கையடக்க போட்டோ பிரிண்டர்.! எச்.பி ஸ்பிராக்கெட் பிரிண்டர்.! விலை இவ்வளவு தானா?

|

எச்.பி நிறுவனம் தனது புதிய போர்ட்டபிள் போட்டோ கையடக்க பிரிண்டர் கருவியை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த கையடக்க போட்டோ பிரிண்ட்டருக்கு "ஸ்பிராக்கெட் பிளஸ் பிரிண்டர்" என்று பெயரிட்டுள்ளது எச்.பி நிறுவனம். தற்பொழுது இந்த எச்.பி ஸ்பிராக்கெட் பிரிண்டர் அமேசான் வலைத்தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.

ஜின்க் ஸிரோ இன்க் தொழில்நுட்பம்

ஜின்க் ஸிரோ இன்க் தொழில்நுட்பம்

ஜின்க் ஸிரோ இன்க் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிக துல்லியமாக வண்ணத்துடன் உடனடியாக பிரிண்ட் செய்து தருகிறது. இந்த ஸ்பிராக்கெட் பிளஸ் பிரிண்டர் 2.3' X 3.4' அளவு போட்டோக்களை உடனயாக பிரிண்ட் செய்கிறது.

ஸ்பிராக்கெட் பிளஸ் பிரிண்டர்

ஸ்பிராக்கெட் பிளஸ் பிரிண்டர்

ஸ்பிராக்கெட் பிளஸ் பிரிண்டர் மூலம் உங்கள் மொபைல் இல் எடுக்கப்படும் புகைப்படம் மற்றும் சமூக வலைத்தளங்களில் உள்ள புகைப்படங்களை மிக எளிதில் பிரிண்ட் செய்ய உதவுகிறது.ஸ்பிராக்கெட் செயலி மூலம் உங்களின் மொபைல் போன்னுடன் ஸ்பிராக்கெட் பிளஸ் பிரிண்டரை இணைத்து ப்ளூடூத் மூலம் போட்டோக்களை பிரிண்ட் செய்துகொள்ளலாம்.

வாட்டர் ப்ரூப் பிரிண்ட்

வாட்டர் ப்ரூப் பிரிண்ட்

பெரிய புகைப்படங்களை மிக விரைவில் மெல்லிய காகிதத்தில் பிரிண்ட் செய்து தருகின்றது. பிரிண்ட் செய்யப்படும் புகைப்படங்கள் வாட்டர் ப்ரூப் மற்றும் கிழிக்க முடியாத பிரத்தியேக காகிதத்தில் பிரிண்ட் செய்யப்படுகின்றதென்பது குறிப்பிடத்தக்கது.

விலை

விலை

அமேசான் வலைத்தளத்தில் இந்த ஸ்பிராக்கெட் பிளஸ் பிரிண்டர் வெறும் ரூ.8,999 விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஸ்பிராக்கெட் பிரிண்டர்காக தயாரிக்கப்பட்ட பிரத்தியேக காகிதங்களும் அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. உங்களுக்கான ஸ்பிராக்கெட் பிரிண்டரை உடனே வாங்க அமேசான் தளத்திற்கு செல்லுங்கள்.

Best Mobiles in India

English summary
HP unveils world’s thinnest portable photo printer Sprocket Plus : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X