ஆண்ட்ராய்டு வியர் 2.0, இ-சிம் வசதி கொண்ட ஹூவய் வாட்ச் 2 ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டது

|

ஹூவாய் நிறுவனத்தின் புதிய அணியக்கூடிய சாதனமாக ஹூவாய் வாட்ச் 2 ப்ரோ சீனாவில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஶ்மார்ட்வாட்ச் பார்க்க ஹவாய் வாட்ச் 2 கிளாசிக் போன்று காட்சியளிக்கிறது.

ஆண்ட்ராய்டு வியர் 2.0, இ-சிம் வசதி கொண்ட ஹூவய் வாட்ச் 2 ப்ரோ அறிமுகம்

எனினும் புதிய ஹூவாய் வாட்ச் 2 ப்ரோ சாதனத்தில் இ-சிம் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த சாதனத்தில் சீன பதிப்பு ஆண்ட்ராய்டு வியர் 2.0 வழங்கப்பட்டுள்ளது, இதனால் ஆண்ட்ராய்டு 4.4 மற்றும் அதற்கும் ஐ.ஓ.எஸ். 9.0 மற்றும் அதற்கும் அதிகமான இயங்குதளம் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன்களை சப்போர்ட் செய்யும்.

புதிய வாட்ச் 2 ப்ரோ சாதனத்தில் 4ஜி / 3ஜி / 2ஜி சப்போர்ட் கொண்ட இ-சிம்களை இயக்க முடியும். இத்துடன் ப்ளூடூத் மற்றும் வைபை போன்ற கனெக்டிவிட்டி, ஜி.பி.எஸ். மற்றும் என்.எஃப்.சி. உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புதிய ஹூவாய் வாட்ச் 2 ப்ரோ சாதனத்தில் ஹூவாய்பே, அலிபே மற்றும் வீசாட் பே உள்ளிட்ட அம்சங்களுக்கான சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு வியர் 2.0, இ-சிம் வசதி கொண்ட ஹூவய் வாட்ச் 2 ப்ரோ அறிமுகம்

ஹூவாய் வாட்ச் 2 ப்ரோ சாதனத்தில் 1.2 இன்ச் AMOLED வட்ட வடிவிலான தரை, 390*390 ரெசல்யூஷன் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் கொண்டு பாதுகாக்கப்படுகிறது. இந்த சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 2100 4 கோர் பிராசஸர் மற்றும் 768 எம்பி ரேம் கொண்டு இயங்குகிறது. இத்துடன் 4 ஜிபி இன்டெர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது.

கூகுள் புதிய வசதி: செயலிகளை இன்ஸ்டால் செய்யாமல் பயன்படுத்தலாம்கூகுள் புதிய வசதி: செயலிகளை இன்ஸ்டால் செய்யாமல் பயன்படுத்தலாம்

420எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுதோடு IP68 தரம் கொண்ட வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. இத்துடன் இந்த வாட்ச்சில் 3-ஆக்சிஸ் கிராவிட்டி ஆக்சிலரேஷன் சென்சார், 3-ஆக்சிஸ் கைரோஸ்கோப் சென்சார், 3-ஆக்சில் காம்பஸ் ஜியோமாக்னெடிக் சென்சார், இதய துடிப்பு சென்சார், பிரஷர் சென்சார், கேபாசிட்டிவ் சென்சார் மற்றும் ஆம்பியன்ட் லைட் சென்சார் உள்ளிட்டவை கொணட்ருக்கிறது.

ஹூவாய் வாட்ச் 2 ப்ரோ சாதனம் சீனாவின் JD.com தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.25,343 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சீனாவில் விற்பனை செய்யப்படும் இந்த வாட்ச் மற்ற சந்தைகளில் விற்பனை செய்யப்படுவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

Best Mobiles in India

Read more about:
English summary
Huawei has announced a new smartwatch dubbed as Huawei Watch 2 Pro in China.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X