Home
Gadgets

பாப்-அப் கேமராவுடன் அசத்தலான ஹூவாய் ஸ்மார்ட் டிவி எக்ஸ்65 அறிமுகம்! விலை இவ்வளவு தான்!

ஹூவாய் நிறவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, தற்சமயம் இந்நிறுவனம் எக்ஸ்65 என்று அழைக்கப்படும் 65-இன்ச் ஒஎல்இடி ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பாப்-அப் கேமராவுடன் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

 ஸ்மார்ட் டிவி மாடல்

தற்சமயம் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் ஆனது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, விரைவில் அனைத்து சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட தகவல்களைப்
பார்ப்போம்.

 3840 x 2160பிக்சல்

3840 x 2160பிக்சல்

இப்போது வெளிவந்த எக்ஸ்65 ஸமார்ட் டிவி மாடல் 65-இன்ச் 4கே எச்டிஆர் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 3840 x 2160பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொணடு வெளிவந்துள்ளது இந்த புதிய சாதனம்.

 178 டிகிரி கோணங்களை ஆதரிக்கும்

புதிய எக்ஸ்65 ஸமார்ட் டிவி மாடலின் டிஸ்பிளே ஆனது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 950 நைட்ஸ் பீக் பிரைட்நஸ் உள்ளிட்டஆதரவுகளை கொண்டுள்ளது. மேலும் எச்டிஆர் 10, TUV ரைன்லேண்ட் சான்றிதழ் மற்றும் 178 டிகிரி கோணங்களைஆதரிக்கும் அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ப
காட்சியின் பிரகாசத்தை தானாகவே சரிசெய்யும் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

மாலி-ஜி51எம்பி4 ஜிபியு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்

ஹூவாய் எக்ஸ்65 ஸமார்ட் டிவி மாடல் குவாட்-கோர் (2 x A73 + 2 x A53) 28nm Honghu 898 பிராசஸர் வசதியைக்கொண்டுள்ளது. மேலும் மாலி-ஜி51எம்பி4 ஜிபியு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 ஹார்மனிஓஎஸ்

ஹார்மனிஓஎஸ்

ஹூவாய் எக்ஸ்65 ஸமார்ட் டிவி ஆனது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது, மேலும் ஹூவாய் நிறுவனத்தின் தனியுரிம ஹார்மனிஓஎஸ் (HarmonyOS) கொண்டுள்ளது இந்த டிவி மாடல்.

24எம்பி அல்ட்ரா வைடு பாப்-அப் கேமரா

24எம்பி அல்ட்ரா வைடு பாப்-அப் கேமரா

ஹூவாய் எக்ஸ்65 ஸமார்ட் டிவி மாடலில் மிரட்டலான 24எம்பி அல்ட்ரா வைடு பாப்-அப் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது, எனவே இது வீடியோ அழைப்புகள் மற்றும் பிற கேமரா அடிப்படையிலான பயன்பாடுகளுக்கு டிவியைப் பயன்படுத்த அனுமதிக்கும்.

75w 14-ஸ்பீக்கர் அண்டர்-டிஸ்ப்ளே

75w 14-ஸ்பீக்கர் அண்டர்-டிஸ்ப்ளே சவுண்ட் சிஸ்டத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. மேலும் வைஃபை 802.11,புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட் போர்ட்போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

ரூ.2,68,980-ஆக உள்ளது

ஹூவாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த ஹூவாய் எக்ஸ்65 மாடலின் விலை 24999 யுவான் என்று தகவல் வெளிவந்துள்ளது,இந்திய மதிப்பில் ரூ.2,68,980-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Huawei Smart TV X65 launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X