தலைவன் வேற ரகம்.. AMOLED டிஸ்பிளே.. 4GB மெமரி.. வயர்லெஸ் சார்ஜிங்.. ஹார்ட் ரேட் சென்சார்.. எந்த மாடல்?
ஆல்வேஸ் ஆன் அமோலெட் டிஸ்பிளே, ப்ளூடூத் காலிங், ஹார்ட் ரேட் மானிட்டர், ஸ்லீப் டிராக்கிங், டெம்பரேச்சர் சென்சார், வயர்லெஸ் சார்ஜிங் கிராடில், 14 நாட்கள் பேட்டரி பேக்கப், 32 எம்பி ரேம், 4ஜிபி மெமரி போன்ற பக்கா பிரீமியம் பீச்சர்களுடன் ஹூவாய் வாட்ச் ஜிடி 4 (HUAWEI Watch GT 4) ஸ்மார்ட்வாட்ச் இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. அதிக சென்சார்கள் மற்றும் டிராக்கர்களை கொண்ட இந்த ஹூவாய் வாட்ச் ஜிடி 4 மாடலின் விவரம் இதோ.
ஹூவாய் வாட்ச் ஜிடி 4 அம்சங்கள் (HUAWEI Watch GT 4 Specifications): இந்த மாடலில் 1.43 இன்ச் (466 × 466 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 326 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாடியில் ரோடோட்டிங் கிரவுண் (Rotating Crown) மற்றும் பவர் பட்டன் (Power Button) கொண்டிருக்கிறது.

ஆக்டாகோனல் (Octagonal) டயல் டிசைன் வருகிறது. இந்த டிஸ்பிளேவுக்கு கஸ்டமைசபிள் வாட்ச் பேஸ்கள் (Customizable Watch Faces) வருகின்றன. இன்-பில்ட் மைக்ரோபோன் (n-Built Microphone) மற்றும் ஸ்பீக்கருடன் (Speaker) ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) சப்போர்ட் வருகிறது. ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) கனெக்டிவிட்டி கொண்டுள்ளது.
இந்த ஹூவாய் வாட்ச் ஜிடி 4 மாடலில் 32 எம்பி ரேம் மற்றும் 4 ஜிபி மெமரி வருகிறது. பெரும்பாலாான சென்சார்களை பேக் செய்துள்ளது. ஆகவே, ஆக்சிலரோமீட்டர் சென்சார் (Accelerometer Sensor), கைரோஸ்கோப் சென்சார் (Gyroscope Sensor) மற்றும் மேக்னெட்டோமீட்டர் சென்சார் (Magnetometer Sensor) வருகிறது.
மேலும், ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார் (Optical Heart Rate Sensor), பாரோமீட்டர் சென்சார் (Barometer Sensor) மற்றும் டெம்பரேச்சர் சென்சார் (Temperature Sensor) வருகிறது. ரன்னிங், ஜாக்கிங், சைக்கிளிங், ஸ்விம்மிங், கிளம்பிங் போன்ற ஆக்டிவிட்டி டிராக்கர்களுடன் 100+ வொர்க்அவுட் மோட்கள் வருகின்றன.

ஹார்ட் ரேட் மானிட்டருக்காக (Heart Rate Monitor) ஹூவாய் ட்ரூசீன் 5.0 (HUAWEI TruSeen 5.0) சப்போர்ட் உள்ளது. அதேபோல ஸ்லீப் டிராக்கருக்காக (Sleep Tracker) ஹூவாய் ட்ரூஸ்லீப் 3.0 (HUAWEI TruSleep 3.0) வருகிறது. மேலும், ஸ்ட்ரெஸ் லெவல் டிராக்கிங்குக்காக (Stress Tracking) ஹூவாய் ட்ரூரிலாக்ஸ் (HUAWEI TruRelax) வருகிறது.
மேலும், ஸ்மார்ட் சைக்கிள் காலண்டர் (Smart Cycle Calendar) மற்றும் எஸ்பிஓ2 மானிட்டரிங் வருகிறது. இந்த ஹெல்த் டேட்டாக்களை ஸ்டேய் ஃபிட் ஆப் (Stay Fit App) மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு 8 ஓஎஸ் மற்றும் ஐஓஎஸ் 13 அல்லது அதற்கு மேலான ஓஎஸ்களில் இந்த ஸ்மார்ட்வாட்ச் கனெக்டிவிட்டி கொடுக்கும்.
5 ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது. 50 மீட்டர் ஆழம் வரையில் பயன்படுத்தலாம். வயர்லெஸ் சார்ஜிங் கிராடில் (Wireless Charging Cradle) சப்போர்ட் உள்ளது. சிங்கிள் சார்ஜில் 14 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும். ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே மோடில் 4 நாட்களுக்கும். யூசேஜ் மோடில் 8 நாட்களுக்கும் பேக்கப் கிடைக்கும்.
காம்போசைட் ஸ்ட்ராப் கொண்ட கிரீன் மற்றும் ஃப்ளூரோலாஸ்டோமர் ஸ்ட்ராப் கொண்ட பிளாக் ஆகிய 2 கலர்களில் கிடைக்க இருக்கிறது. பிரீமியம் பீச்சர்கள் வருவதால், ரூ.14,999ஆக விலை நிர்ணயம் இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டருக்கு வருகிறது. வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








