Home
Gadgets

திரும்ப வந்துட்டேன்.. ரூ.13,749 போதும்.. 7700mAh பேட்டரி.. 22.5W சார்ஜிங்.. 11 இன்ச் டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் பல வருடங்களுக்கு பிறகு களமிறங்க இருக்கும் ஹூவாய் (HUAWEI) நிறுவனமானது, டபுள் ட்ரீட் கொடுக்க இருக்கிறது. ஹூவாய் மேட்பேட் 11.5 (HUAWEI MatePad 11.5) மாடல் மட்டுமல்லாமல், ஹூவாய் மேட்பேட் எஸ்இ 11 (HUAWEI MatePad SE 11) மாடலையும் களமிறக்க இருக்கிறது. இந்த மாடலின் விலை விவரங்கள் மற்றும் பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஹூவாய் கம்பேக்

ஹூவாய் நிறுவனமானது, இந்திய மார்கெட்டில் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் களமிறங்க இருக்கிறது. குளோபல் மார்கெட்டில் ஹூவாய் மேட் சீரிஸ் (HUAWEI Mate Series), ஹூவாய் பூரா சீரிஸ் (HUAWEI Pura Series) மற்றும் ஹூவாய் நோவா சீரிஸ் (HUAWEI Nova Series) ஆகிய மாடல்களை களமிறக்கி வருகிறது. இதில் ஹூவாய் மேட் சீரிஸ் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

திரும்ப வந்துட்டேன்.. ரூ.13,749 போதும்.. 7700mAh பேட்டரி.. மாடல்?

அதிலும், டேப்லெட் மாடல்களை முதலில் களமிறக்க இருக்கிறது. ஹூவாய் மேட்பேட் 11.5 மற்றும் ஹூவாய் மேட்பேட் எஸ்இ 11 வெளியாக இருப்பது உறுதியாகிவிட்டது. இந்த மாடல்கள் பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்க இருக்கின்றன. விலை மற்றும் பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இதில் பட்ஜெட் பிரியர்களுக்கான மாடலாக ஹூவாய் மேட்பேட் எஸ்இ 11 இருக்கப் போகிறது.

ஹூவாய் மேட்பேட் எஸ்இ 11

ரூ.13,749 பட்ஜெட்டில் இந்த டேப்லெட் கிடைக்க இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தின் மைக்ரோசைட்டில் இந்த விலை விவரங்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. அதேபோல 7700mAh பேட்டரி, 22.5W சார்ஜிங் மற்றும் 11 இன்ச் டிஸ்பிளே கிடைக்க இருப்பதும் உறுதியாகி இருக்கிறது. ஸ்டைலஸ் சப்போர்ட் கொண்ட மாடலாகவும் இந்த ஹூவாய் மேட்பேட் எஸ்இ 11 இருக்கிறது.

மெட்டல் யுனிபாடி மற்றும் ஹிஸ்டென் 9.0 (Histen 9.0) ஆடியோ கொண்டுள்ளது. நெபுளா கிரே (Nebula Grey) கலரில் கிடைக்க உள்ளது இந்த பீச்சர்கள் மட்டுமே, உறுதியாகி இருக்கின்றன. இருப்பினும், குளோபல் மார்கெட்டில் வெளியாக அதே வெர்ஷன் இந்தியாவிலும் வெளியாக இருப்பதால், முழு பீச்சர்களையும் தெரிந்து கொள்ளலாம். ஆகவே, இதில் டிஎப்டி எல்சிடி டிஸ்பிளே வருகிறது.

207 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளது. ஹர்மோனி ஓஎஸ் 2.0 (HarmonyOS 2.0) கிடைக்கிறது. ஆட்டோ போகஸ் கொண்ட 8 எம்பி ரியர் கேமரா கிடைக்கிறது. ஆடியோ கன்ட்ரோல், பியூட்டி உள்ளிட்ட பீச்சர்களை கொண்டுள்ளது. 5 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கிறது. 4ஜி எல்இடி கனெக்டிவிட்டி கொண்டுள்ளது. இப்போது, ஹூவாய் மேட்பேட் 11.5 மாடலை பார்ப்போம்.

ஹூவாய் மேட்பேட் 11.5

ஹர்மோனிஓஎஸ் 5.1 (HarmonyOS 5.1) கொண்ட கிரின் டி82பி ப்ராசஸர் (Kirin T82B Processor) கொடுக்கப்பட்டு உள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 11.5 இன்ச் (2456 x 1600 பிக்சல்கள்) ஐபிஎல் (IPS) டிஸ்பிளே வருகிறது. மேலும், 256 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் இந்த ஹூவாய் மேட்பேட் 11.5 மாடலுக்கு கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்டுள்ளது.

13 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இதில் ஆட்டோ போகஸ் சப்போர்ட் உள்ளது. 8 எம்பி செல்பீ கேமரா கொடுத்து உள்ளது. 4 ஸ்பீக்கர்கள் உள்ளன. 40W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 10100mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த ஹூவாய் மேட்பேட் 11.5 மாடலானது, கீபோர்டுடன் ரூ.27,999 பட்ஜெட்டில் வெளியாக இருக்கிறது. கிரே கலரில் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மற்றும் விலை உறுதி செய்யப்பட்டுவிட்டது.

More from GizBot

Best Mobiles in India

English summary
HUAWEI MatePad SE 11 With 7700mAh Battery Launch Soon in India Check Specificaions Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X