Home
Gadgets

தலைவன் வேற மாறி.. 12 இன்ச் டிஸ்பிளே.. 4 ஸ்பீக்கர்கள்.. 8GB ரேம்.. அட்ரினோ GPU.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் டேப்லெட்டை எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு ஏற்றபடி எச்பி ஓம்னிபேட் 12 (HP OmniPad 12) களமிறங்கி இருக்கிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட்டுடன் பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி இருக்கிறது. இதுகுறித்த விவரங்களை பார்க்கலாம்.

லேப்டாப்புக்கு நிகரான பீச்சர்களுடன் டேப்லெட் வாங்க திட்டமிட்டால், இந்த எச்பி ஓம்னிபேட் 12 பக்கா ஆப்ஷனாக இருக்கும். சிப்செட் மட்டுமல்லாமல், ஜிபியு உள்ளிட்ட ஒட்டுமொத்த பர்ஃபாமென்ஸ் பக்கத்திலும் பட்டையை கிளப்பி இருக்கிறது. அதேபோல ஏஐ சந்தாவை கொடுத்துள்ளது. பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங்கிலும் மிரளவிடுகிறது.

தலைவன் வேற மாறி.. 12 இன்ச் டிஸ்பிளே.. 4 ஸ்பீக்கர்கள்.. 8GB ரேம்!

எச்பி ஓம்னிபேட் 12 அம்சங்கள் (HP OmniPad 12 Specifications): 6 கோர்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 (6 cores Qualcomm Snapdragon 6 Gen 3) சிப்செட்டை கொடுத்துள்ளது. குவால்காம் அட்ரினோ ஜிபியு (Qualcomm Adreno GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. 12 இன்ச் (2000 x 1200 பிக்சல்கள்) மல்டி-டச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

இந்த டிஸ்பிளேவுக்கு 2K ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வெளியாகி இருக்கிறது. மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த எச்பி ஓம்னிபேட் 12 கிடைக்கிறது. 13 எம்பி மெயின் கேமரா உள்ளது.

8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. எச்டிஆர் போட்டோ மோட் (HDR Photo Mode) கொண்ட கேமராவாக இது இருக்கிறது. டிஸ்பிளேவுக்கு ஏற்ப பிரீமியம் ஆடியோ பீச்சர்களுடன் வருகிறது. ஆகவே, குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) கொடுக்கப்பட்டு உள்ளன. டுயல் ஹை-எஸ்என்ஆர் மைக்ரோபோன் அரேய் (Dual High-SNR Microphone Array) கொடுக்கப்பட்டு உள்ளது.

இதுபோக டிடிஎஸ்:எக்ஸ் அல்ட்ரா (DTS:X Ultra) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. எச்பி ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 2-செல் 31Wh லித்தியம்-அயன் பாலிமர் பேட்டரி கிடைக்கிறது. 90 நிமிடங்களில் 90 சதவீத சார்ஜிங் செய்து கொள்ள முடியும். சாப்ட் கவர் கீபோர்டு மற்றும போகோ பின் கனெக்டர் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பேட் 600 கிராம் எடை கொடுத்துள்ளது.

590 கிராம் எடையில் கீபோர்ட் கிடைக்கிறது. ஆக்சிலரோமீட்டர் (Accelerometer), கைரோஸ்கோப் (Gyroscope), ஹால் எபெக்ட் சென்சார் (Hall Effect Sensor) மற்றும் ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது. 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.48,999ஆக இருக்கிறது. 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.54,999 ஆக இருக்கிறது.

டெனிம் ப்ளூ (Denim Blue), மீட்டியர் சில்வர் (Meteor Silver) கலர்களில் கிடைக்கிறது. எச்பி ஆன்லைன் ஸ்டோர், அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. ரூ.5,000 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் 1 வருடத்துக்கான ஏஐ சந்தா கிடைக்கிறது. இதில் ஜிபிடி 5, கிளவுட் 4, ஜெமினி 2.5 உள்ளிட்டவையும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

Best Mobiles in India

English summary
HP OmniPad 12 With With Snapdragon 6 Gen 3 Launched in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X