Just In
- 2 hrs ago
பச்சையாக டீஸ் செய்து காட்டிய OnePlus.! ஆஹா..ஓஹோனு ஒன்னுமில்லை.. ஆனா ஹைப் எகுறுது.!
- 3 hrs ago
குருநாதா இங்கயும் வந்துட்டீங்களா! 2 வார பேட்டரி ஆயுள் உடன் Redmi பேண்ட்! விலை என்ன?
- 15 hrs ago
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- 16 hrs ago
தம்பி ரேஸ் விடலாமா? Samsung, OnePlus, Oppo-வை சீண்டி பார்க்கும் Realme.! காரணம் இது தான்.!
Don't Miss
- Movies
நானும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையை சந்திச்சிருக்கேன்.. ஓபனாக சொன்ன நயன்தாரா.. ஷாக்கான ஃபேன்ஸ்!
- Finance
அதானி அதிரடி முடிவு.. FPO ரத்து.. பணத்தை திரும்ப முதலீட்டாளர்களுக்கு ஒப்படைக்க முடிவு.. ஏன்?
- News
வாவ்! சென்னை ஏர்போர்ட்டில் காத்திருக்க இனி போர் அடிக்காது.. இந்தியாவிலேயே முதல் முறையாக தியேட்டர்!
- Automobiles
"மேல ஏறி வாரோம் ஒதுங்கி நில்லு..." என ஓலாவை ஓரங்கட்டப் போகும் ஏத்தர்... ஒரே ஆண்டில் 330 சதவீத வளர்ச்சியா!
- Sports
ஓ இதுதான் ட்ரிப்பிளா திருப்பி குடுக்குறதா? சோதித்து பார்த்த நியூசி,.. சூர்யகுமார் தரமான பதிலடி!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க பணத்தை கையாளுவதில் கில்லாடிகளாம்... இவங்களுக்கு எப்பவும் பணக்கஷ்டம் வராதாம்...!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இந்த ஸ்மார்ட் கிளாஸ் இருந்தா போதும் இனி டிவி, தியேட்டர் தேவையில்லை.! மிரட்டலான Huawei Vision Glass.!
Huawei நிறுவனம் இன்று Huawei Watch Buds, Huawei Nova 10 SE, Huawei FreeBuds 5i Pro போன்ற பல புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியது. இந்த பிராண்ட் இப்போது ஹுவாய் விஷன் கிளாஸ் (Huawei Vision Glass) என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட் வியூ கண்ணாடிகளையும் (smart glass) அறிமுகம் செய்துள்ளது. இந்த வியரபில் டிவைஸ் (wearable device) ஒரு அவுட்புட் சாதனமாக செயல்படுகிறது. இனி இந்த டிவைஸ் மட்டும் உங்களிடம் இருந்தால் போதும் டிவி, தியேட்டர் என்று எதுவுமே தேவைப்படாது.

புதிய Huawei Vision Glass அறிமுகம்.! இது மத்த ஸ்மார்ட் கிளாஸ் போல இல்லை.!
காரணம், இந்த புதிய Huawei Vision Glass இணைக்கப்பட்ட சாதனத்தின் உள்ளடக்கங்களைக் கண்ணாடியில் டிஸ்பிளே செய்கிறது.
அதாவது Huawei Vision Glass இணக்கமான ஸ்மார்ட்போன்கள், டேப்லெட் மற்றும் பெர்சனல் கம்பியூட்டர்களில் இயங்கும் உள்ளடக்கங்களை இது நேரடியாக இந்த கண் கண்ணாடியில் ஒளிபரப்புகிறது.
Huawei Vision Glass என்ன விலையில், என்ன அம்சங்களை கொண்டுள்ளது என்று பார்க்கலாம்.

சிறந்த வீடியோ அனுபவத்தை வழங்கும் புது பியூச்சர்ஸ்டிக் ஸ்மார்ட் கிளாஸ்.!
வடிவமைப்பில் தொடங்கி, Huawei Vision Glass முறையே 21mm மற்றும் 112g அளவுள்ள மெல்லிய மற்றும் இலகுரக டிஸைனுடன் வருகிறது.
இது நீண்ட நேரம் அணிந்து பார்ப்பதற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் சன்கிளாஸ்கள் போல் தோற்றமளிக்கிறது.
ஆனால், பியூச்சர்ஸ்டிக் டிஸ்பிளே அம்சத்துடன் வருகிறது. இதன் வியூ டிஸ்பிளே அம்சம் உண்மையிலேயே சிறந்த வீடியோ அனுபவத்தை வழங்குகிறதென்று நிறுவனம் கூறியுள்ளது.

வெளிய இருந்து பார்க்க தான் இது கண்ணாடி.! ஆனா உள்ள.. இதுவொரு பிரமாண்ட தியேட்டர்.!
இந்த கண்ணாடியின் மூக்கு பேட்கள் பயனரின் தேவைக்கேற்ப மூன்று நிலைகளில் சரிசெய்யக்கூடிய ஆதரவுடன் வருகிறது.
இதன் கண்ணாடி கைப்பிடிகள் எலாஸ்டிக் தன்மையுடன் வருகிறது. இதனால் சாதனம் பல்வேறு பயனர்களால் பயன்படுத்தக்கூடியது.
இந்த டிவைஸ் 500 டிகிரிக்குள் மோனோகுலர் மயோபியா சரிசெய்தலைக் கொண்டுள்ளது.
இதன் பொருள் பயனர்கள் தங்கள் கண்ணாடிகளை அணியாமல் தெளிவாகப் படங்களைப் பார்க்க முடியும்.

120' இன்ச் விசுவல் டிஸ்பிளே திரை.. இனி டிவி, தியேட்டர் தேவையேயில்லை.!
இந்த Huawei Vision Glass கண்ணாடியை மடித்து, ஸ்டோரேஜ் இல் எளிதாகச் சேமித்து வைக்கலாம். Huawei Vision Glass ஆனது 120' இன்ச் விசுவல் டிஸ்பிளே திரையை ஆதரிக்கிறது.
இது அதிவேகக் வீடியோ காட்சிகளை மிக துல்லியமாக வெளியிடும் திறன் கொண்டது. இது 90 சதவீதம் வரை DCI-P3 வண்ண வரம்புடன் வருகிறது.
இது 1080 x 1920 பிக்சல்கள் வரை FHD தீர்மானம் கொண்ட 480 nits பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது.

இந்த ஸ்மார்ட் கிளாஸில் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது?
இது இரண்டு மைக்ரோ OLED டிஸ்ப்ளேக்களை அதன் சன்கிளாஸில் கொண்டுள்ளது. இந்த சாதனம் TUV Rheinland குறைந்த நீல ஒளி சிறந்த கண் பாதுகாப்பு சான்றளிக்கப்பட்டது.
Huawei Vision Glass பயனர்கள் சுற்றுப்புற ஒளி நிலைகளைப் பொறுத்து ஐந்து நிலைகளில் பிரகாசத்தைச் சரிசெய்ய முடியும்.
ஆடியோவைப் பொறுத்தவரை, Huawei Vision Glass ஆனது திறந்த ஒலி வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

Huawei Vision Glass விலை என்ன தெரியுமா?
டிஜிட்டல் ஆடியோ பிஏ சிப்புடன் இரட்டை 128மிமீ அல்ட்ரா மெல்லிய பெரிய ஸ்பீக்கர்களை நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த சாதனம் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.
Huawei Vision Glass ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் PCகளுடன் இணக்கமானது. Huawei Vision Glass ஆனது RMB 2,999 (~$431) விலையைக் கொண்டுள்ளது.
இந்திய மதிப்பில் இதன் விலை ரூ. 35597 என்று விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 26 முதல் சீனாவில் விற்பனை தொடங்கும். இந்திய வருகை குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470