பிரிச்சி விட்டாப்ல.. ரூ.2,500 ஆஃபர் ரேட்ல HUAWEI பேண்ட்.. 14 நாட்கள் பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஹூவாய் (HUAWEI) நிறுவனத்தின் அமோலெட் டிஸ்பிளே மாடல்களாக ஹூவாய் பேண்ட் 11 சீரிஸ் (HUAWEI Band 11 Series) சீரிஸ் இந்திய மார்கெட்டில் அறிமுகமாகி இருக்கிறது. அமோலெட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், 14 நாட்கள் பேட்டரி, ஹார்ட் ரேட் மானிட்டரிங், எஸ்பிஓ2 மானிட்டரிங் உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன.
இந்திய மார்கெட்டில் ஹூவாய் நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இப்போது, பேண்ட் மாடல்களும் பட்டையை கிளப்ப தொடங்கி இருக்கிறது. இதில் ஹூவாய் பேண்ட் 11 சீரிஸ் மாடல்கள் சேர்ந்துள்ளன. மெட்டல், ப்ரோ மாடல்கள் இதில் கிடைக்கின்றன. அறிமுக சலுகையில் கம்மியான விலைக்கு கிடைக்கின்றன.

ஹூவாய் பேண்ட் 11 சீரிஸ் அம்சங்கள் (HUAWEI Band 11 Series Specifications): 1.62 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 1,500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ப்ரோ மாடலில் 2,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆகவே, அவுட்டோரிலும் பக்கா டிஸ்பிளே அவுட்புட்டை இந்த ஹூவாய் பேண்ட் 11 சீரிஸ் கொடுக்கும்.
8.99 எம்எம் தடிமன் கொண்டுள்ளது. ஹூவாய் பேண்ட் 11 மெட்டல் மற்றும் ஹூவாய் பேண்ட் ப்ரோ மாடல்களில் அலுமினியம் அலாய் கேஸ் (Aluminium Alloy Case) ஆகவே டியூரபிலிட்டி பக்காவாக இருக்கும். எச்ஆர்வி ஸ்லீப் டிராக்கிங் (HRV Sleep Tracking) கிடைக்கிறது. ஹார்ட் ரேட் மானிட்டரிங் (Heart Rate Monitoring) மற்றும் எஸ்பிஓ2 மானிட்டரிங் (SpO₂ Monitoring) கிடைக்கிறது.
ஸ்ட்ரெஸ் லெவல் டிராக்கிங் (Stress Level Tracking), ஸ்லீப் மானிட்டரிங் (Sleep Monitoring) கிடைக்கிறது. மேலும், பல்ஸ் வேவ் அரித்மியா அனாலிசிஸ் (Pulse Wave Arrhythmia Analysis) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ரன்னிங், ஜாக்கிங், சைக்கிளிங் உள்ளிட்ட 100+ வொர்க்அவுட் மோட்களை (Workout Modes) இந்த ஹூவாய் பேண்ட் 11 சீரிஸ் கொடுத்துள்ளது.
இன்டலிஜென்ட் வொர்க்அவுட் மானிட்டரிங் மற்றும் (Intelligent Workout Monitoring) மற்றும் பர்ஃபாமென்ஸ் அனாலிசிஸ் (Performance Analysis) கிடைக்கிறது. ஆகவே, வொர்க்அவுட் செய்யும்போது, அதன் டேட்டாக்கள் ஆட்டோமேட்டிக்காக ஸ்டோர் செய்யப்படும். இதை தேவைப்படும்போது, எடுத்து பார்த்து கொள்ளலாம். இதற்கான பிரத்யேக ஆப் இருக்கிறது.
இந்த ஆப்பை ஆண்ட்ராய்டு (Android) அல்லது ஐஓஎஸ் (iOS) டிவைஸ்களில் பயன்படுத்தி கொள்ளலாம். ஹூவாய் பேண்ட் 11 ப்ரோ மாடலில் அட்டானமஸ் ஜிஎன்எஸ்எஸ் (Autonomous GNSS) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. 100+ வாட்ச் பேஸ்கள் (Watch Faces) கிடைக்கின்றன. இதை கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும். ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே (Always-On Display) உள்ளது.
மேலும், கஸ்டமைஸபிள் விட்ஜெட் (Customizable Widgets) கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 14 நாட்களுக்கு இந்த ஹூவாய் பேண்ட் 11 சீரிஸ் மாடல்களில் பேட்டரி பேக்கப் கிடைக்கும். ஹெவி யூசேஜ் செய்தால், 8 நாட்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். மேக்னட்டிக் ஃபாஸ்ட் சார்ஜிங் (Magnetic Fast Charging) கொடுக்கப்பட்டு உள்ளது.
ஹூவாய் பேண்ட் 11 மாடலின் விலை ரூ.6,499ஆக இருக்கிறது. இருப்பினும், ரூ,2,500 அறிமுக சலுகை போக ரூ.3,999 விலைக்கு கிடைக்கிறது. ஹூவாய் பேண்ட் 11 ப்ரோ மெட்டல் மாடலின் விலை ரூ.7,999ஆக இருக்கிறது. அறிமுக சலுகையுடன் ரூ.4,799 விலைக்கு கிடைக்கிறது. ப்ரோ மாடலின் விலை ரூ.8,999ஆக இருக்கிறது. அறிமுக சலுகை போக ரூ.5,599 விலைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications