Home
Gadgets

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.2,500 ஆஃபர் ரேட்ல 12 இன்ச் டிஸ்பிளே.. 4 ஸ்பீக்கர்கள்.. 13MP கேமரா.. எந்த மாடல்?

லேப்டாப் போல பெரியதாக இருக்கக் கூடாது. ஆனால், அதில் செய்யக்கூடிய அத்தனை வேலைகளை செய்யும்படி டேப்லெட் மாடல் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு எச்பி ஓம்னிபேட் 12 (HP OmniPad 12) பக்கா ஆப்ஷனாக இருக்கும். இப்போது, தள்ளுபடி விலைக்கு கிடைப்பதால், விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகிறது.

இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வை-பை வேரியண்ட்டின் விலை ரூ.48,990 ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,500 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.46,490 விலைக்கு இந்த எச்பி ஓம்னிபேட் 12 மாடலை வாங்கி கொள்ளலாம்.

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.2,500 ஆஃபர் ரேட்ல 12 இன்ச் டிஸ்பிளே!

எச்பி ஓம்னிபேட் 12 அம்சங்கள் (HP OmniPad 12 Specifications): 12 இன்ச் (2000 x 1200 பிக்சல்கள்) மல்டி-டச் டிஸ்பிளேவை இந்த எச்பி ஓம்னிபேட் 12 கொடுத்துள்ளது. 2K ரெசொலூஷன் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட டிஸ்பிளேவாக கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்டுள்ளது.

6 கோர்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 (6 Cores Qualcomm Snapdragon 6 Gen 3) சிப்செட் கொண்ட மாடலாக இந்த எச்பி ஓம்னிபேட் 12 இருக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பிரீமியம் அவுட்புட் கொடுக்க குவால்காம் அட்ரினோ ஜிபியு (Qualcomm Adreno GPU) கிராபிக்ஸ் கார்டு பேக் செய்யப்பட்டு இருக்கிறது. 13 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது.

செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி கேமராவை இந்த எச்பி ஓம்னிபேட் 12 கொடுக்கிறது. இதுவொரு வை-பை மாடலாக இருப்பதால், சிம் கார்டு சிலாட் கொடுக்கப்படவில்லை. இருப்பினும், மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கிடைக்கிறது. எச்டிஆர் போட்டோ மோட் (HDR Photo Mode) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பேட் மாடலாக இருப்பதால், ஓடிடி மற்றும் கேமிங் பிரியர்களுக்கு பிரீமியம் ஃபீல் கொடுக்க குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) பேக் செய்யப்பட்டு உள்ளன. இதுபோக டிடிஎஸ்:எக்ஸ் அல்ட்ரா (DTS:X Ultra) சப்போரட் கொண்ட மாடலாகவும் இந்த எச்பி ஓம்னிபேட் 12 இருக்கிறது. டுயல் மைக்ரோபோன் (Dual Microphone) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

31Wh லித்தியம்-அயன் பாலிமர் பேட்டரியை இந்த எச்பி ஓம்னிபேட் 12 கொடுத்துள்ளது. 2-செல் மாடலாக இருப்பதால், ஃபாஸ்ட் சார்ஜிங் பக்காவாக இருக்கிறது. எச்பி ஃபாஸ்ட் சார்ஜிங் (HP Fast Charging) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, வெறும் 90 நிமிடங்களில் 0 - 90 சதவீத சார்ஜிங் செய்து கொள்ளலாம்.

இந்த பேட்டரியுடன் 600 கிராம் எடை கொடுத்துள்ளது. ஆக்சிலரோமீட்டர் (Accelerometer), கைரோஸ்கோப் (Gyroscope) மற்றும் ஹால் எபெக்ட் சென்சார் (Hall Effect Sensor) உள்ளது. மேலும், ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor) கிடைக்கிறது. டெனிம் ப்ளூ (Denim Blue) மற்றும் மீட்டியர் சில்வர் (Meteor Silver) கலர்களில் இந்த எச்பி ஓம்னிபேட் 12 மாடலை வாங்கி கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
HP Omnipad 12 With 8 GB RAM Gets Rs 2500 Discount on Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X