விரைவில் : 8.4-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் ஹூவாய் மீடியாபேட் எம்5.!
ஹூவாய் மீடியாபேட் எம்5 பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டு வெளிவரும், அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
ஹூவாய் நிறுவனம் புதிய ஹூவாய் மீடியாபேட் எம்5 சாதனத்தை வரும் ஜனவரி மாதம் சிஇஎஸ் 2018 நிகழ்வில் அறிமுகப்படுத்தும் எனத் தெரிவித்துள்ளது, மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஹூவாய் மீடியாபேட் எம்5 சாதனம்.

இக்கருவி 8.4-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு (2560-1600)பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் பல மென்பொருள் தொழில்நுட்பங்களுடன் இந்த ஹூவாய் மீடியாபேட் எம்5 சாதனம் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்டோ-கோர் கிரின் 960 சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும்,மேலும் கைரேகை ஸ்கேனர் மற்றும் 4ஜி எல்டிஇ அம்சங்களை கொண்டுள்ளது இந்த மீடியாபேட் சாதனம்.
ஹூவாய் மீடியாபேட் எம்5 பொதுவாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டு வெளிவரும், அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

ஹூவாய் மீடியாபேட் எம்5 சாதனத்தில் 5000எம்ஏஎச் பேட்டரி இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த சாதனம்.
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications