Home
Gadgets

HUAWEI அடிச்சான் பாரு.. சிங்கிள் சார்ஜில் 50 மணி நேர பேக்கப்.. 2 ப்ரீபட்ஸ் மாடல்கள் அறிமுகம்.. விலை என்ன?

ஹூவாய் நிறுவனத்தின் புதிய இயர்பட்ஸ் மாடல்கள் இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. பிரீமியம் பீச்சர்களுடன் ஹூவாய் ப்ரீபட்ஸ் 7ஐ (HUAWEI FreeBuds 7i) மாடலும் மிட்-ரேஞ்ச் பீச்சர்களுடன் ஹூவாய் ப்ரீபட்ஸ் எஸ்இ 4 (HUAWEI FreeBuds SE 4) மாடலும் களமிறங்கி இருக்கிறது.

டிசைனிலும் பட்டையை கிளப்பும்படி இந்த ப்ரீபட்ஸ் மாடல்கள் கிடைக்க இருக்கின்றன. டைனாமிக் ஈகியூ முதல் கால் நாய்ஸ் கேன்லேஷன் வரையில் ஆடியோ மற்றும் வாய்ஸ் கால்களுக்கு தேவையான பீச்சர்களை பேக் செய்துள்ளன. முதலில் பீச்சர்களை பார்த்துவிட்டு, விலை விவரங்களுக்கு செல்லலாம்.

HUAWEI அடிச்சான் பாரு.. சிங்கிள் சார்ஜில் 50 மணி நேர பேக்கப்!

ஹூவாய் ப்ரீபட்ஸ் 7ஐ அம்சங்கள் (HUAWEI FreeBuds 7i Specifications): 11 எம்எம் குவாட்-மேக்னட் டைனாமிக் டிரைவர் யூனிட் கிடைக்கிறது. டைனாமிக் ஈகியூ (Dynamic EQ), ஏஎன்சி (ANC), அவர்னஸ் மோட் (Awareness Mode), வாய்ஸ் மோட் (Voice Mode), கால் நாய்ஸ் கேன்லேஷன் (Call Noise Cancellation) உள்ளிட்ட பீச்சர்களை கொடுத்துள்ளது.

ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. டூயல்-டிவைஸ் சப்போர்ட் உள்ளது. ஆகவே, ஒரே நேரத்தில் 2 டிவைஸ்களை கனெக்ட் செய்து கொள்ளலாம். பாப்-அப் ஃபேரிங் (Pop-up Pairing) சப்போர்ட் கிடைக்கிறது. போன் வாய்ஸ் சென்சார் (Bone Voice Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), ஹால் சென்சார் (Hall Sensor) உள்ளிட்டவை கிடைக்கின்றன.

ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) கொடுக்கப்பட்டு உள்ளது. இயர்பட்களுக்கு மட்டும் IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கிடைக்கிறது. இந்த ஹூவாய் ப்ரீபட்ஸ் 7ஐ மாடலின் பட்களில் 55mAh பேட்டரி கிடைக்கிறது. சார்ஜிங் கேஸில் 510mAh பேட்டரி கிடைக்கிறது. டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது.

ஏஎன்சி மோடில் இயர்பட்களில் 5 மணி நேரத்துக்கு பேக்கப் கிடைக்கும். சார்ஜிங் கேஸில் 35 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். ஏஎன்சி மோட் ஆப் செய்யப்பட்டு இருந்தால், பட்களில் 8 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். சார்ஜிங் கேஸ் வழியாக 20 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். இப்போது, விலை விவரங்களுக்கு வருவோம்.

இந்த ஹூவாய் ப்ரீபட்ஸ் 7ஐ மாடலின் மார்கெட் விலை ரூ.13,999ஆக இருக்கிறது. இருப்பினும், அறிமுக சலுகையில் ரூ.8,799 விலையில் கிடைக்க இருக்கிறது. வருகிற ஜூன் 18 ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். பிங்க் (Pink), ஒயிட் (White) மற்றும் பிளாக் (Black) கலரில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

இந்த மாடலுடன் ஹூவாய் ப்ரீபட்ஸ் எஸ்இ 4 (HUAWEI FreeBuds SE 4) மாடலும் இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது ஹூவாய் ப்ரீபட்ஸ் 7ஐ மாடலை விட மலிவான விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும், பீச்சர்களில் பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த மாடலின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை பார்க்கலாம்.

10 எம்எம் டிரைவர்களை கொடுத்துள்ளது. ஹால் சென்சார், டச் சென்சார் உள்ளது. ப்ளூடூத் 5.4 கனெக்டிவிட்டி, லோவ்-லேட்டன்சி கேமிங் உள்ளது. இயர்பட்களில் 41mAh பேட்டரி மற்றும் சார்ஜிங் கேஸில் 510mAh பேட்டரி கிடைக்கிறது. ஏஎன்சி ஆஃப் செய்தால், பட்களில் 10 மணி நேரத்துக்கும், கேஸில் 50 மணி நேரத்துக்கும் பேக்கப் கிடைக்கும்.

ஏஎன்சி ஆன் செய்யப்பட்டு இருந்தால், பட்களில் 7 மணி நேரத்துக்கும், சார்ஜிங் கேஸில் 35 மணி நேரத்துக்கும் பேக்கப் கிடைக்கும். எஸ்பிசி, ஏஏசி, எம்எஸ்பிசி கிடைக்கிறது. ஒயிட் (White), பிளாக் (Black) கலர்களில் கிடைக்க இருக்கிறது. ஜூன் 18ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ரூ.4,799 விலைக்கு விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

Best Mobiles in India

English summary
HUAWEI FreeBuds 7i With 510mAh Battery Launched in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X