Home
Gadgets

பின்னி எடுக்குதே இது.. AMOLED டிஸ்பிளே.. 5 ATM ரேட்டிங்.. 21 நாட்கள் பேட்டரி.. புது HUAWEI மாடல்கள்!

இந்திய மார்கெட்டில் ஹூவாய் நிறுவனத்தின் பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களாக ஹூவாய் வாட்ச் ஜிடி 6 (HUAWEI WATCH GT 6) மற்றும் ஹூவாய் வாட்ச் ஜிடி 6 ப்ரோ (HUAWEI WATCH GT 6 Pro) ஆகியவை வெளியாகி இருக்கின்றன. இந்த மாடல்களின் பீச்சர்கள் விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஹூவாய் நிறுவனமானது, பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை தொடர்ந்து இந்தியாவில் களமிறக்கி வருகிறது. ஆப்பிள் மற்றும் சாம்சங் வாட்ச்களுக்கு நிகரான பீச்சர்கள் மற்றும் அதைவிட மலிவான விலை கொடுக்கிறது. அதேபோல டிசைனிலும் அதிக டியூரபிலிடிட்டி மற்றும் பிரீமியம் லுக் கொடுக்கிறது. இப்படி ஹூவாய் வாட்ச் ஜிடி 6 சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

பின்னி எடுக்குதே இது.. AMOLED டிஸ்பிளே.. 5 ATM ரேட்டிங்.. 21 நாட்கள்!

ஹூவாய் வாட்ச் ஜிடி 6 ப்ரோ அம்சங்கள் (HUAWEI WATCH GT 6 Pro Specifications): இந்த மாடலில் 1.47 இன்ச் (466 x 466 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 317 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. 140 எம்எம் மற்றும் 210 எம்எம் விரஸ்டு சைஸ்களில் கிடைக்கிறது. ஹார்ட் ரேட் சென்சார், ஈசிஜி போன்ற பிரீமியம் சென்சார்கள் வருகின்றன.

அதேபோல ஆக்சிலரோமீட்டர், பாரோமீட்டர், டெம்ப்ரேச்சர் சென்சார், ஆம்பியன்ட் லைட் சென்சார் மற்றும் டெப்த் சென்சார் கிடைக்கிறது. ரேட்டேடிங் கிரவுன் மற்றும் சைடு பட்டன் கிடைக்கிறது. டைட்டானியம் அலாய் கேஸ் கிடைக்கிறது. ஃப்ளோரோஎலாஸ்டோமர் மற்றும் வூவன் ஸ்டிராப்ஸ் கிடைக்கிறது. ப்ளூடூத் 6.0 (Bluetooth 6.0) மற்றும் என்எப்சி கனெக்டிவிட்டி உள்ளது.

21 நாட்கள் பேட்டரி பேக்கப் மற்றும் ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே மோடில் 7 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கிறது. 40 மணி நேரங்களுக்கு அவுட்டோர் மோட் கொடுக்கும். 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. 40 மீட்டர்கள் ஆழம் வரையில் தாக்குப்பிடிக்கும். வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. ஜிபிஎஸ் கனெக்டிவிட்டியும் இந்த மாடலுக்கு கிடைக்கிறது.

ஹூவாய் வாட்ச் ஜிடி 6 அம்சங்கள் (HUAWEI WATCH GT 6 Specifications): 46 எம்எம் மற்றும் 41 எம்எம் சைஸ்களில் கிடைக்கிறது. ஆகவே, 1.47 இன்ச் அமோலெட் டிஸ்பிளே, 317 பிபிஐ பிக்சன் டென்சிட்டி மற்றும் 1.3 இன்ச் அமோலெட் டிஸ்பிளே, 352 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. இதிலும் முந்தைய மாடலில் கிடைத்த பெரும்பாலான சென்சார்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

ஹார்ட் ரேட், கைரோஸ்கோப், பாரோமீட்டர், டெம்ப்ரேச்சர் மற்றும் ஆம்பியன்ட் லைட் உள்ளிட்ட சென்சார்கள் கிடைக்கின்றன. இதில் லெதர், வூவன் மற்றும் ஃப்ளோரோஎலாஸ்டோமர் ஸ்ட்ராப் மாடல்கள் கிடைக்கின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் (Stainless Steel) பாடி கிடைக்கிறது. என்எப்சி, ப்ளூடூத் 6.0, ஜிபிஎஸ் மற்றும் குளோனாஸ் உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன.

46 எம்எம் மாடலில் 21 நாட்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். யூசேஜ் மோடில் 12 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே மோடில் 7 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். அவுட்டோர் ஸ்போர்ட்ஸ் மோடில் 40 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். 41 எம்எம் மாடலில் 14 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். யூசேஜ் மோடில் 7 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும்.

ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே மோடில் 5 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். அவுட்டோர் ஸ்போர்ட்ஸ் மோடில் 25 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். இதிலும் 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டன்ஸ், ஐபி69 ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. ஹூவாய் வாட்ச் ஜிடி 6 மாடலின் விலை ரூ.21,999 பட்ஜெட்டிலும், ப்ரோ மாடலின் விலை ரூ.28,999 பட்ஜெட்டிலும் தொடங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HUAWEI WATCH GT 6 GT 6 Pro Smartwatches Launched in India Check Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X