சகலமும் இதுல இருக்கு.. BP மானிட்டர்.. SpO2 மானிட்டர்.. GPS கனெக்டிவிட்டி. IP68 ரேட்டிங்.. எந்த மாடல்?
ஹூவாய் நிறுவனத்தில் பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச் மாடலான ஹூவாய் வாட்ச் டி2 (HUAWEI Watch D2) இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. பிளட் பிரசர் மானிட்டரிங், எஸ்பிஓ2 மானிட்டரிங், ஹார்ட் ரேட் மானிட்டரிங், ஸ்ட்ரெஸ் லெவல் மானிட்டரிங், ஸ்கின் டெம்ப்ரேச்சர் மானிட்டரிங் போன்ற ஒட்டுமொத்த ஹெல்த் பீச்சர்களுடன் களமிறங்கி இருக்கிறது. இதுபோக அமோலெட் டிஸ்பிளே, ஜிபிஎஸ் கனெக்டிவிட்டி, IP68 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ஸ் போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த ஹூவாய் வாட்ச் டி2 மாடலின் முழு பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இப்போதெல்லாமல், உடலில் ஏற்படும் மாற்றங்களை ரியல் டைமில் தெரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால், அவ்வளவு ஹெல்த் பீச்சர்களுடன் ஸ்மார்ட்வாட்ச்கள் களமிறங்கி வருகின்றன. இவற்றில் இருக்கும் சென்சார்கள் மூலம் ஹார்ட் ரேட், பிளட் பிரசர், ஸ்லீப், ஸ்ட்ரெஸ் போன்ற பல்வேறு ஹெல்த் அப்டேட்களை பெற்று கொள்ளலாம். இதில் இந்த ஹூவாய் வாட்ச் டி2 மாடல் பட்டையை கிளப்பி இருக்கிறது.

ஏனென்றால், பெரும்பாலான ஹெல்த் சென்சார்களை பேக் செய்துள்ளது. இதில் 9-ஆக்சிஸ் ஐஎமயூ சென்சார் (9-axis IMU Sensor) கிடைக்கிறது. இதன் கீழ் ஆக்சிலரோமீட்டர் சென்சார், கைரோஸ்கோப் சென்சார் மற்றும் மேக்னட்டோமீட்டர் சென்சார் (Magnetometer Sensor) கிடைக்கிறது. இதுபோக ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார் (Optical Heart Rate Sensor), ஈசிஜி சென்சார் (ECG Sensor) கிடைக்கிறது.
மேலும், ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor), பாரோமீட்டர் சென்சார் (Barometer Sensor), டெம்ப்ரேச்சர் சென்சார் (Temperature Sensor), ஹால் சென்சார் (Hall Sensor) கிடைக்கிறது. இதுபோக டிப்ரென்சியல் ப்ரசர் சென்சார் (Differential Pressure Sensor) கிடைக்கிறது. ஆகவே, ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களின் பிரீமியம் ஸ்மார்ட்வாட்ச்களுக்கு துளியும் குறையில்லாத ஹெல்த் பீச்சர்கள் இதிலும் கிடைக்கிறது.
24 மணி நேரமும் பிளட் பிரசர் மானிட்டரிங் (Blood Pressure Monitoring) செய்து கொள்ளலாம். அதேபோல 24 மணி நேரமும் ஹார்ட் ரேட் மானிட்டரிங் கிடைக்கிறது. மேலும், வழக்கமாக கிடைக்கும் எஸ்பிஓ2 மானிட்டரிங்,, ஸ்ட்ரெஸ் லெவல் மானிட்டரிங், ஸ்கின் டெம்ப்ரேச்சர் மானிட்டரிங் கிடைக்கிறது. மென்சுரல் டிராக்கிங் மற்றும் பாடி ஆக்டிவிட்டி டிராக்கிங் கிடைக்கிறது.
ஸ்லீப் மானிட்டரிங் கிடைக்கிறது. இதை ஹெல்த் கிளான்ஸ் (Health Glance) ரிப்போர்ட் போல எடுத்து கொள்ளலாம். அதேபோல ஹெல்த் நேட்டிபிகேஷன்கள், வேரியேஷன்கள், அப்நார்மல் அலெர்ட் போன்றவற்றை இதில் பயன்படுத்தி கொள்ளலாம். இதற்காக ஹெல்த் ஆப்கள் மற்றும் டேட்டாகள் அணுக கிடைக்கின்றன. இப்போது, இந்த ஹூவாய் வாட்ச் டி2 மாடலின் மற்ற பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
ஹூவாய் வாட்ச் டி2 பீச்சர்கள் (HUAWEI Watch D2 Specifications): இந்த ஹூவாய் மாடலில் 1.82 இன்ச் (480 x 408 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதுவொரு டச் ஸ்கிரீன் மாடலாக இருக்கிறது. இருப்பினும், ரேட்டேடிங் குரோவ்ண் மற்றும் ஈசிஜி பட்டன் ஆகிய கன்ட்ரோல் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. 347 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 1500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.
ப்ளூடூத் 5.2, என்எப்சி மற்றும் ஜிபிஎஸ் கனெக்டிவிட்டி உள்ளது. 6 நாட்கள் பேக்கப் கிடைக்கும். பிளட் பிரசர் மானிட்டர் உள்ளிட்டவற்றை பயன்படுத்தினால், 1 நாளுக்கு பேக்கப் கிடைக்கிறது. ரூ.34,999ஆக விலை இருக்கிறது. அறிமுக சலுகையில் ரூ.33,399 விலைக்கு கிடைக்கிறது. அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் வாங்கலாம். ப்ளூ, பிளாக், கோல்டு கலர்களில் அலுமினியம் அலாய் கேஸூடன் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








