அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2e (Amazfit GTS 2e) இந்தியாவில் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா?
அமேஸ்ஃபிட் ஜிடிஆர் 2e (Amazfit GTR 2e) மற்றும் அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2e (Amazfit GTS 2e) என்ற இரண்டு ஸ்மார்ட்வாட்ச்களை ஹுவாமி நிறுவனம் இரண்டு நாட்களுக்கு முன்பு சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. ஹுவாமி நிறுவனத்தின் அணியக்கூடிய பட்டியலின் கீழ் கடந்த செப்டம்பர் மாதம் ஜி.டி.எஸ் 2 மற்றும் ஜி.டி.ஆர் 2 ஆகிய ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம் செய்யப்பட்டன, அவற்றின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2e
அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2e (Amazfit GTS 2e) ஸ்மார்ட்வாட்ச் வரும் டிசம்பர் 21ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் தற்பொழுது அறிவித்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் அமேசான் மற்றும் அமேஸ்ஃபிட் வலைத்தளத்தில் ரூ.12,999 என்ற விலையில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்தபடியாக அமேஸ்ஃபிட் ஜிடிஆர் 2e (Amazfit GTR 2e) சாதனமும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மார்ட்வாட்ச் பற்றிய முழு விபரம்
இந்த இரண்டு ஸ்மார்ட்வாட்ச் பற்றிய முழு விபரத்தைப் பார்க்கலாம், நீண்ட பேட்டரி ஆயுளுடன் இன்னும் சில மேம்பாடுகளுடன் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமேஸ்ஃபிட் ஜி.டி.எஸ் 2e ஸ்மார்ட்வாட்ச் 799 யுவான் என்ற விலையில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ .8,986 ஆகும். அமேஸ்ஃபிட் ஜிடிஆர் 2e விலை 799 யுவான் ஆகும்.

வண்ண விருப்பங்கள்
ஸ்மார்ட்வாட்ச்கள் இரண்டும் அமேஸ்ஃபிட் வலைத்தளத்தின் மூலம் ஜே.டி.யில் முன்கூட்டியே ஆர்டர் செய்யப்படுகின்றது. அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2e அப்சிடியன் பிளாக், ரோலண்ட் பர்பில் மற்றும் டார்க் நைட் கிரீன் வண்ணங்களில் வருகிறது. அமேஸ்ஃபிட் ஜிடிஆர் 2e அப்சிடியன் பிளாக், டால்பின் கிரே மற்றும் ஐஸ் லேக் கிரீன் வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வருகிறது. இந்தியாவிலும் இந்த வாட்ச் எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்பிளே விபரம்
அமேஸ்ஃபிட் ஜிடிஆர் 2e, 1.39' இன்ச் வட்ட AMOLED டிஸ்பிளே 454 x 454 பிக்சல்கள் தீர்மானம் கொண்டது, அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2e, 1.65' இன்ச் அமோலேட் டிஸ்ப்ளே 348 x 442 பிக்சல்கள் மற்றும் 341 பிபி பிக்சல் அடர்த்தி கொண்டது. அமேஸ்ஃபிட் ஜிடிஎஸ் 2e 246 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. ஒரே சார்ஜில் 14 நாட்கள் நீடித்து நிலைக்கும் பேட்டரியை இது கொண்டுள்ளது.

பேட்டரி
அமேஸ்ஃபிட் ஜிடிஆர் 2e, 471 எம்ஏஎச் பேட்டரியை ஒரே சார்ஜில் 24 நாட்கள் வரை பேட்டரி ஆயுளை தருகிறது. ஸ்மார்ட்வாட்ச் இரண்டும் ஸ்லீப் மற்றும் ஆக்ட்டிவிட்டி கண்காணிப்புடன் வருகின்றது. இரத்த ஆக்ஸிஜன் கண்காணிப்பு அம்சம் மற்றும் 24 மணி நேர இதய துடிப்பு கண்காணிப்புக்கு, பயோட்ராகர் பிபிஜி இதய துடிப்பு சென்சாரும் இதில் உள்ளது.

NFC, GPS மற்றும் GLONASS அம்சம்
இந்த இரண்டு புதிய அமேஸ்ஃபிட் ஸ்மார்ட் வாட்ச்களும் 5ATM சான்றிதழுடன் வருகிறது. அதாவது இவை 50 மீட்டர் ஆழம் வரை நீருக்குள் பாதுகாப்பாக இருக்கும் வாட்டர் ப்ரூப் அம்சத்துடன் வருகிறது. இவற்றில் 4 ஜிபி உள் சேமிப்பு, ஜி.பி.எஸ், மியூசிக் மற்றும் அழைப்புகளைப் பெறுவதற்கான ஆதரவு ஆகியவை உள்ளது. இத்துடன் புளூடூத் 5.0 LE, NFC, GPS மற்றும் GLONASS ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications