மிரட்டலான ஹுவாவேய் ப்ரீ பட்ஸ் 3 ட்ருலி வயர்லெஸ் இயர்போன்ஸ் அறிமுகம்!
ஹுவாவேய் நிறுவனம் தனது அடுத்த மைல்கல்லாக ட்ருலி வயர்லெஸ் இயர்போன்- ப்ரீ பட்ஸ் 3 சாதனத்தை IFA 2019 நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது. உலகின் முதல் டூயல் மோடு 5.1 ப்ளூடூத் வயர்லெஸ் இயர்பட்ஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது.

டூயல் மோடு 5.1 ப்ளூடூத் சேவை
நிலையான வயர்லெஸ் இணைப்பிற்காக டூயல் மோடு 5.1 ப்ளூடூத் சேவை தொழில்நுட்பம் இதில் அமைக்கப்பட்டுள்ளது.வசதியுடன் உருவாக்கப்பட்ட இந்த இயர்போனில் குரல் கடத்தலுக்காக உள்ளமாக்கப்பட்ட போன் (bone) குரல் சென்சார், டச் கெஸ்ஜர் வசதி மற்றும் இதன் முக்கிய அம்சமாக ஆக்ட்டிவ் நாய்ஸ் ரத்து வசதியும் கொண்டுள்ளது.

கிரின் A1 சிப்செட்
கிரின் A1 சிப்செட் பொருத்தப்பட்ட உலகின் முதல் 5.1 டூயல் மோடு ப்ளூடூத் வசதி கொண்ட ட்ருலி வயர்லெஸ் இயர்போனாக இந்த புதிய ஹுவாவேய் ப்ரீ பட்ஸ் 3 இயர்பட்ஸை அறிவித்துள்ளனர். இதன் ஆக்ட்டிவ் நாய்ஸ் கான்சலேஷன் வசதியின் மூலம், வாய்ஸ் கால்ஸ் இல் உள்ள பின்னணி இரைச்சல்களை ரத்து செய்து தெளிவான குரலைக் கேட்கச் செய்கிறது.

அதிரவைக்கும் பாஸ் அனுபவம்
அதிரவைக்கும் பாஸ் அனுபவத்திற்காக அதி-உணர்வுத்திறன் கொண்ட 14mm டைனமிக் டிரைவர் மற்றும் பிரத்தியேக பாஸ் டியூப் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடியோ சிக்னல்களை சிறப்பாக எடுத்துக் காட்ட உள்ளமையாக்கப்பட்ட போன் (bone) குரல் சென்சாருடன் இந்த இயர்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

4 மணிநேரம் வரை பிளேபேக்
ஒரு முறை சார்ஜ் செய்தால் 4 மணிநேரம் வரை பயன்படுவதற்கான பேட்டரி வளம், மேலும் 20 மணிநேரம் வரை கேஸ் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. இந்த ஹுவாவேய் இயர்போன் செராமிக் வெள்ளை மற்றும் கார்பன் கருப்பு ஆகிய இரண்டு வண்ணங்களில் விற்பனைக்கு வரும், ஆனால் அதன் விலை விபரம் மற்றும் வெளியிடப்படும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மேலும் ஹுவாவேய் நுகர்வோர் வணிகக் குழுவின் தலைவர் ரிச்சர்ட் யூ தங்களது புதிய படைப்பான ஹுவாவேய் மேட் X மடிக்கும் வசதியுடன் கூடிய போன் அடுத்த மாதம் விற்பனைக்கு வரலாம் என்றும் அறிவித்துள்ளார்


Click it and Unblock the Notifications