ஹூவாய் பேண்ட் 6: 96-க்கும் மேற்பட்ட ஒர்க்அவுட் மோடு உடன் அறிமுகம்..

|

சீன நிறுவனத்திடமிருந்து புதிய ஹூவாய் பேண்ட் 6 சாதனம் மலேசியாவில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பேண்ட் ஒரு பெரிய AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது மற்றும் இரண்டு வாரங்கள் வரை நீடித்து நிலைக்கும் பேட்டரி ஆயுளை கொண்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. புதிய பிட்னெஸ் பேண்ட் இதய துடிப்பு, தூக்க கண்காணிப்பு, எஸ்பிஓ 2 (இரத்த-ஆக்ஸிஜன்), மன அழுத்த கண்காணிப்பு போன்ற பிரீமியம் அம்சங்களுடன் வருகிறது.

ஹூவாய் பேண்ட் 6

ஹூவாய் பேண்ட் 6

ஹூவாய் பேண்ட் 6 இல் 96-க்கும் மேற்பட்ட ஒர்க்அவுட் மோடுகள் வழங்கப்படுகின்றன, மேலும் இது உள்வரும் அழைப்புகள் மற்றும் மெசேஜ்களுக்கான மொபைல் நோட்டிபிகேஷன் அறிவிப்புகளையும் உங்களுக்கு காண்பிக்கிறது. புதிய ஹூவாய் பேண்ட் 6 மலேசிய சந்தையில் RM 219 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் அம்பர் சன்ரைஸ், ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் கிராஃபைட் பிளாக் கலர் விருப்பங்களில் வருகிறது.

விற்பனை எப்போ?

விற்பனை எப்போ?

மலேசியாவில் ஏப்ரல் 4, ஞாயிற்றுக்கிழமை முதல் அதிகாரப்பூர்வ ஹூவாய் ஆன்லைன் ஸ்டோரில் ஹூவாய் பேண்ட் 6 விற்பனைக்குக் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. மற்ற சந்தைகளில் இந்த புதிய பிட்னெஸ் பேண்ட் எப்போது கிடைக்கும் என்பது பற்றிய தகவல்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. தற்போதைய நிலவரப்படி இந்திய சந்தையில் இந்த புதிய சாதனம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 ஆண்டு..130,000 மைல் பயணம்.. பூமிக்கு வந்த ரியுகு சிறுகோளின் ஒரு பகுதி.! பரபரப்பான ஆராய்ச்சி தகவல்கள்.!6 ஆண்டு..130,000 மைல் பயணம்.. பூமிக்கு வந்த ரியுகு சிறுகோளின் ஒரு பகுதி.! பரபரப்பான ஆராய்ச்சி தகவல்கள்.!

ஹூவாய் பேண்ட் 6 சிறப்பம்சம்

ஹூவாய் பேண்ட் 6 சிறப்பம்சம்

ஹூவாய் பேண்ட் 6 சாதனம் 1.47 இன்ச் AMOLED முழு வியூ கொண்ட 194x368 பிக்சல்கள் உடைய வண்ண டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 64 சதவீத டிஸ்பிளே-டு-பாடி விகிதத்துடன் வருகிறது. ஹூவாய் பேண்ட் 6 இன் டிஸ்பிளே அதன் முன்னோடி ஹூவாய் பேண்ட் 4 ஐ விட 148 சதவீதம் பெரியதாகக் கூறப்படுகிறது. புதிய பேண்ட் ஸ்கின் பிரின்ட்லி UV பாதுகாப்புடன் வரும் சிலிகான் ஸ்ட்ராப்பை கொண்டுள்ளது மற்றும் அதன் எடை வெறும் 18 கிராம் என்று நிறுவனம் கூறியுள்ளது. இது இரண்டு வாரங்கள் நீடித்து உழைக்கும் பேட்டரி ஆயுளை கொண்டுள்ளது.

10 நாட்கள் வரை பேட்டரி

10 நாட்கள் வரை பேட்டரி

அதிகபட்சமாக 10 நாட்கள் வரை நீடித்து அதிக பயன்பாட்டுடன் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. சார்ஜ் செய்த ஐந்து நிமிடங்களில் ஹூவாய் பேண்ட் 6 இரண்டு நாட்கள் பேட்டரி ஆயுளை வழங்குகிறது என்று நிறுவனம் கூறுகிறது. இது ஹூவாய் நிறுவனத்தின் ட்ரூசீன் 4.0 24x7 இதய துடிப்பு கண்காணிப்பு, ட்ரூஸ்லீப் 2.0 தூக்க கண்காணிப்பு மற்றும் நிறுவனத்தின் ட்ரூரிலாக்ஸ் அழுத்தக் கண்காணிப்பு தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. SpO2 இரத்த-ஆக்ஸிஜன் செறிவு கண்காணிப்புடன் வருகிறது.

முக்கியமாக இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

முக்கியமாக இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

ஹவாய் பேண்ட் 6 இல் மாதவிடாய் சுழற்சி கண்காணிப்பு அம்சமும், தொலைபேசி மூலம் இசையை கட்டுப்படுத்தும் திறனும் உள்ளது. ஆனால் இந்த இரண்டு அம்சங்களும் Android சாதனங்களில் மட்டுமே ஆதரிக்கப்படுகின்றன, iOS சாதனங்களில் ஆதரிக்காது என்பது கவனிக்கத்தக்கது. புளூடூத் வி 5.0 ஐ ஆதரிக்கிறது, மேலும் வழிசெலுத்தல் ஆதரவுக்கான பக்க பொத்தானைக் கொண்டுள்ளது. இது Android 6.0 அல்லது அதற்குப் பின் இயங்கும் தொலைப்பேசிகளுக்கும் iOS 9.0 அல்லது அதற்குப் பிறகும் இணக்கமானது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Huawei Band 6 Launched With Two-Week Battery Life : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X