HUAWEI களமிறங்கிருச்சு.. 10100mAh பேட்டரி.. 40W சார்ஜிங்.. 120Hz IPS டிஸ்பிளே.. 4 ஸ்பீக்கர்கள்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் ஹூவாய் மேட்பேட் 11.5 (HUAWEI MatePad 11.5) மாடல் வெளியாக இருக்கிறது. 5 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவில் எந்த புதிய ப்ரொடெக்ட்களையும் களமிறக்காமல் இருந்து வந்த ஹூவாய் நிறுவனமானது, இந்த டேப்லெட் வழியாக மீண்டும் களமிறங்க இருக்கிறது. இப்போது, விலை விவரங்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த ஹூவாய் மேட்பேட் 11.5 மாடலின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
குளோபல் மார்கெட்டில் ஏற்கனவே இந்த ஹூவாய் மேட்பேட் 11.5 மாடல் வெளியாகிவிட்டது. ஆகவே, பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். ஆனால், விலை விவரங்கள் தெரியாமல் இருந்தது. இப்போது, அந்த விவரங்களும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த ஹூவாய் மேட்பேட் 11.5 மாடலானது பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

ஆகவே, மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு உள்ளது. இதில் வயலெட் (Violet) மற்றும் கிரே (Gray) கலர்களில் கிடைக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. மேலும், கீபோர்ட் கொண்ட மாடலாக இந்த ஹூவாய் மேட்பேட் 11.5 டேப்லெட் வெளியாக இருக்கிறது. ரூ.27,999 பட்ஜெட்டில் இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. இது கீபோர்ட்டுடன் கூடிய விலையாக இருக்கிறது.
6 மாதங்களுக்கான நோ-காஸ்ட் இஎம்ஐ சலுகையுடன் கிடைக்க உள்ளது. 11.5 இன்ச் டிஸ்பிளே கிடைக்க உள்ளது. 10100mAh பேட்டரி மற்றும் 40W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது. 14 மணி நேரங்களுக்கு வீடியோ பிளேபேக் கொடுக்கும். அல்ட்ரா ஸ்லிம் டிசைனில் 6.1 எம்எம் தடிமன் மட்டுமே கொண்டுள்ளது. இந்த விலை மற்றும் பீச்சர்கள் பிளிப்கார்ட் தளத்தில் உறுதியாகி இருக்கின்றன.
மற்ற விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், குளோபல் மார்கெட்டில் இந்த ஹூவாய் மேட்பேட் 11.5 மாடல் வெளியாகிவிட்டதால், அதில் கிடைக்கும் பீச்சர்களை இந்திய வேரியண்ட்டிலும் எதிர்பார்க்கலாம். ஆகவே, குளோபல் வேரியண்ட்டின் முழு பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். அதிலும் வயலெட் மற்றும் கிரே கலர்கள் கிடைக்கின்றன.
ஹூவாய் மேட்பேட் 11.5 அம்சங்கள் (HUAWEI MatePad 11.5 Specifications): 11.5 இன்ச் (2456 x 1600 பிக்சல்கள்) ஐபிஎல் (IPS) டிஸ்பிளே கிடைக்கிறது. 256 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 16.7 மில்லியன் கலர் டெப்த் உள்ளது. ஹர்மோனிஓஎஸ் 5.1 (HarmonyOS 5.1) கிடைத்து உள்ளது.
கிரின் டி82பி ப்ராசஸர் (Kirin T82B Processor) கொடுத்து உள்ளது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொடுத்து உள்ளது. 6.1 எம்எம் தடிமன் மற்றும் 515 கிராம் எடை கொடுத்து உள்ளது. 13 எம்பி ஆட்டோ போகஸ் மெயின் கேமரா கிடைக்கிறது. ஆடியோ கன்ட்ரோல், பியூட்டி, பனோரமா உள்ளிட்ட பீச்சர்களை கொடுத்து உள்ளது.
8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. பிக்சடு போகல் லென்த் கிடைக்கிறது. மிரர் ரெஃப்ளெக்சன் உள்ளிட்ட பீச்சர்களை கொடுத்து உள்ளது. 4 ஸ்பீக்கர்கள், 2 மைக்ரோபோன்கள் கிடைக்கின்றன. மேலும். ஹூவாய் ஹிஸ்டன் 9.0 (HUAWEI Histen 9.0) ஆடியோ சப்போர்ட் கிடைக்கிறது. 40W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 10100mAh பேட்டரி கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








