மிரட்டிவிட்டாப்ல.. AMOLED டிஸ்பிளே.. 5ATM ரெசிஸ்டன்ட்.. ROUTES மேப்.. PULSE அனாலிசிஸ்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் (Flipkart) மிரளும் விதமாக அமோலெட் டிஸ்பிளே, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடி, ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார், டெம்பரேச்சர் சென்சார், ஃபீமேல் ஹெல்த் டிராக்கர், பல்ஸ் வேவ் அனாலிசிஸ், ப்ளூடூத் காலிங், 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டன்ட், ரூட்ஸ் மேப் மற்றும் ஜிபிஎஸ் கனெக்டிவிட்டி போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் ஹூவாய் வாட்ச் ஜிடி 5 (HUAWEI Watch GT 5) ஸ்மார்ட்வாட்ச் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த மாடலின் முழு பீச்சர்கள், விலை விவரங்கள் இதோ.
ஹூவாய் வாட்ச் ஜிடி 5 அம்சங்கள் (HUAWEI Watch GT 5 Specifications): இந்த ஜிடி 5 மாடலில் 2 டிஸ்பிளே வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. ஆகவே, 326 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கொண்ட 1.43 இன்ச் (466 × 466 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வேரியண்ட் மற்றும் 352 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கொண்ட 1.32 இன்ச் (466 × 466 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே வேரியண்ட் வருகிறது.

இரண்டு வேரியண்ட்களும் ரவுண்ட் டயல் டிசைன் கொண்டிருக்கிறது. ரோடேட்டிங் கிரவுண் (Rotating Crown) மற்றும் சைடு பட்டன் (Side Button) கன்ட்ரோல் கிடைக்கிறது. ரன்னிங் மற்றும் சைக்கிளிங் பிரியர்களுக்காக ஹூவாய் சன்ஃபிளவர் போசிஷனிங் சிஸ்டம் (HUAWEI Sunflower Positioning System), ரூட்ஸ் மேப் (Routes Map) மற்றும் ரூட்டிராவ் (RouteDraw) சப்போர்ட் வருகிறது.
இதுபோக 100+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes) வருகின்றன. கோல்ப் (Golf), டைவிங் (Diving) மற்றும் டிரெயில் ரன் (Trail Run) போன்ற ப்ரோ ஸ்போர்ட்ஸ் மோட்களும் (Pro Sports Modes) இருக்கின்றன. இந்த மாடலை ஆண்ட்ராய்டு 9.0 (Android 9.0) மற்றும் ஐஓஎஸ் 13.0 (iOS 13.0) அல்லது அதற்கு மேலான ஓஎஸ்களில் பயன்படுத்தலாம். ஹூவாய் ஆப் கேலரி (HUAWEI App Gallery) உள்ளது.
ஆக்சிலரோமீட்டர் சென்சார் (Accelerometer Sensor), கைரோஸ்கோப் சென்சார் (Gyroscope Sensor), மேக்னோமீட்டர் சென்சார் (Magnetometer Sensor), ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார் (Optical Heart Rate Sensor), பாரோமீட்டர் சென்சார் (Barometer Sensor), டெம்பரேச்சர் சென்சார் (Temperature Sensor) மற்றும் ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor) போன்ற பெரும்பாலான சென்சார்கள் கிடைக்கின்றன.

ஆகவே, ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor), ஸ்லீப் டிராக்கர் (Sleep Tracker), ஃபீமேல் ஹெல்த் டிராக்கர் (Female Health Tracker), பல்ஸ் வேவ் அனாலிசிஸ் (Pulse Wave Analysis), ஈசிசி அனாலிசிஸ் (ECG Analysis) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ஹூவாய் வாட்ச் ஜிடி 5 மாடலில் 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் IP69K ஐபி ரெசிஸ்டன்ஸ் வருகிறது.
ப்ளூடூத் காலிங் சப்போர்ட் (Bluetooth Calling Support) உள்ளது. ஆகவே, இன்-பில்ட் ஸ்பீக்கர் மற்றும் இன்-பில்ட் மைக் கிடைக்கிறது. ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS), குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO) மற்றும் என்எப்சி (NFC) கனெக்டிவிட்டி வருகிறது. ஹூவாய் வாட்ச் ஜிடி 5 மாடலின் 1.43 இன்ச் வேரியண்ட்டில் ஸ்டான்ட்பை மோடில் 14 நாட்கள் பேட்டரி பேக்கப் கிடைக்கும்.
அதேபோல 9 நாட்களுக்கு ரெகுலர் மோடிலும், 5 நாட்களுக்கு ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே மோடிலும் பயன்படுத்தலாம். 1.32 இன்ச் வேரியண்ட்டில் ஸ்டான்ட்பை மோடில் 7 நாட்களும், ரெகுலர் மோடில் 5 நாட்களும், ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே மோடில் 3 நாட்களும் பேக்கப் கிடைக்கும். 1.32 இன்ச் மாடலில் பிளாக், ப்ளூ மற்றும் ஒயிட் (லெதர் ஸ்ட்ராப்) கலர்கள் கிடைக்கின்றன.
அதேபோல 1.43 இன்ச் மாடலில் பிளாக் (ஃப்ளோரோலாஸ்டோமர் ஸ்ட்ராப்), ப்ளூ (ஃபேபரிக் ஸ்ட்ராப்/சிலிகான் ஸ்ட்ராப்) மற்றும் கோல்டு (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்ட்ராப்) கலரில் கிடைக்கிறது. 1.32 இன்ச் மாடலின் விலை ரூ.15,999ஆகவும், 1.43 இன்ச் மாடலின் விலை ரூ.16,999ஆகவும் இருக்கிறது. அக்டோபர் 20ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications








