஏ.எச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Huawei Watch GT2 Coming Soon Get Notified Now : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X