விட்ராதீங்க ப்ரோ.. AMOLED டிஸ்பிளே.. 5ATM ரேட்டிங்.. 14 நாட்கள் பேட்டரி.. FAST சார்ஜிங்.. எந்த மாடல்?
ஜாக்கிங் மட்டுமல்லாமல், சைக்கிளிங், ஸ்விம்மிங் போன்ற ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் தேவைப்படும் நேரத்திலும் பக்கா அவுட்புட் கொடுக்கும் ஸ்மார்ட்பேண்ட் தேடிக்கொண்டிருக்கும் கஸ்டமர்களுக்கு ஹூவாய் பேண்ட் 10 (HUAWEI Band 10) பக்காவாக களமிறங்கி இருக்கிறது. 5ATM ரேட்டிங் ரெசிஸ்டன்ட் மட்டுமல்லாமல், ஆட்டோ டிடெக்சன் ஆக்டிவிட்டிகளையும் கொடுக்கிறது. அமோலெட் டிஸ்பிளே, ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற மற்ற பீச்சர்களிலும் பின்னியெடுக்கிறது. இந்த ஹூவாய் மாடலின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது பார்க்கலாம்.
கைக்கு கம்போர்ட் மற்றும் லைட் வெயிட் கொடுக்கும்படி அலுமினியம் அலாய் கேஸ் (Aluminium Alloy Case) மற்றும் ஃப்ளோரோஎலாஸ்டோமர் ஸ்ட்ராப் (Fluoroelastomer Straps) பாடி கிடைக்கிறது. இதில் மேட் பிளாக் (Matte Black), ஒயிட் (White), கிரீன் (Green), ப்ளூ (Blue) மற்றும் பர்பிள் (Purple) ஆகிய கலர்கள் கிடைக்கிறது. பாலிமர் மெட்டீரியல் கேஸ் கொண்ட பிளாக் மற்றும் பிங்க் கலர்களும் விற்பனைக்கு கிடைக்கின்றன.

ஹூவாய் பேண்ட் 10 அம்சங்கள் (HUAWEI Band 10 Specifications): இந்த ஸ்மார்ட்பேண்ட் மாடலில் 1.47 (194 × 368 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 282 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே (Always on Display) சப்போர்ட் கிடைக்கிறது. இதுபோக ஃபுல் ஸ்கிரீன் டச் (Full Screen Touch) கன்ட்ரோல் கிடைக்கிறது. மேலும், சைடு பட்டன் (Side Button) கன்ட்ரோல் கூடுதலாக கிடைக்கிறது.
மேக்னட்டிக் சார்ஜிங் போர்ட் (Magnetic Charging Port) மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கிடைக்கிறது. 14 நாட்களுக்கு அதிகபட்ச பேக்கப் கிடைக்கும். ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே மோடில் பயன்படுத்தினால், 3 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். ஹார்ட் ரேட் மானிட்டரிங் ஆன் செய்து பயன்படுத்தினால், 8 நாட்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். 45 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.
ஸ்விம்மிங் பிரியர்கள் விரும்படி 5ATM ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இதன் மூலம் 50 மீட்டர்கள் ஆழம் வரையில் 10 நிமிடங்களுக்கு வாட்டர்-பிரசர் டியூரபிலிட்டி கிடைக்கிறது. ஃபிரஸ் வாட்டரில் பயன்படுத்திறகு பிறகு உதறினால் போதும். ஆனால், ஓசன் வாட்டரில் பயன்படுத்தினால், உலர வைக்க வேண்டும். இப்போது, இந்த பேண்ட் மாடலின் ஹெல்த் மானிட்டர்களுக்கு வருவோம்.

ஆக்சிலரோமீட்டர் சென்சார், கைரோஸ்கோப் சென்சார் மற்றும் மேக்னட்டோமீட்டர் சென்சார்களை கொடுக்கும்படி 9 ஆக்சிஸ் ஐஎம்யு சென்சார் கிடைக்கிறது. இதுபோக ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார் (Optical Heart Rate Sensor), ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor) கிடைக்கிறது. இந்த சென்சார்கள் மூலம் ஹார்ட்ரேட் மானிட்டர், பிளட் ஆக்ஸிஜன் லெவல் மானிட்டர் கிடைக்கிறது.
இதுபோக ஸ்லீப் டிராக்கர், ஸ்ட்ரெஸ் லெவல் டிராக்கர், மென்சுரல் சைக்கிள் டிராக்கர்களை பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக ரன்னிங், ஸ்விம்மிங், சைக்கிளிங் போன்ற முக்கிய ஆக்டிவிட்டிகள் ஆட்டோ டிடெக்சன் செய்துகொள்ளலாம். இவை உள்பட 100 வொர்க் அவுட் மோட்களை இந்த ஹூவாய் பேண்ட் 10 மாடலில் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், ஏகப்பட்ட யூடிலிட்டி பீச்சர்களை கொடுக்கிறது.
ஆகவே, கால் நேட்டிபிகேஷன், மல்டி-கலர்டு ஃபிளாஷ்லைட், டைமர், ஆடியோ கன்ட்ரோ, ஃபைண்ட் மை போன், மூன் பேஸ், ஹார்ட்ரேட் பாஸ்ட்காஸ்ட் போன்றவற்றை பயன்படுத்தலாம். பாலிமர் கேஸ் வேரியண்ட்டானது, ரூ.3,999 விலையிலும், அலுமினியம் கேஸ் வேரியண்ட்டானது ரூ.4,499 விலையிலும் அறிமுகமாகி இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் முறையே ரூ.3,699 மற்றும் ரூ.4,199 விலைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications