Home
Gadgets

பின்றானே இவன்.. AMOLED டிஸ்பிளே.. 5ATM ரேட்டிங்.. 10 நாட்கள் பேட்டரி.. ஸ்லிம் டிசைன்.. எந்த ஸ்மார்ட்வாட்ச்?

அல்ட்ரா ஸ்லிம் டிசைனில் அமோலெட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், 5ATM ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட், பில்ட்-இன் ஜிபிஎஸ் சிஸ்டம், கலோரி டிராக்கர், விட்டல் சைன் டிராக்கர், ஸ்லீப் மானிட்டர், ஹார்ட் ரேட் மானிட்டர், 10 நாட்கள் பேட்டரி போன்ற பீச்சர்களுடன் ஹூவாய் வாட்ச் ஃபிட் 3 (HUAWEI Watch Fit 3) ஸ்மார்ட்வாட்ச் இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. பிரீமியம் மாடலாக அறிமுகமான இந்த ஹூவாய் வாட்ச் ஃபிட் 3 ஸ்மார்ட்வாச்சின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஹூவாய் வாட்ச் ஃபிட் 3 அம்சங்கள் (HUAWEI Watch Fit 3 Specifications): இந்த ஹூவாய் மாடலில் 1.82 இன்ச் (480 x 408 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே வருகிறது. இந்த ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளேவில் (Always-On Display) 1500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 347 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. அல்ட்ரா-நேரோவ் பெசல்கள் (Ultra-narrow bezels) கிடைக்கின்றன.

பின்றானே இவன்.. AMOLED டிஸ்பிளே.. 5ATM ரேட்டிங்.. 10 நாட்கள் பேட்டரி!

இதுபோக 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஆட்டோ-அட்ஜெஸ்டபிள் பிரைட்னஸ் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுடன் வெறும் 9.9 எம்எம் தடிமன் மற்றும் 26 கிராம் எடை மட்டுமே வருகிறது. இருப்பினும், அலுமினியம் அலாய் பாடி (Aluminium Alloy Body) கிடைக்கிறது. கன்ட்ரோல்களுக்கு ஃபங்ஷன் பட்டன் மற்றும் கிரவுண் கிடைக்கிறது.

இந்த ஃபங்ஷன் பட்டன் மூலம் வாய்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் ஆப் ஓப்பன் ஆகியவற்றுக்கு பயன்படுத்தலாம். அதேபோல கிரவுணை ரோட்டேட் செய்து வால்யூம், ஆப் ஸ்க்ரோல் செய்து கொள்ளலாம். இந்த ஹூவாய் வாட்ச் ஃபிட் 3 மாடலில் மேக்னட்டிக் சார்ஜிங் (Magnetic Charging) பின் சப்போர்ட் கொண்ட பேட்டரி சிஸ்டம் கிடைக்கிறது.

அதிகபட்சம் 10 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) கனெக்டிவிட்டியுடன் ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) சப்போர்ட் வருவதால், ப்ளூடூத் காலிங் மோடில் பேட்டரி பேக்கப் குறைவாக கிடைக்கும். ஆகவே, ப்ளூடூத் காலிங் செய்யும்போது, 7 நாட்களுக்கு கிடைக்கும். இதில் ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே மோடும் அடங்கும்.

இந்த ஹூவாய் வாட்ச் ஃபிட் 3 மாடலில் 400mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. நோட்டிபிகேஷன்கள் மற்றும் அப்டேட்களுக்கு ஹூவாய் அசிஸ்டன்ட் (HUAWEI Assistant) கிடைக்கிறது. ஹெல்த் மானிட்டர்கள் மற்றும் ஹெல்த் டிராக்கர்களுக்காக ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார் (Optical Heart Rate Sensor), ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor) உள்ளது.

மேலும், ஆக்சிலரோமீட்டர் சென்சார், கைரோஸ்கோப் சென்சார் மற்றும் மேக்னட்டோமீட்டர் சென்சார் கிடைக்கிறது. இதன் மூலம் ஸ்லீப் மானிட்டர் (Sleep Monitor), விட்டல் சைன் டிராக்கர் (Vital Sign Tracker), பல்ஸ் வேவ் அரித்மியா அனாலிசிஸ் (Pulse Wave Arrhythmia Analysis), வுமன் ஹெல்த் டிராக்கர் (Women Health Tracker) போன்றவை கிடைக்கின்றன.

ஹார்ட் ரேட், பிளட் ஆக்ஸிஜன் லெவல் போன்ற முக்கிய மானிட்டர்களும் இருக்கின்றன. லெதர் ஸ்ட்ராப் கொண்ட ஒயிட் கலர் கிடைக்கிறது. கிரே, ஒயிட், கிரீன், பிங்க் மற்றும் பிளாக் கலர்களும் கிடைக்கின்றன. ஒயிட் லெதர் மாடலுக்கு கோல்டு வாட்ச் கேஸ் உள்ளது. அதேபோல கிரே, கிரீன் மற்றும் ஒயிட் கலர் கொண்ட ஃப்ளோரோஎலாஸ்டோமர் மாடலுக்கு சில்வர் கேஸ் கிடைக்கிறது.

பிங்க் கலர் ஃப்ளோரோஎலாஸ்டோமர் மாடலுக்கு பிங்க் கேஸ் மற்றும் பிளாக் ஃப்ளோரோஎலாஸ்டோமர் மாடலுக்கு டர்னிஷ் கேஸ் கிடைக்கிறது. இதுபோக கிரே கலரில் லைலான் ஸ்ட்ராப் கிடைக்கிறது. இந்த மாடலின் விலை ரூ.14,999ஆக இருக்கிறது. அறிமுக சலுகையில் ரூ.10,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஹூவாய் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
HUAWEI Watch Fit 3 With AMOLED Display Launched India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X