Home
Gadgets

Huawei Watch Fit நீண்ட டச் டிஸ்பிளேயுடன் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

ஹுவாய் வாட்ச் ஃபிட் என்று அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை ஹுவாய் நிறுவனம் தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் சாதனம் தற்பொழுது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்.

ஹுவாய்

ஹுவாய் நிறுவனத்தின் சமீபத்திய ஸ்மார்ட்வாட்ச் 1.64 இன்ச் எச்டி அமோலேட் டிஸ்ப்ளேவுடன் 280 x 456 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது டச் டிஸ்பிளேயுடன் 2.5D வளைந்த கர்வுடு கிளாஸுடன் வருகிறது, இது 326 பிபி பிக்சல் அடர்த்தி மற்றும் 70 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்துடன் வருகிறது.

ஸ்மார்ட்வாட்ச்

ஹுவாய் வாட்ச் ஃபிட் ஆறு புதிய ஆல்வேஸ்-ஆன் டிஸ்ப்ளே வாட்ச் பேஸ் தீமுடன் வருகிறது, இது வாட்ச் செயலில் இருக்கும்போது பல்வேறு தகவல்களைக் காட்டுகிறது. ஸ்மார்ட்வாட்ச் 12 வகையான அனிமேஷன் ஒர்க்அவுட் பயிற்சிகளுடன் வருகிறது, இதில் உடற்பயிற்சி, முழு உடல் ஸ்ட்ரெச், ஏபி ரிப்பர் மற்றும் 44 நிலையான இயக்கம் ஆர்ப்பாட்டங்கள் அடங்கும்.

11 ஸ்போர்ட்ஸ் மோடு

சைக்கிள் ஓட்டுதல் மற்றும் 11 ஸ்போர்ட்ஸ் மோடு உட்பட 96 ஒர்க்அவுட் மோடு உடன் புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹுவாய் ஸ்மார்ட்வாட்ச் ஃபிட் சாதனத்தில் ஜி.பி.எஸ் சென்சார் ஆதரவும் உள்ளது. மேலும் இது அறிவியல் பயிற்சி, விளைவு மதிப்பீடு மற்றும் பல நிகழ்நேர தகவல்களை வழங்கும் புதிய சென்சார்களுடன் AI இதய துடிப்பு வழிமுறையுடன் வருகிறது.

ஆக்ஸிஜன் மானிட்டர்

இதில் மாதவிடாய் சுழற்சி கண்காணிப்பாளர், SpO2 இரத்த ஆக்ஸிஜன் மானிட்டர், சிறந்த தூக்க கண்காணிப்பு, ஹவாய் ட்ரூஸ்லீப் 2.0 மற்றும் ட்ரூரெலாக்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. எஸ்எம்எஸ் செய்திகள், உள்வரும் அழைப்புகள், காலண்டர் நிகழ்வுகள் மற்றும் இசையை கட்டுப்படுத்துதல், புகைப்படத்தைக் கிளிக் செய்தல், அவற்றின் தொலைபேசியைக் கண்டறிதல் மற்றும் பலவற்றை வாட்ச் ஃபிட் மூலம் பிற அம்சங்கள் இதில் உள்ளது.

பேட்டரி

பேட்டரியைப் பொறுத்தவரை, இது 10 நாட்கள் பேட்டரி ஆயுள் மற்றும் ஜிபிஎஸ் பயன்முறையின் கீழ் 12 மணிநேர பேட்டரி மூலம் வருகிறது. இது ஆப்டிகல் இதய துடிப்பு சென்சார், கொள்ளளவு சென்சார் மற்றும் சுற்றுப்புற ஒளி சென்சார் ஆகியவற்றுடன் 6-ஆக்சிஸ் IMU சென்சாருடன் வருகிறது. இதன் விலை இந்திய மதிப்பின் படி தோராயமாக ரூ.7,943 ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Huawei Watch Fit with stretched display announced : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X