வெச்சி செஞ்சிட்டாங்க.. செமி-ஓப்பன் TWS பட்ஸ்.. AI அசிஸ்டன்ட்.. ஹெட் டிராக்கிங்.. 510mAh பேட்டரி.. எந்த மாடல்?
இயர்பட்ஸ் மார்கெட்டே மூக்கில் விரல் வைக்கும்படியான செமி-ஓப்பன் டிசைன் மட்டுமல்லாமல், பேஸ் டர்போ டிரைவர்கள், ஹெட் டிராக்கிங் ஸ்பாஷியல் ஆடியோ, 95dB நாய்ஸ் கேன்சலேஷன், 510mAh பேட்டரி, கெஸ்ச்சர் மற்றும் டச் கன்ட்ரோல் போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் ஹூவாய் ஃப்ரீபட்ஸ் 6 (HUAWEI FreeBuds 6) மாடல் களமிறங்கி இருக்கிறது. லாஸ்லெஸ் ஆடியோ, கேமிங் லோவ்-லேட்டன்சி, IP54 வாட்டர் ரெசிஸ்டன்ட் போன்ற பீச்சர்களிலும் பட்டையை கிளப்பும் இந்த ஹூவாய் ஃப்ரீபட்ஸ் 6 மாடலின் பீச்சர்கள், விலை விவரங்களை பார்க்கலாம்.
டிடபுள்யூஎஸ் மாடல்களிலும் ஏஐ பீச்சர்கள் முதல் வாய்ஸ் அசிஸ்டன்ட் வரையில் கிடைக்கின்றன. இதனால், பீச்சர்களை தவிர்த்து டிசைனிலும் தயாரிப்பு நிறுவனங்கள் கவனம் செலுத்துகின்றன. இதில் ஹூவாய் நிறுவனம் வாட்டர் டிராப் ஷேப் (Water Drop Shape) மற்றும் செமி-ஓப்பன் (Semi-open) டிசைனில் இந்த ஹூவாய் ஃப்ரீபட்ஸ் 6 மாடலை களமிறங்கி மிரளவிட்டிருக்கிறது.
ஹூவாய் ஃப்ரீபட்ஸ் 6 அம்சங்கள் (HUAWEI FreeBuds 6 Specifications): பாலிகார்பனேட் மெட்டீரியல் பாடியில் ஸ்கை ஒயிட் (Sky White), அரோரா பர்பிள் (Aurora Purple) மற்றும் ஸ்டார்ரி பிளாக் (Starry Black) கலர்களில் வெளியாகி இருக்கிறது. வாட்டர் டிராப் ஷேப் டிசைனில் நான்-ஸ்லிப் இயர்மப்ஸ் (Non-slip Earmuffs) கிடைக்கிறது. 11 எம்எம் டூயல்-டிரைவர்கள் வருகிறது.

ஆகவே, மேக்னட் யூனிட் + மைக்ரோ பிளாட் ட்வீடர் கிடைக்கிறது. இதில் பேஸ் பிரியர்களுக்கான பேஸ் டர்போ (Bass Turbo) சப்போர்ட் கிடைக்கிறது. 2.3எம்பிபிஎஸ் லாஸ்லெஸ் ஆடியோ (Lossless Audio) மற்றும் ஹை-ரெஸ் (Hi-Res) சப்போர்ட் உள்ளது. இதுபோக எச்டபுள்யூஏ (HWA) மற்றும் ரியல்-டைம் சவுண்ட் ட்வீக் வருகிறது. ஆகவே, ஆடியோ டெக்னாலஜியில் பிரீமியம் காட்டி இருக்கிறது.
ஹூவாய் மியூசிக் ஆப் (HUAWEI Music App) மூலம் ஹெட் டிராக்கிங் (Head Tracking) கிடைக்கிறது. ஆகவே, ஸ்பாஷியல் ஆடியோ (Spatial Audio) பயன்படுத்தலாம். இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப 95dB நாய்ஸ் ரெடக்சன் (Noise Reduction) சப்போர்ட் உள்ளது. இயர்பட்களில் தலா 39mAh பேட்டரி மற்றும் சார்ஜிங் கேஸில் 510mAh பேட்டரி கிடைக்கிறது. ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது.
ஆகவே, 5 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 2.5 மணி நேரங்களுக்கு பிளே பேக் கொடுக்கும். ஃபுல் சார்ஜ் செய்ய டைப்-சி போர்ட்டில் 45 நிமிடங்கள் தேவைப்படும். இதில் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் இருப்பதால், அதில் சார்ஜ் செய்ய 150 நிமிடங்கள் தேவைப்படும். நாய்ஸ் கேன்சலேஷன் ஆன் செய்தால், இயர்பட்களில் 4.5 மணி நேரமும், சார்ஜிங் கேஸில் 27 மணி நேரமும் பிளேபேக் கிடைக்கும்.

அதுவே, நாய்ஸ் கேன்சலேஷனை ஆப் செய்தால் இயர்பட்களில் 6 மணி நேரமும், கேஸில் 36 மணி நேரமும் பிளேபேக் கிடைக்கும். இந்த ஹூவாய் ஃப்ரீபட்ஸ் 6 மாடலின் கனெக்டிவிட்டியை பார்க்கையில், ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), 90ms லோவ் லேட்டன்சி மற்றும் மல்டி டிவைஸ் சப்போர்ட் கிடைக்கிறது. 10 மீட்டர்கள் ரேஞ்ச் கிடைக்கும். ஹர்மோனி ஓஎஸ் 3.0பிளஸ் (Harmony OS 3.0+) உள்ளது.
இயர்பட்களில் டச் கன்ட்ரோல்கள் கிடைக்கிறது. அதேபோல கெஸ்ச்சர் கன்ட்ரோல்களையும் செய்து கொள்ளலாம். ஆனால், வாய்ஸ் கால்களுக்கு மட்டுமே கெஸ்ச்சர் கன்ட்ரோல் சரியாக இருக்கும். ஹால் சென்சார், இன்பிராரெட் சென்சார், கைரோஸ்கோப் போன்ற சென்சார்களும் இடம்பெற்றுள்ளன. ஆகவே, அதற்கு ஏற்ப அவுட்பு கிடைக்கும். 4 கலர்களில் இன்டிகேட்டர் லைட் கிடைக்கிறது.
21 மொழிகளின் டிரான்ஸ்லேஷன் சப்போர்ட் கொண்ட சீலியா (Celia) என்னும் ஏஐ அசிஸ்டன்ட் கிடைக்கிறது. IP54 வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இவ்வளவு பிரீமியம் பீச்சர்களை கொண்டிருப்பதால் ரூ.11,930 ஆக விலை இருக்கிறது. சீனாவில் வெளியாகி ப்ரீ-சேல் தொடங்கிவிடட்து. மார்ச் 28ஆம் தேதி முதல் ஓப்பன் சேல் தொடங்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications








