இது ஒரு தினுசா இருக்கே.. 510mAh பேட்டரி.. 36 மணி நேரம் பேக்கப்.. டைனாமிக் பேஸ் அல்கோரிதம்.. ஓப்பன் இயர் மாடல்!
புதுப்புது டிசைன்களை விரும்பும் கேஜெட் பிரியர்களை மூக்கில் விரல் வைக்க செய்யும்படியான ஓப்பன் இயர் லுக்கில் ஹூவாய் ஃப்ரீகிளிப் (HUAWEI FreeClip) மாடலானது இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. 36 மணி நேர பேக்கப் கொடுக்கும் 510mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், டைனாமிக் பேஸ் அல்கோரிதம் போன்ற மற்ற பீச்சர்களிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த ஹூவாய் ஃப்ரீகிளிப் மாடலின் முழு பீச்சர்களை பார்த்துவிட்டு, விலை மற்றும் விற்பனை விவரங்களுக்கு செல்லலாம்.
இந்தியாவில் ஸ்மார்ட்வாட் மற்றும் இயர்பட்ஸ் மாடல்கள் மூலம் ஹூவாய் நிறுவனம் தனி கவனம் பெற்று வருகிறது. பிரீமியம் டிசைனில் பீச்சர்களிலும் மிரளவிடும்படி மாடல்களை கொண்டுவருகிறது. இப்போது, ஓப்பன்-இயர் டிசைனில் இந்த ஹூவாய் ஃப்ரீகிளிப் மாடலை அறிமுகம் செய்துள்ளது. பீன் (Bean) லுக் பாடி கொடுக்கும்படியான இந்த பட்களில் 8 மணி நேரங்களுக்கு பேக்கப் வருகிறது.

அதேபோல மொத்தமாக சி-பிரிட்ஜ் (C-bridge) டிசைன் கொடுக்கிறது. இந்த பட்களில் ஆட்டோ லெப்ட் மற்றும் ரைட் ரிககனைசேஷன் (Auto Left-Right Recognition) சப்போர்ட் கிடைக்கிறது. அகஸ்டிக் பால் (Acoustic Ball) கன்ட்ரோல் உள்ளது. ஆகவே, டபுள் டேப், டிரிபிள் டேப் போன்ற கன்ட்ரோல்களை செய்து கொள்ளலாம். ஒரு கிளிப் போல காதுகாளில் மாட்டி கொண்டு பயன்படுத்த முடியும்.
ஹூவாய் ஃப்ரீகிளிப் அம்சங்கள் (HUAWEI FreeClip Specifications): வெறும் 5.6 கிராம் எடையில் இயர்பட்கள் வருகின்றன. இதற்கு லெப்ட் மற்றும் ரைட் ரூல் பொருந்தாது. எந்த பட்களை எந்த காதுகளில் வேண்டுமானாலும் மாட்டி கொள்ளலாம். இதற்கு ஏற்ப அடாப்டிவ் ஆடியோ அவுட்புட் கொடுக்கும்படி ஆட்டோ ரிககனைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது.
இதில் 10.8 எம்எம் டூயல்-மேக்னட் டிரைவர்கள் கிடைக்கின்றன. இந்த டிரைவர்களில் டைனாமிக் பேஸ் அல்கோரிதம் (Dynamic Bass Algorithm) என்ஹான்ஸ் செய்யப்பட்டு இருக்கிறது. சவுண்ட் லீக்கேஜ்ஜை குறைக்க ரிவர்ஸ் சவுண்ட் வேவ் சிஸ்டம் (Reverse Sound Waves System) கிடைக்கிறது. கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் கால்களுக்காக விண்ட்ப்ரூப் மைக் மட்டுமல்லாமல், டால்க் மைக் விபியூ மைக் கிடைக்கிறது.

இந்த இயர்பட்களில் தலா 55mAh பேட்டரி கிடைக்கிறது. சார்ஜிங் கேஸில் 510mAh பேட்டரி வருகிறது. டைப்-சி வயர்டு சார்ஜிங் கிடைக்கிறது. பிரீமியம் மாடலாக இருப்பதால், 2W வயர்லெஸ் ார்ஜிங் கிடைக்கிறது. ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், பட்களில் 8 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். அதேபோல சார்ஜிங் கேஸில் 36 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். மோஷன் கன்ட்ரோல்களை கொடுக்கிறது.
டிராப் ரீமைண்டர் (Drop Reminders), டூயல் டிவைஸ் (Dual-Device) கனெக்டிவிட்டி மற்றும் ஏஐ லைப் ஆப் சப்போர்ட் கொடுக்கிறது. இயர்பட்களுக்கு மட்டும் IP54 ரேட்டிங் கொண்ட ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப விபியூ சென்சார், ஐஎம்யூ சென்சார் மற்றும் ஹால் சென்சார் கிடைக்கிறது.எஸ்பிசி, ஏஏசி மற்றும் எல்2எச்சி (L2HC) போன்J ஆடியோ ஃபார்மெட்கள் சப்போர்ட் கொடுக்கிறது.
ஹூவாய் ஃப்ரீகிளிப் விலை (HUAWEI FreeClip Price): இந்த பிரீமியம் மாடலின் விலை ரூ.14,999ஆக இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வந்துவிட்டது. பெய்ஜ் (Beige), பர்பிள் (Purple) மற்றும் பிளாக் (Black) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. பிரீமியம் லுக் மற்றும் பீச்சர்களை எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு இந்த ஹூவாய் ஃப்ரீகிளிப் பக்கா ஆப்ஷனாகும்.


Click it and Unblock the Notifications








