Home
Gadgets

மாப்ள வேற மாறி.. AMOLED டிஸ்பிளே.. 5ATM ரெசிஸ்டன்ட்.. 14 நாட்கள் பேக்கப்.. ஹூவாய் ட்ரூசென்ஸ்.. எந்த மாடல்?

அமோலெட் டிஸ்பிளே, 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டன்ட், 3டி கோர்ஸ் எஃபெக்ட்ஸ், ஆப்லைன் மேப், 40 மீட்டர்கள் டைவ், கிபோர்ட், 14 நாட்கள் பேட்டரி பேக்கப் போன்ற ப்ரோ-லெவல் பீச்சர்கள் மட்டுமல்லாமல் ஷார்ப் எட்ஜ்டு டிசைனில் ஹூவாய் வாட்ச் ஜிடி 5 ப்ரோ (HUAWEI WATCH GT 5 Pro) ஸ்மார்ட்வாட்ச் இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. இந்த ஹூவாய் வாட்ச் ஜிடி 5 ப்ரோவின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பிரீமியம் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹெல்த் மானிட்டரிங் பீச்சர்கள் வேண்டுமானால், இந்த ஹூவாய் வாட்ச் ஜிடி 5 ப்ரோ மாடல் பக்காவாக இருக்கும். ஏனென்றால், அவுட்டோர் ஸ்போர்ட்ஸ் பீச்சர்கள் மிரளவிடுகின்றன. நேவிகேஷன் சப்போர்ட்டுடன் டிரெயில் ரன் மோட் (Trail Run Mode), மேப் சப்போர்ட்டுடன் கோல்ப் கோர்ஸ் மோட் (Golf Course Mode) கிடைக்கிறது.

மாப்ள வேற மாறி.. AMOLED டிஸ்பிளே.. 5ATM ரெசிஸ்டன்ட்.. எந்த மாடல்?

வாட்டர் டைப் இன்டிகேஷனுடன் (Water Type Identification) டீப் டைவ் மோட் (Dive Deep Mode) வருகிறது. 40 மீட்டர்கள் ஆழம் வரையில் டைவ் செய்து கொள்ளலாம். இதுபோக வழக்கமான ரன்னிங், ஜாக்கிங், வாக்கிங், டிரக்கிங் போன்ற 100+ ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Sports Modes) கிடைக்கின்றன. ஹூவாய் ட்ரூசென்ஸ் சிஸ்டம் (HUAWEI TruSense System) இருக்கிறது.

இந்த சிஸ்டம் மூலம் ஹெல்த் டேட்டாக்கள் டிஜிட்டலாக சேமிக்கப்படும். இது சுவாசம், நரம்பு மற்றும் பாடி மோஷன்களில் அப்நார்மல் ஆக்டிவிட்டிகளை இன்டிகேஷன் செய்யக்கூடியது. இதற்காக பிரீமியம் ஹெல்த் சென்சார்களை இந்த ஹூவாய் வாட்ச் ஜிடி 5 ப்ரோ மாடல் பேக் செய்துள்ளது. இப்போது, வழக்கமான பீச்சர்களை தெரிந்து கொள்வோம்.

ஹூவாய் வாட்ச் ஜிடி 5 ப்ரோ அம்சங்கள் (HUAWEI WATCH GT 5 Pro Specifications): இந்த ஜிடி 5 ப்ரோவில் 1.43 இன்ச் (466 × 466 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 326 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. ரவுண்ட் டயல் வருகிறது. இருப்பினும், டைட்டானியம் மற்றும் செராமிக் பாடியில் ஷார்ப் எட்ஜ்டு டிசைன் கொடுக்கிறது.

ஸ்போர்ட் வெர்ஷனில் பிளாக் சிலிகான் (Black Silicone) ஸ்ட்ராப் மற்றும் டைட்டானியம் வெர்ஷனில் மெட்டாலிக் ஸ்ட்ராப் கிடைக்கிறது. ஹார்ட் ரேட், பிளட் ஆக்ஸிஜன், ஈசிஜி, வுமன் ஹெல்த், பல்ஸ் வேவ், ஸ்லீப் அனாலிசிஸ், ஸ்ட்ரெஸ் லெவல் அனாலிசிஸ் போன்ற ஒட்டுமொத்த ஹெல்த் மானிட்டர்கள் மற்றும் டிராக்கர்களை கொண்டிருக்கிறது.

ஆகவே, ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார் (Optical Heart Rate Sensor) மற்றும் ஈசிஜி சென்சார் (ECG Sensor) கிடைக்கிறது. மேலும், டெம்ப்ரேச்சர் சென்சார் (Temperature Sensor), பாரோமீட்டர் சென்சார் (Barometer Sensor), மேக்னட்டோ மீட்டர் சென்சார் (Magnetometer Sensor), கைரோஸ்கோப் சென்சார் (Gyroscope Sensor) மற்றும் டெப்த் சென்சார் (Depth Sensor) போன்றவை வருகின்றன.

இந்த ஹூவாய் வாட்ச் ஜிடி 5 ப்ரோ மாடலில் ரோட்டேட்டிங் கிரவுண் மற்றும் சைடு பட்டன் கன்ட்ரோல்கள் கிடைக்கின்றன. 5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டன்ட் மற்றும் IP69K ரேட்டிங் கிடைக்கிறது. ஆகவே, பிரீமியம் டியூரபிலிட்டி எதிர்பார்க்கலாம். பிடி 5.2 (BT 5.2 ) கனெக்டிவிட்டி வருகிறது. வாய்ஸ் கால்களுக்காக ஸ்பீக்கர் மற்றும் மைக் பேக் செய்துள்ளது.

14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கொடுக்கிறது. ஆல்வேஸ்-ஆன் மோடில் 5 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும். ஹூவாய் வாட்ச் ஜிடி 5 ப்ரோ (சிலிகான் ஸ்ட்ராப்) வேரியண்ட்டின் விலை ரூ.29,999 ஆகவும், டைட்டானியம் ஸ்ட்ராப் வேரியண்ட்டின் விலை ரூ.39,999ஆக இருக்கிறது. அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HUAWEI WATCH GT 5 Pro With 14 Day Battery AMOLED Display Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X