Amazfit Bip S: மலிவு விலையில் அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச் வாங்க நல்ல சாய்ஸ்! விலை என்ன தெரியுமா?

|

ஷியோமி நிறுவனத்தின் ஆதரவு நிறுவனமான ஹுவாமி, வரும் ஜூன் 3 ஆம் தேதி தனது அமேஸ்ஃபிட் பிப் S ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்போவதாக தற்பொழுது அறிவித்துள்ளது. இந்த புதிய சாதனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று ஹுவாமி கூறியுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் விபரங்களைப் பார்க்கலாம். பட்ஜெட் விலையில் நல்ல ஸ்மார்ட் வாட்ச் வாங்க இது நல்ல சாய்ஸ்.

ஹுவாமி அமேஸ்ஃபிட் பிப் S ஸ்மார்ட்வாட்ச்

ஹுவாமி அமேஸ்ஃபிட் பிப் S ஸ்மார்ட்வாட்ச்

ஹுவாமி நிறுவனத்தின் இந்த புதிய அமேஸ்ஃபிட் பிப் S ஸ்மார்ட்வாட்ச் முதல் முதலில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற CES 2020 இல் நிறுவனத்தின் சில ஸ்மார்ட் தயாரிப்புகளுடன் காட்சிப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய அமேஸ்ஃபிட் பிப் S ஸ்மார்ட்வாட்ச்சின் சுவாரஸ்யமான அம்சங்களைப் பற்றிக் கூறுகையில், இந்த சாதனம் 40 நாள் பேட்டரி ஆயுளுடன் அறிமுகமாகிறது.

அமேஸ்ஃபிட் பிப் S ஸ்மார்ட்வாட்ச் டிஸ்பிளே

அமேஸ்ஃபிட் பிப் S ஸ்மார்ட்வாட்ச் டிஸ்பிளே

புதிய அமேஸ்ஃபிட் பிப் S ஸ்மார்ட்வாட்ச் கலர் டிஸ்பிளே ஸ்கிரீன் உடன், தனிப்பட்ட செயல்பாடு கண்காணிப்பு அம்சம் மற்றும் பலவிதமான ஸ்போர்ட்ஸ் மோடு அம்சம் போன்று பல அம்சங்களைக் கொண்டுள்ளது. புதிய அமேஸ்ஃபிட் பிப் S ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தில் இன்பில்ட் ஜி.பி.எஸ் டிராக்கர் அம்சமும் உள்ளது. அமாஸ்ஃபிட் பிப் எஸ் ஸ்மார்ட்வாட்ச் ஜூன் 3 முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FASTag பயனர்கள் உஷார்! உடனே இதை செக் பண்ணுங்க - மத்திய அரசு அதிரடி உத்தரவு!FASTag பயனர்கள் உஷார்! உடனே இதை செக் பண்ணுங்க - மத்திய அரசு அதிரடி உத்தரவு!

அமாஸ்ஃபிட் பிப் S சிறப்பம்சங்கள்

அமாஸ்ஃபிட் பிப் S சிறப்பம்சங்கள்

புதிய அமேஸ்ஃபிட் பிப் S ஸ்மார்ட்வாட்ச் நிறுவனத்தின் வலைத்தளத்தைத் தகவலின்படி, இந்த ஸ்மார்ட்வாட்ச் பாலிகார்பனேட்டில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த புதிய அமேஸ்ஃபிட் பிப் S ஸ்மார்ட்வாட்ச் ஸ்ட்ராப் இல்லாமல் வெறும் 19 கிராம் மட்டுமே எடையைக் கொண்டுள்ளது. அதேபோல், வாட்ச் ஸ்ட்ராப்புடன் சுமார் 31 கிராம் வரை எடையைக் கொண்டுள்ளது என்று ஹுவாமி தெரிவித்துள்ளது.

அமேஸ்ஃபிட் பிப் S ஸ்மார்ட்வாட்ச்சின் டிசைன்

அமேஸ்ஃபிட் பிப் S ஸ்மார்ட்வாட்ச்சின் டிசைன்

புதிய அமேஸ்ஃபிட் பிப் S ஸ்மார்ட்வாட்ச்சின் டிசைன் பற்றிக் கூறுகையில் இதன் செவ்வக டயல் அளவு 42x35.3x11.4 மிமீ ஆகும். அமேஸ்ஃபிட் பிப் S இணைப்பிற்காக புளூடூத் V5.0 பயன்படுத்துகிறது. அதேபோல் இருப்பிட கண்காணிப்புக்கு க்ளோனாஸ் (GLONASS) அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. இது 1.28' இன்ச் கொண்ட டிரான்ஸ்ஃபெக்டிவ் கலர் TFT உடன் கூடிய ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளேயுடன், 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் வருகிறது.

கணவர் சென்ற இடத்தை காட்டிக்கொடுத்த Google Maps - மனைவியிடம் சிக்கியது எப்படி தெரியுமா?கணவர் சென்ற இடத்தை காட்டிக்கொடுத்த Google Maps - மனைவியிடம் சிக்கியது எப்படி தெரியுமா?

40 நாட்கள் நீடித்து நிலைக்கும் பேட்டரி

40 நாட்கள் நீடித்து நிலைக்கும் பேட்டரி

அமேஸ்ஃபிட் பிப் S ஸ்மார்ட்வாட்ச் 200 எம்ஏஎச் பேட்டரியுடன் 40 நாட்கள் நீடித்து நிலைக்கு ஆயுளுடன் வருகிறது. சுமார் 2.5 மணிநேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும் என்று ஹுவாமி கூறியுள்ளது. அமேஸ்ஃபிட் பிப் S ஸ்மார்ட்வாட்ச்சின் வழக்கமான பயன்பாட்டின் கீழ் இந்த ஸ்மார்ட்வாட்ச் 15 நாட்கள் ஆயுளுடன் செயல்படும் என்றும் ஹுவாமி கூறியுள்ளது. இன்னும் பல முதன்மையான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் வரும் 3ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.

அமாஸ்ஃபிட் பிப் S விலை

அமாஸ்ஃபிட் பிப் S விலை

Amazfit Bip S ஸ்மார்ட்வாட்ச் CES 2020 நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட பொழுது இதன் விலை சுமார் $ 69.90 டாலர்கள் என்று நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த புதிய அமேஸ்ஃபிட் பிப் S ஸ்மார்ட்வாட்ச் இந்தியச் சந்தையில் சுமார் ரூ.5,200 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் கார்பன் பிளாக், ரெட் ஆரஞ்சு, வார்ம் பிங்க் மற்றும் வைட் ராக் உள்ளிட்ட நான்கு வெவ்வேறு நிறங்களில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Huami Amazfit Bip S Smartwatch Launching In India On June 3rd : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X