பின்றானே இவன்.. சிங்கிள் சார்ஜில் 38 மணி நேர பேக்கப்.. ஸ்பாஷியல் ஆடியோ.. IP57 ரேட்டிங்.. எந்த மாடல்?
ஹூவாய் நிறுவனத்தின் பிரீமியம் பீச்சர்களை கொண்ட மாடலாக ஹூவாய் ப்ரீகிளிப் 2 எஸ் (HUAWEI FreeClip 2 S) இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஓப்பன் இயர் டிசைனில் வெளியாகி இருக்கும் இந்த மாடலில் சிங்கிள் சார்ஜில் 38 மணி நேரத்துக்கு பேக்கப் கிடைக்கும். ஏஐ கால் நாய்ஸ் கேன்சலேஷன், ஸ்பாஷியல் ஆடியோ போன்ற பீச்சர்களில் பட்டையை கிளப்புகிறது.
குளோபல் மார்கெட்டில் ஹூவாய் புரா 90எஸ் சீரிஸ் (HUAWEI Pura 90s Series) மாடல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த மாடல்களுக்கு ஹூவாய் ப்ரீகிளிப் 2 எஸ் இயர்பட்ஸ் வெளியாகி இருக்கிறது. மலேசியா மார்கெட்டில் கிடைப்பதால், இந்திய மியூசிக் பிரியர்களிடையே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ஓப்பன்-இயர் (open-ear) டிசைனை கொடுப்பதால் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

ஹூவாய் ப்ரீகிளிப் 2 எஸ் அம்சங்கள் (HUAWEI FreeClip 2 S Specifications): 10.8 எம்எம் டூயல் டிரைவர் கொண்ட மாடலாக இந்த ஹூவாய் ப்ரீகிளிப் 2 எஸ் கிடைக்கிறது. அடாப்டிவ் வால்யூம் (Adaptive Volume), மல்டி-ஈகியூ (Multi-EQ) மற்றும் கஸ்டமர் ஈகியூ (Custom EQ) கொடுக்கப்பட்டு இருக்கிறது. போன் அகஸ்டிக் (Bone Acoustic) மற்றும் டச் சென்சார்களை கொடுக்கிறது.
ஹூவாய் ஆடியோ கனெக்ட் ஆப் (HUAWEI Audio Connect App) சப்போர்ட் கிடைக்கிறது. ஏஐ கால் நாய்ஸ் கேன்சலேஷன் (AI Call Noise Cancellation) மற்றும் மல்டி-சேனல் டிஎன்என் அல்காரிதம் கொண்டுள்ளது. 3டி ஆடியோ பிரியர்களை தட்டித் தூக்கும்படி ஸ்பாஷியல் ஆடியோ (Spatial Audio) கிடைக்கிறது. மேலும், டைனாமிக் ஹெட் டிராக்கிங் (Dynamic Head Tracking) கொடுக்கிறது.
இதுபோக ஆட்டோமெட்டிக் லெப்ட் மற்றும் ரைட் ரிககனைசேஷன் வருகிறது. ஆடியோ லீக்கேஜை குறைக்க ரிவர்ஸ் சவுண்ட் வேவ் டெக்னாலஜியை (Reverse Sound Wave Technology) இந்த ஹூவாய் ப்ரீகிளிப் 2 எஸ் கொடுத்துள்ளது. வாய்ஸ் அசிஸ்டன்ட் கொண்ட மாடலாக இருக்கிறது. டேப், ஸ்வைப் மட்டுமல்லாமல், ஹெட் கெஸ்ச்சர் கன்ட்ரோல்களும் கிடைக்கின்றன.
ப்ளூடூத் 6.0 (Bluetooth 6.0) கனெக்டிவிட்டியை கொடுத்துள்ளது. மொபைல் மற்றும் டேப்லெட் அல்லது லேப்டாப் என்று ஒரே நேரத்தில் 2 டிவைஸ்களை கனெக்ட் செய்து கொள்ள முடியும். பாப்-அப் பேர் (Pop-up Pair) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, சார்ஜிங் கேஸில் இருந்து வெளியே எடுத்தால் போதும், ஆட்டோமேட்டிக்காக கனெக்ட் செய்யப்பட்டுவிடும்.
ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால் பட்களில் 9 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். சார்ஜிங் கேஸில் 38 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். இதில் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும் 3 மணி நேரங்களுக்கு பிளேபேக் பெற்று கொள்ளலாம். பட்களில் தலா 60mAh பேட்டரி கிடைக்கிறது.
மேலும், 537mAh பேட்டரி சார்ஜிங் கேஸில் வருகிறது. இயர்பட்களில் IP57 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. ஆனால், சார்ஜிங் கேஸில் IP54 ரேட்டிங் மட்டுமே கிடைக்கிறது. டீப் ப்ளூ (Deepsea Blue) மற்றும் ஸ்பேஸ் சில்வர் (Space Silver) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. ரூ.21,273 பட்ஜெட்டில் இந்த ஹூவாய் ப்ரீகிளிப் 2 எஸ் வெளியாகி இருக்கிறது.


Click it and Unblock the Notifications