மிரண்டு போவீங்க.. பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 5ATM ரெசிஸ்டன்ட்.. 14 நாட்கள் பேட்டரி.. எந்த மாடல்?
ஸ்மார்ட்பேண்ட் வாங்கினால், இதை மாடலை தான் வாங்கனும் என்று சொல்லும்படியான பீச்சர்களுடன் ஹூவாய் பேண்ட் 8 (HUAWEI Band 8) இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. 2.5டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, டச் கன்ட்ரோல், 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ட், 14 நாட்கள் பேக்கப், ஹெல்த் மானிட்டர்கள், வொர்க் அவுட் டிராக்கர்கள் போன்ற அனைத்து பீச்சர்களிலும் பின்னிப்பெடல் எடுத்துள்ளது. இந்த ஹூவாய் பேண்ட் 8 மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஹூவாய் பேண்ட் 8 அம்சங்கள் (HUAWEI Band 8 Specifications): இந்த ஹூவாய் மாடலில் 1.47 இன்ச் (194 × 368 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 2.5டி கரவ்ட் டிசைன் கொண்ட ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே (Always-on Display) மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் எச்டி (HD) ரெசொலூஷன் மற்றும் 282 பிபிஐ பிக்சல் டென்சிட்டி வருகிறது.

மேலும், ஸ்வைப் (Swipe) மற்றும் டச் கெஸ்ச்சர் (Touch Gestures) சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, ஃபுல்-ஸ்கிரீன் டச் மற்றும் சைடு பட்டன் கன்ட்ரோல் வருகிறது. இந்த ஹூவாய் பேண்ட் 8 மாடலில் ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) கனெக்டிவிட்டி வருகிறது. ஆண்ட்ராய்டு 6.0 மற்றும் ஐஓஎஸ் 9.0 ஓஎஸ் அல்லது அதற்கு மேலான ஓஎஸ் சப்போர்ட் கொண்டிருக்கிறது.
ஆக்சிலரோமீட்டர் சென்சார் (Accelerometer Sensor), கைரோஸ்கோப் சென்சார் (Gyroscope Sensor) மற்றும் ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார் (Optical Heart Rate Sensor) வருகிறது. ஆகவே, ஹூவாய் ட்ரூசீன் 5.0 (HUAWEI TruSeen 5.0) சப்போர்ட் கொண்ட ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), ஹூவாய் ட்ரூஸ்லீப் 3.0 (HUAWEI TruSleep 3.0) கொண்ட ஸ்லீப் டிராக்கிங் (Sleep Tracking) வருகிறது.
மேலும், ஹூவாய் ட்ரூரிலாக்ஸ் (HUAWEI TruRelax) சப்போர்ட் கொண்ட ஸ்ட்ரெஸ் டிராக்கிங் (Stress Tracking) மற்றும் மென்சுரல் சைக்கிள் டிராக்கிங் (Menstrual Cycle Tracking) வருகிறது. இதுபோக 100 வொர்க்அவுட் மோட்கள் (Workout Modes) வருகின்றன. இதில் இன்டோர்/அவுட்டோர் ரன்னிங், சைக்கிளிங், ஸ்கிப்பிங் உள்ளிட்ட பல்வேறு மோட்கள் வருகின்றன.

மேலும், ஃபிட்ன்ஸ் டிராக்கிங் சப்போர்ட் வருகிறது. ஆகவே, டான்ஸ், கேம்ஸ் போன்றவற்றையும் டிராக் செய்து கொள்ளலாம். அதேபோல ஸ்விம்மிங் சப்போர்ட் கொடுக்க 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ட் (Water Resistant) வருகிறது. ஆகவே, 50 மீட்டர்கள் ஆழம் வரையில் அவுட்புட் கொடுக்கும். மேலும், இந்த ஹூவாய் பேண்ட் 8 மாடலில் வழக்கமாக ஸ்மார்ட் பீச்சர்கள் வருகின்றன.
ஆகவே, மியூசிக் கன்ட்ரோல் (Music Control), ரிமோட் கேமரா கன்ட்ரோல் (Remote Camera Control), குயிக் மெசேஜ் (Quick Message) மற்றும் காலிங், எஸ்எம்எஸ்களுக்காக ஸ்மார்ட் நோட்டிபிகேஷன் சப்போர்ட் வருகிறது. வெறும் 14 கிராம் எடை மட்டுமே கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட் பேண்ட் மூலம் ஸ்டான்டர்ட் மோடில் 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் பெறலாம்.
அதேபோல டிராக்கர் மோடில் 9 நாட்களுக்கும், ஆல்வேஸ்-ஆன் மோடில் 3 நாட்களுக்கும் பேக்கப் கொடுக்கப்படுகிறது. ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. ஆகவே, 45 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த ஹூவாய் பேண்ட் 8 மாடலில் மிட்நைட் பிளாக் (Midnight Black) மற்றும் சகுரா பிங்க் (Sakura Pink) ஆகிய 2 கலர்கள் விற்பனைக்கு வருகிறது.
கிட்டத்தட்ட பெரும்பாலான பிரீமியம் பீச்சர்களை கவர் செய்துள்ளது. இருப்பினும், ஹூவாய் பேண்ட் 8 மாடலின் விலை ரூ.4,699ஆக மட்டுமே இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த மாடலுக்கு பிறகு ஹூவாய் வாட்ச் ஃபிட் 2 மாடலானது, விரைவில் இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








