Home
Gadgets

காஸ்ட்லீ iPad-களுக்கு ஆப்பு அடித்த HP.. கழட்ட கூடிய Keyboard, டச் டிஸ்பிளே.. கம்மி விலையில் புது லேப்டாப்!

எச்பி (HP) நிறுவனம், இந்தியாவில் தனது எச்பி ஆம்னிபேட் 12 (HP OmniPad 12) மாடலை அறிமுகம் செய்துள்ளது. முதல் முறையாக லேப்டாப்பை பயன்படுத்துவோர்கள், மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய லேப்டாப், பயனர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப டேப்லெட் மற்றும் லேப்டாப் மோட்களுக்கு இடையில் மாற அனுமதிக்கும் பிரிக்கக்கூடிய கீபோர்ட்டை (Detachable Keyboard) கொண்டுள்ளது என்பது கூடுதல் சுவாரசியம்!

எச்பி ஆம்னிபேட் 12 முக்கிய அம்சங்கள்: எச்பி ஆம்னிபேட் 12 லேப்டாப் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸரில் ( Qualcomm Snapdragon processor) இயங்குகிறது. இது கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் (Google Android operating system) இயங்குவதோடு சேர்த்து, 12-இன்ச் டச் டிஸ்பிளேவையும் (12-inch touch display) கொண்டு உள்ளது.

கழட்ட கூடிய Keyboard, டச் டிஸ்பிளே.. கம்மி விலையில் புது HP லேப்டாப்!

ஒரே சார்ஜில் எச்பி ஆம்னிபேட் 12 ஆனது 18 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்பை (18 Hours Battery Life) வழங்கும் என்று எச்பி நிறுவனம் கூறுகிறது. எச்பி ஆம்னிபேட் 12 மாடலின் அறிமுகம், எச்பி நிறுவனம் டேப்லெட் பிரிவில் நுழைவதையும் குறிக்கிறது.

இந்தியாவில் எச்பி ஆம்னிபேட் 12 விலை மற்றும் விற்பனை: இந்தியாவில் எச்பி ஆம்னிபேட் 12 மாடலின் விலை ரூ.48,999 இல் இருந்து தொடங்குகிறது. இது வருகிற ஜூன் மாதம் முதல் எச்பி நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோர், அமேசான் இந்தியா, ரிலையன்ஸ் மற்றும் எச்பி வேர்ல்ட் ஸ்டோர்களில் விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரே ஒரு டெனிம் ப்ளூ கலர் ஆப்ஷனில் மட்டுமே வாங்க கிடைக்கும்.

எச்பி ஆம்னிபேட் 12 விரிவான அம்சங்கள்: எச்பி ஆம்னிபேட் 12 ஆனது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்குகிறது, ஆனால் அதன் சரியான வெர்ஷனை எச்பி நிறுவனம் குறிப்பிடவில்லை. இது 16:10 ரேஷியோ மற்றும் 90ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் உடன் கூடிய 12-இன்ச் 2கே (1,200 x 2,000 பிக்சல்கள்) மல்டி-டச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

இந்த டிஸ்ப்ளே 400 நிட்ஸ் வரையிலான ப்ரைட்னஸை வழங்கும் என்று கூறப்படுகிறது. இந்த டேப்லெட்டில், 2.40GHz வரையிலான பிரெக்வன்சி உடன் கூடிய ஆறு கோர்களை கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் SM6475Q சிப் உள்ளது. இந்த சிப்செட், குவால்காம் அட்ரினோ ஜிபியு, 8ஜிபி LPDDR5 ரேம் மற்றும் 128ஜிபி UFS இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடவே மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர் மூலம் இன்டர்னல் ஸ்டோரேஜை விரிவாக்கும் ஆதரவும் உள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை எச்பி ஆம்னிபேட் 12 மாடலின் பின்புறத்தில், 13-மெகாபிக்சல் கேமராவை உள்ளது. செல்பீகள் மற்றும் வீடியோ கால்களுக்காக இதில் 8-மெகாபிக்சல் செல்பீ கேமராவும் உள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி இந்த டேப்லெட், போகோ பின்கள் (POGO Pins) வழியாக இணைக்கப்படும் முழு அளவு, பிரிக்கக்கூடிய மைக்கா சில்வர் மென் கவர் கொண்ட கீபோர்டுடன் (full-size detachable mica silver soft cover keyboard) வருகிறது. இதில் நேவிகேஷனுக்காக ஒரு எச்பி இமேஜ்பேடும் உள்ளது

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, எச்பி ஆம்னிபேட் 12-ல் ப்ளூடூத் 5.2, வைஃபை 6E, யுஎஸ்பி 2.0 டைப்-சி போர்ட் மற்றும் 3.5மிமீ ஜாக் ஆகியவைகள் உள்ளன. இதில் குவாட் ஸ்பீக்கர்கள், டூயல் மைக்ரோஃபோன்கள் மற்றும் DTS:X அல்ட்ரா ஆதரவு ஆகியவைகளும் உள்ளன.

பேட்டரியை பொறுத்தவரை எச்பி ஆம்னிபேட் 12 மாடலில் 2-செல் 31Wh லித்தியம்-அயன் பாலிமர் பேட்டரி உள்ளது, இதை உடன் வரும் 33W பவர் அடாப்டரை பயன்படுத்தி சார்ஜ் செய்யலாம். ஒரே சார்ஜில் இந்த டேப்லெட் 18 மணிநேரம் வரை பேட்டரி லைஃப் பை வழங்கும் என்று எச்பி நிறுவனம் கூறுகிறது. இந்த டேப்லெட்டின் அளவு 283x178.1x7.3மிமீ ஆகவும், கீபோர்டு அமைப்பின் அளவு 286.8x184.2x18.45மிமீ ஆகவும் உள்ளது. டேப்லெட்டின் எடை 600 கிராம் ஆகவும், பிரிக்கக்கூடிய கீபோர்டின் எடை 650 கிராம் ஆகவும் உள்ளது.

Best Mobiles in India

English summary
HP OmniPad 12 With Detachable Keyboard To Switch Between Laptop Tablet Launched in India Price Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X