பின்றானே இவன்.. AMOLED டிஸ்பிளே.. 10 நாட்கள் பேட்டரி.. மெட்டல் பாடி.. டைட்டானியம் அலாய்.. எந்த மாடல்?
ப்ரோ லெவல் அவுட்டோர் ஸ்போர்ட்ஸ் பிரியர்களுக்கு ஏற்றபடியான குவாலிட்டி மற்றும் பீச்சர்களுடன் ஹூவாய் வாட்ச் ஃபிட் 4 ப்ரோ (HUAWEI Watch Fit 4 Pro) இந்திய மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. அலுமினியம் பாடி, டைட்டானியம் அலாய், சப்பயர் கிளாஸ், 10 நாட்கள் பேட்டரி போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. ஹெல்ட் மானிட்டரி, ஹெல்த் டிராக்கர்கள் மற்றும் யூலிடிட்டி பீச்சர்களிலும் பிரீமியம் காட்டி இருக்கிறது. இந்த ஹூவாய் வாட்ச் ஃபிட் 4 ப்ரோ மாடலின் விவரங்களை இப்போது பார்க்கலாம்.
இந்தியாவில் ஹூவாய் வாட்ச் ஃபிட் 4 மற்றும் ஹூவாய் வாட்ச் ஃபிட் 4 ப்ரோ ஆகிய 2 மாடல்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் ப்ரோ மாடலானது, அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களை கொடுப்பதால், ஒட்டுமொத்த ஸ்மார்ட்வாட்ச் பிரியர்களையும் தட்டி தூக்கி இருக்கிறது. நைலான் மற்றும் ஃப்ளோரோஎலாஸ்டோமர் ஸ்ட்ராப் வேரியண்ட்களில் கிடைக்கிறது.

ஹூவாய் வாட்ச் ஃபிட் 4 ப்ரோ அம்சங்கள் (HUAWEI Watch Fit 4 Pro Specifications): இந்த ப்ரோ மாடலில் 1.82 (480 x 408 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. சப்பயர் கிளாஸ் (Sapphire Glass) மற்றும் அலுமினியம் பாடி கிடைக்கிறது. டைட்டானியம் அலாய் (Titanium Alloy) மற்றும் ரேட்டேஷனல் கிரவுண்ட் கிடைக்கிறது. கன்ட்ரோல் பட்டன் உள்ளது.
இந்த பிரீமியம் டிஸ்பிளேவில் 347 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. அவுட்டோர் மாடலாக இருப்பதால் அதிகப்படியான பிரைட்னஸ் கிடைக்கிறது. இந்த பாடி மட்டுமல்லாமல், வாட்டர் ரெப்லென்ட் (Water Repellent) சப்போர்ட் கொண்ட நைலான் ஸ்ட்ராப் கிடைக்கிறது. ஃப்ளோரோஎலாஸ்டோமர் ஸ்ட்ராப் (Fluoroelastomer Strap) கிடைக்கிறது.
இதில் நைலான் ஸ்ட்ராப் வேரியண்ட்டில் கிரீன் (Green) மற்றும் ஃப்ளோரோஎலாஸ்டோமர் ஸ்ட்ராப் வேரியண்ட்டில் ப்ளூ மற்றும் பிளாக் கலர்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. இது ஸ்விம்மிங் மற்றும் வாட்டர் ஸ்போர்ட்ஸ் பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக இருப்பதால், 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. அதேபோல IP6X டஸ்ட் ப்ரூப் கொடுக்கிறது.

டைவ் பிரியர்களுக்கு 40 மீட்டர்கள் ஆழம் வரையில் ரெசிஸ்டன்ட் கொடுக்கும். இதற்காக ஈஎன் 13319 (EN 13319) சர்டிபிகேஷன் பெற்றுள்ளது. ஆகவே, டெப்த் செக் (Depth Check), மூச்சுத்திணறல் டெஸ்ட் (Apnea Test), அண்டர் வாட்டர் சேப்டி வார்னிங் (Underwater Safety Warning) போன்ற சப்போர்ட் கொடுக்கிறது. ட்ரெயில் ரன் (Trail Run), டிரக்கிங் (Trekking) பிரியர்களுக்கும் பீச்சர்கள் இருக்கிறது.
ஆகவே, பாரோமீட்டர் மூலம் வெதர் டேட்டா மற்றும் நேவிகேஷனுக்காக போசிஷனிங் சிஸ்டம் பெற்று கொள்ளலாம். மேலும், வழக்கமான மேப்ஸ் மற்றும் டிராக் போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், மவுன்டெய்னிரிங், ஹைக்கிங் மற்றும் டிரையத்லான் போன்ற பிரீமியம் ஸ்போர்ட்ஸ் மோட்கள் கிடைக்கின்றன. ஹூவாய் ட்ரூசென்ஸ் (HUAWEI TruSense) ஹெல்த் சப்போர்ட் உள்ளது.
ஆகவே, ஈசிஜி (ECG) மற்றும் பிபிஜி (PPG) சென்சார்கள் சப்போர்ட் உள்ளது. ஹார்ட் ரேட் மானிட்டர், எஸ்பிஓ2 மானிட்டர், மென்சுரல் சைக்கிங் டிராக்கிங் போன்ற பெரும்பாலான ஹெல்த் பீச்சர்கள் கிடைக்கின்றன. ஹெல்த் அலெர்ட் சப்போர்ட் உள்ளது. இந்த மாடலில் 10 நாட்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். மேக்னட்டிக் சார்ஜிங் கிடைக்கிறது.
ஸ்மார்ட் நோட்டிபிகேஷன், வாய்ஸ் காலிங், கேமரா கன்ட்ரோல் போன்ற யூடிலிட்டி பீச்சர்களும் இருக்கின்றன. இவ்வளவு பிரீமியம் பீச்சர்களை கொடுப்பதால், ரூ.20,999ஆக விலை இருக்கிறது. அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் கிடைக்க இருக்கிறது. அதேபோல ஹூவாய் வாட்ச் ஃபிட் 4 மாடலின் விலை ரூ.12,999ஆக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








