Home
Gadgets

இனி Apple Watch-கள் அம்போ.. அதே டிசைன்.. ஆனா பாதிக்கு பாதி விலை.. மொத்த இந்தியாவும் வாங்குமே.. எந்த மாடல்?

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் தான் காஸ்டலியாக இருக்கிறது (லேட்டஸ்ட் ஆக வந்த ஐபோன் 16இ உட்பட).. சரி ஆப்பிள் வாட்ச்சாவது வாங்கலாமென்று நினைத்தால்.. நீங்கள் வாங்குவது ஆப்பிள் வாட்ச் ஆக இருக்காது; பல்பு தான் வாங்குவீர்கள். ஏனென்றால் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச்களும் "ரொம்ப" காஸ்ட்லீ தான்.

ஆப்பிளின் லேட்டஸ்ட் வாட்ச் 10 சீரிஸ் ஸ்மார்ட் வாட்ச்களின் விலை ரூ.46,900 முதல் தொடங்கி ரூ.79,900வரை செல்கிறது. ஆப்பிளின் ப்ரீமியம் ஸ்மார்ட் வாட்ச் ஆன வாட்ச் அல்ட்ரா 2 மாடல் ரூ.89,900 க்கு வாங்க கிடைக்கிறது. இருப்பதிலேயே 'சீப்' ஆன ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் ஆன வாட்ச் எஸ்இ மாடலின் விலை ரூ.24,900 முதல் தொடங்கி ரூ.27,900 வரை செல்கிறது.

இனி Apple Watch-கள் அம்போ.. அதே டிசைன்.. ஆனா பாதிக்கு பாதி விலை!

இந்த இடத்தில் தான் ஹூவாய் வாட்ச் பிட் 3 (Huawei Watch Fit 3) ஸ்மார்ட் வாட்ச் உள்ளே வருகிறது. கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட் வாட்ச் தற்போது இந்திய சந்தையில், அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

ஹூவாய் வாட்ச் பிட் 2 (Huawei Watch Fit 2) மாடலின் அப்கிரேடட் வெர்ஷன் ஆன ஹூவாய் வாட்ச் பிட் 3 மாடலின் சரியான வெளியீட்டு தேதி இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் இது ஏற்கனவே மற்ற சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டதால், இது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இந்திய சந்தையில் எந்த பட்ஜெட்டின் கீழ் அறிமுகமாகும் என்கிற விவரங்களில் எந்த குழப்பமும் இல்லை!

ஹூவாய் வாட்ச் பிட் 3 என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?
- 480 x 408 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 347பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- ஆல்வேஸ்-ஆன்-டிஸ்ப்ளே (AOD) அம்சம்
- 1500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 1.82-இன்ச் AMOLED டிஸ்பிளே

- ஆம்பியண்ட் லைட் சென்சார்
- நைன்-ஆக்சிஸ் IMU சென்சார்
- ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார்
- பல வகையான வாட்ச் பேஸ்கள்
- 100 க்கும் மேற்பட்ட வொர்க்அவுட் மோட்கள்
- ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டி
- ப்ளூடூத் காலிங் ஆதரவு

- 5ஏடிஎம் நீர் எதிர்ப்பு திறன்
- ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய இரண்டிற்கும் இணக்கமானது
- 400mAh பேட்டரி
- ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 நாட்கள் வரை பேட்டரி லைஃப்
- பிளாக், க்ரீன், க்ரே, பிங்க், ஒயிட் மற்றும் லெதர் ஸ்ட்ராப் ஒயிட் ஆகிய 6 கலர் ஆப்ஷன்கள்

ஹூவாய் வாட்ச் பிட் 3 என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படும்? அடுத்த வராம இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் ஹூவாய் வாட்ச் பிட் 3 மாடல் சுமார் ரூ.20,000 க்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது பெரும்பாலான ஆப்பிள் வாட்ச்களை விட மிகவும் மலிவான விலை நிர்ணயத்தை பெறும்.

Take a Poll

மிகவும் சமீபத்தில் தான் ஹூவாய் நிறுவனம் அதன் ஹூவாய் புரா எக்ஸ் (Huawei Pura X) என்கிற புதிய போல்டபிள் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. கிளாம்ஷெல் போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன இது 2 டிஸ்பிளேக்கள், 4 கேமராக்கள், 66W வயர்டு சார்ஜிங் ஆதரவு மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு போன்ற பல முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

ஹவாய் ப்யூரா எக்ஸ் போல்டபிள் ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- 1320 x 2120 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 16:10 ரேஷியோ உடனான 6.3-இன்ச் இன்னர் OLED LTPO 2.0 டிஸ்பிளே
- 980 × 980 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடடன 3.5-இன்ச் LTPO 2.0 அவுட்டர் டிஸ்பிளே
- சிப்செட் விவரங்கள் வெளியிடப்படவில்லை
- ஹார்மோனி ஓஎஸ் 5.0.1

- ட்ரிபிள் அவுட்வார்ட் பேஸிங் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்)
- 40 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் மேக்ரோ கேமரா
- OIS உடன் 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- இன்னர் ஸ்க்ரீனில் 10.7 மெகாபிக்சல் சென்சார்

- நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IPX8 ரேட்டிங்
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- 66W வயர்டு சார்ஜிங் ஆதரவு
- 40W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
- 4,720mAh பேட்டரி

ஹவாய் ப்யூரா எக்ஸ் போல்டபிள் ஸ்மார்ட்போனின் விலை என்ன? ஹூவாய் புரா எக்ஸ் ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன், சீனாவில் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.89,000 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் சுமார் ரூ.95,000 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Huawei Watch Fit 3 All Set to Launch in India Next Week Check Out Price Specifications Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X