ஆர்டர் பிச்சிக்கும்.. ரூ.19,999 போதும்.. 7700mAh பேட்டரி.. 22.5W சார்ஜிங்.. FHD டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஹூவாய் நிறுவனத்தின் புதிய மற்றும் பட்ஜெட் விலை டேப்லெட் மாடலான ஹூவாய் மேட்பேட் எஸ்இ 11 (HUAWEI MatePad SE 11) இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. பட்ஜெட்டில் 7700mAh பேட்டரி, 22.5W சார்ஜிங் மற்றும் ஃபுல்எச்டி டிஸ்பிளேவை பேக் செய்துள்ளது. இந்த ஹூவாய் மேட்பேட் எஸ்இ 11 மாடலின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
மாணவர்களின் அகாடமிக் பயன்பாட்டுக்கு மட்டுமல்லாமல், பொழுதுபோக்குக்காகவும் டேப்லெட் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு பக்காவான மாடலாக இந்த ஹூவாய் மேட்பேட் எஸ்இ 11 இருக்கும். ஏனென்றால், ஐ-கம்போர்ட் டிஸ்பிளே, ஹூவாய் எம்-பென் சப்போர்ட் உள்ளிட்ட சப்போர்ட் கிடைக்கிறது. மெட்டாலிக் பாடி மற்றும் பிரீமியம் லுக் கிடைக்கிறது.

ஹூவாய் மேட்பேட் எஸ்இ 11 அம்சங்கள் (HUAWEI MatePad SE 11 Specifications): மீடியாடெக் அல்லது ஸ்னாப்டிராகன் சிப்செட்டை இந்த ஹூவாய் மேட்பேட் எஸ்இ 11 கொடுக்கவில்லை. ஹூவாய் நிறுவனத்தின் ஆக்டா கோர் கிரின் 710ஏ 12என்எம் (Octa Core Kirin 710A 12nm) சிப்செட்டை கொடுத்து இருக்கிறது. ஆர்ம் மாலி ஜி51 ஜிபியு (ARM Mali G51 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலாக இந்த ஹூவாய் மேட்பேட் எஸ்இ 11 கிடைக்கிறது. ஹர்மோனிஓஎஸ் 2.0 (HarmonyOS 2.0) கொடுக்கப்பட்டு உள்ளது. 11 இன்ச் (1920 x 1200 பிக்சல்கள்) ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. இந்த டிஎப்டி எல்சி (TFT LCD) மாடலுக்கு 207 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 16.7 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது.
மேலும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. பிரைட்னஸ் அட்ஜெஸ்ட்மெண்ட்ஸ் (Brightness Adjustmen), ஈபுக் மோட் (eBook Mode) மற்றும டிசி டிம்மிங் (DC Dimming) கொடுக்கப்பட்டு இருக்கிறது. குவாட் ஸ்பீக்கர் செட்டப் (Quad Speaker Setup) கொண்ட மாடலாக இருக்கிறது. ஹூவாய் ஹைஸ்டன் 9.0 (HUAWEI Histen 9.0) டெக்னாலஜி உள்ளது.
22.5W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7700mAh பேட்டரியை இந்த ஹூவாய் மேட்பேட் எஸ்இ 11 போட் கொடுத்துள்ளது. இந்த பேட்டரியுடன் 6.9 எம்எம் தடிமன் மற்றும் 475 கிராம் எடை கொடுத்துள்ளது. ஹூவாய் ஸ்மார்ட் கீபோர்ட் (HUAWEI Smart Keyboard) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஹூவாய் எம்-பென் லைட் ஸ்டைலஸ் (HUAWEI M-Pen Lite Stylus) உள்ளது.
ஆகவே, இந்த ஹூவாய் மேட்பேட் எஸ்இ 11 மாடலை எளிதாக பயன்படுத்தி கொள்ள முடியும். வை-பை 802.11 ஏசி (Wi-Fi 5 802.11 ac), ப்ளூடூத் 5.1 எல்இ (Bluetooth 5.1 LE) மற்றும் யூஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங் சப்போர்ட் கொண்ட மாடலாக இருக்கிறது. 8 எம்பி ஆட்டோ போகஸ் மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமராவுடன் வெளியாகி இருக்கிறது.
ஹூவாய் மேட்பேட் எஸ்இ 11 விலை (HUAWEI MatePad SE 11 Price): இந்த பீச்சர்களுடன் ரூ.25,999 விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இருப்பினும், அறிமுக சலுகையில் ரூ.19,999 விலைக்கு கிடைக்க இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் வாங்கி கொள்ளலாம். கம்மியான பட்ஜெட்டில் புதிய டேப்லெட் தேடிக்கொண்டிருந்தால் இது சரியான தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications