ஹுவாய் ஸ்மார்ட் வாட்ச்: ஜிடி, பேண்ட் 3 ப்ரோ & பேண்ட் 3இ அறிமுகம்.! விலை என்ன தெரியுமா?
ஹுவாய் நிறுவனம், அதன் ஹுவாய் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் வரிசையில் மூன்று புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
ஹுவாய் நிறுவனம், அதன் ஹுவாய் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் வரிசையில் மூன்று புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய ஹுவாய் வாட்ச் ஜிடி(Huawei Watch GT), ஹுவாய் பேண்ட் 3 ப்ரோ மற்றும் ஹவாய் பேண்ட் 3இ மாடல்களை இன்று அறிமுகம் செய்துள்ளது.

புதிய ஹுவாய் வாட்ச் ஜிடி
இந்த புதிய ஹுவாய் வாட்ச் ஜிடி, ஹுவாய் பேண்ட் 3 ப்ரோ( Band 3 Pro) மற்றும் ஹுவாய் பேண்ட் 3இ(Band 3e) ஆகிய மாடல்கள் ஹுவாய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் அமேசான் தலத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் என்று ஹுவாய் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்போர்ட் எடிஷன்
ஹுவாய் வாட்சை ஜிடி இன் கிளாசிக் எடிஷன் இந்தியா சந்தையில் வெறும் ரூ.16,999 என்ற விலையிலும், ஸ்போர்ட் எடிஷன் வெறும் ரூ.15,990 என்ற விலையிலும் மார்ச் 19 ஆம் தேதி முதல் விற்பனைக்குக் கிடைக்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயர்போன்ஸ் இலவசம்
கூடுதல் சிறப்பான செய்தி என்னவென்றால், ஹுவாய் வாட்ச்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, ரூ.2,999 மதிப்புடைய ஸ்போர்ட் பிடி ஏஎம்61(Huawei Sports BT AM61 )இயர்போன்ஸ் இலவசமா பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளதாக ஹுவாய் நிறுவனம் அறிவித்துள்ளது.

மார்ச் 19
அதேபோல் ஹுவாய் பேண்ட் 3 ப்ரோ, ஒபிசிடியன் பிளாக் மற்றும் ஸ்பேஸ் ப்ளூ நிறத்தில் வெறும் ரூ.4,699 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி ஹுவாய் பேண்ட் 3இ மார்ச் 19 ஆம் தேதி முதல் வெறும் ரூ.1,699 என்ற விலையில் விற்பனைக்குக் களமிறங்குகிறது.


Click it and Unblock the Notifications