Home
Gadgets

ஆடின்னே இருப்பேன்.. 50 மணிநேரம் பேட்டரி, ANC, IP54 ரேட்டிங் உடன் 2 புது இயர்பட்ஸ் அறிமுகம்.. எந்த மாடல்?

ஹூவாய் (Huawei) நிறுவனமானது இந்திய சந்தையில் சைலன்ட் ஆக 2 புதிய இயர்பட்ஸ் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அது ஹூவாய் ப்ரீபட்ஸ் 7ஐ (FreeBuds 7i) மற்றும் ஹூவாய் ப்ரீபட்ஸ் எஸ்இ 4 ஏஎன்சி (FreeBuds SE 4 ANC) மாடல்கள் ஆகும்.

முக்கிய அம்சங்கள்: ஹூவாய் நிறுவனத்தின் இந்த புதிய ட்ரூலி வயர்லெஸ் (TWS) இயர்போன்ஸ் மாடல்கள் ஆனது ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கனெக்டிவிட்டியை வழங்குகின்றன. மேலும் இவைகள் தூசி மற்றும் நீர் தெறிப்புகளை தாக்குப்பிடிக்கும் IP54 ரேட்டிங்கையும் கொண்டுள்ளன.

50 மணிநேரம் பேட்டரி உடன் 2 புது Huawei இயர்பட்ஸ் அறிமுகம்!

புதிய ப்ரீபட்ஸ் 7ஐ மாடலில் 11மிமீ டைனமிக் டிரைவர்களும், ப்ரீபட்ஸ் எஸ்இ 4 ஏஎன்சி மாடலில் 10மிமீ டைனமிக் டிரைவர் யூனிட்டும் இடம்பெற்றுள்ளன. இவ்விரு மாடல்களிலும் 'ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்' (ANC) வசதி உள்ளது. சார்ஜிங் கேஸுடன் சேர்த்து, ஏஎன்சி வசதி முடக்கப்பட்ட நிலையில் இவைகள் 50 மணிநேரம் வரை பிளேடைமை வழங்குவதாக கூறப்படுகிறது.

விலை மற்றும் விற்பனை: இந்தியாவில் ஹூவாய் ப்ரீபட்ஸ் 7ஐ மாடலின் ரூ.12,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மறுகையில் உள்ள ப்ரீபட்ஸ் எஸ்இ 4 ஏஎன்சி மாடலின் விலை ரூ.7,999 ஆகும். இந்த இரண்டு இயர்போன்களும் அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் இந்தியாவின் முன்னணி சில்லறை விற்பனை கடைகள் மூலம் வாங்க கிடைக்கின்றன.

விரிவான அம்சங்கள்: ப்ரீபட்ஸ் 7ஐ ஆனது Intelligent Dynamic ANC 4.0 அம்சத்தை கொண்டுள்ளது; இது மாறும் சூழலுக்கு ஏற்ப தானாகவே தன்னை மாற்றியமைத்து, சுற்றுப்புற இரைச்சலை கணிசமாக குறைக்கிறது. இதில் த்ரீ மைக்ரோஃபோன்களை கொண்ட நாய்ஸ் கேன்சலேஷன் (noise cancellation) அமைப்பும் உள்ளது. இந்த இயர்போன்கள் பல்வேறு அளவிலான இயர் டிப்ஸ்களுடன் (ear tips) வருகின்றன. ப்ரீபட்ஸ் எஸ்இ 4 மாடல் ஆனது Multi-Mode Active Noise Cancellation வசதியை வழங்குகிறது.

ப்ரீபட்ஸ் 7ஐ மற்றும் ப்ரீபட்ஸ் எஸ்இ 4 ஆகிய இரண்டுமே Bluetooth 5.4 இணைப்பை ஆதரிக்கின்றன மற்றும் தூசி மற்றும் நீர் தெறிப்புகளிலிருந்து பாதுகாப்பிற்கான IP54 தரநிலையை பெற்றுள்ளன. இவற்றை ஒரே நேரத்தில் இரண்டு டிவைஸ்களுடன் இணைக்க முடியும். மேலும், இந்த இயர்போன்களில் டச் கண்ட்ரோல்ஸ் (touch controls) வசதிகளும் உள்ளன.

ஹூவாய் ப்ரீபட்ஸ் 7ஐ மாடலின் ஒவ்வொரு இயர்பட்ஸிலும் 55mAh பேட்டரியும், சார்ஜிங் கேஸில் 510mAh பேட்டரியும் உள்ளன. சார்ஜிங் கேஸுடன் சேர்த்து பயன்படுத்தும்போது, ஏஎன்சி ​​முடக்கப்பட்ட நிலையில் 35 மணிநேரம் வரையிலும், ஏஎன்சி இயக்கப்பட்ட நிலையில் 20 மணிநேரம் வரையிலும் பிளே டைமை வழங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ப்ரீபட்ஸ் 7ஐ மாடல் ஆனது 20Hz முதல் 40kHz வரையிலான அதிர்வெண் வரம்பை கொண்ட 11 மிமீ குவாட்-மேக்னட் டைனமிக் டிரைவர் யூனிட்டை கொண்டுள்ளது. மேலும் Dynamic EQ, Active Noise Cancellation, Awareness Mode, Voice Mode மற்றும் கால்களின் போது இரைச்சல் நீக்கம் (call noise cancellation) ஆகிய அம்சங்களையும் ஆதரிக்கிறது.

ப்ரீபட்ஸ் எஸ்இ 4 மாடல் ஆனது 20Hz முதல் 20kHz வரையிலான அதிர்வெண் வரம்பைக் கொண்ட 10 மிமீ டைனமிக் டிரைவர்களை கொண்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் அழைப்புகளின் போது இரைச்சல் நீக்கம் மற்றும் Multi-EQ ஆடியோ டியூனிங் ஆகியவற்றை ஆதரிக்கின்றன; மேலும் பல்வேறு டிவைஸ்களுடன் இணக்கமாக செயல்பட SBC, AAC மற்றும் mSBC ஆடியோ கோடெக்குகளையும் (codecs) ஆதரிக்கின்றன.

ப்ரீபட்ஸ் எஸ்இ 4 ஏஎன்சி இயர்பட்ஸில் 41mAh பேட்டரிகளும், சார்ஜிங் கேஸில் 510mAh பேட்டரியும் உள்ளன. இந்த இயர்பட்ஸில் ஹால் எஃபெக்ட் சென்சார் மற்றும் டச் சென்சார் (touch sensor) வசதிகள் உள்ளன. மேலும் சார்ஜிங் மற்றும் ஸ்டேட்டஸ் தகவல்களைக் காட்ட சார்ஜிங் கேஸில் மூன்று வண்ண எல்இடி இன்டிகேட்டர் (LED indicator) உள்ளது. ப்ரீபட்ஸ் எஸ்இ 4 ஏஎன்சி மாடலானது ஏஎன்சி முடக்கப்பட்ட நிலையில் 50 மணிநேரம் வரையிலும், ஏஎன்சி இயக்கப்பட்ட நிலையில் 10 மணிநேரம் வரையிலும் இசை கேட்கும் நேரத்தை வழங்குவதாகக் கூறப்படுகிறது

Best Mobiles in India

English summary
Huawei FreeBuds 7i and FreeBuds SE 4 ANC Earbuds Launched in India Price Specifications Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X