ஏப்.17 முதல் விற்பனை.. HP-யின் 2 புதிய AI லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம்.. என்ன மாடல்? என்ன விலை?
கடந்த மார்ச் மாதம் எச்பி (HP) நிறுவனம் அதன் எலைட்புக் சீரீஸின் (EliteBook Series) கீழ் 4 புதிய லேப்டாப் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து இருந்தது . அந்த 4 மாடல்களுமே 14 இன்ச் டிஸ்பிளேவை கொண்டு இருந்தன. இதற்கிடையில் 16 இன்ச் டிஸ்பிளேவை கொண்ட எச்பிஓ ஆம்னிபுக் 5 லேப்டாப் சீரீஸ் (HP OmniBook 5 Laptop Series) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
எச்பிஓ ஆம்னிபுக் 5 லேப்டாப் சீரீஸ் ஆனது 2 மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது: இதில் ஏஎம்டியின் ரைஸன் ஏஐ 300 சீரீஸ் சிப்கள் (AMD Ryzen AI 300 Series) சிப்கள் உள்ளன. ஒன்று -ரைஸன் ஏஐ 5 340 (Ryzen AI 5 340) மாடல் ஆகும். இதன் விலை ரூ.75,990 ஆகும்.

இன்னொன்று ரைஸன் ஏஐ 7 350 (Ryzen AI 7 350) மாடல் ஆகும். இதன் விலை ரூ.87,990 ஆகும். ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் அமேசான், எச்பி வலைத்தளம், எச்பி வொர்ல்ட் மற்றும் ரீடெயில் கடைகள் வழியாக வாங்க கிடைக்கும்.
இரண்டு மாடல்களிலும் ஏஐ டாஸ்க்களை (AI Tasks) செய்வதற்கான பில்ட்-இன் என்பியு 50 டாப்ஸ் (Built in NPU - 50 TOPS) உள்ளது. ஆகையால் இந்த லேப்டாப்கள் கோபைலட் பிளஸ் பிசி (Copilot+ PC) பிரிவில் சேர்கிறது. சிப்செட்களை தவிர இந்த 2 லேப்டாப்களின் மற்ற அம்சங்களில் எந்த மாற்றமும் இல்லை.

எச்பிஓ ஆம்னிபுக் 5 லேப்டாப் சீரீஸ் முக்கிய அம்சங்கள்:
- 2கே WQXGA ரெசல்யூஷன்
- 16:10 ஸ்க்ரீன் ரேஷியோ
- 300 நிட்ஸ் ப்ரைட்னஸ்
- 16-இன்ச் டிஸ்ப்ளே
- 16ஜிபி LPDDR5x ரேம்
- 512ஜிபி PCIe Gen4 NVMe SSD மஸ்டோரேஜ்
- ஏஎம்டி ரேடியான் 840எம் கிராபிக்ஸ்
- விண்டோஸ் 11 ஹோம்
- ஒரு வருட மைக்ரோசாஃப்ட் 365 சந்தா
- வாழ்நாள் முழுவதும் ஆபிஸ் 2024 லைசன்ஸ்
- இரண்டு USB-C போர்ட்கள்
- இரண்டு USB-A போர்ட்கள்
- HDMI 2.1 போர்ட்கள்
- ஒரு ஹெட்ஃபோன் / மைக் ஜாக்
- வைஃபை 6
- ப்ளூடூத் 5.4
- நாய்ஸ் ரிடெக்ஷன் உடனான 1080p FHD IR கேமரா

- டூயல்-அரே மைக்குகள்
- வீடியோ கால்கள் மற்றும் AI அம்சங்களுக்காக ஒரு பிரத்யேக Copilot+ கீ
- எச்பி ஃபாஸ்ட் சார்ஜை ஆதரிக்கும் 43Wh பேட்டரி
- 65W USB-C அடாப்டர் வழியாக 30 நிமிடங்களில் 50% சார்ஜிங் சார்ஜிங்
- எடையில் 1.799 கிலோ
- அளவீட்டில் 357.7 x 254.85 x 17.9-18.6 மிமீ
எச்பி எலைட்புக் சீரீஸின் கீழ் அறிமுகமான 4 புதிய லேப்டாப் மாடல்கள் என்னென்ன?
1. 14-இன்ச் எச்பி எலைட்புக் எக்ஸ் ஜி1ஏ (HP EliteBook X G1a)
2. 14-இன்ச் எச்பி எலைட்புக் எக்ஸ் ஜி1ஐ (HP EliteBook X G1i)
3. 14-இன்ச் எச்பி எலைட்புக் எக்ஸ் பிளிப் ஜி1ஐ (HP EliteBook X Flip G1i)
4. 14-இன்ச் எச்பி எலைட்புக் அல்ட்ரா ஜி1ஏ (HP EliteBook Ultra G1i)

எச்பி எலைட்புக் சீரீஸ் லேப்டாப் மாடல்கள் இந்தியாவில் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன? 14-இன்ச் எச்பி எலைட்புக் எக்ஸ் ஜி1ஏ (HP EliteBook X G1a Price in India) ஆனது இந்தியாவில் ரூ 2,21,723 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது க்ளேஸியர் சில்வர் கலர் ஆப்ஷனில் வாங்க கிடைக்கும்.
14-இன்ச் எச்பி எலைட்புக் எக்ஸ் ஜி1ஐ (HP EliteBook X G1i Price in India) இந்தியாவில் ரூ 2,22,456 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அட்மாஸ்பியர் ப்ளூ மற்றும் க்ளேஸியர் சில்வர் என்கிற 2 கலர் ஆப்ஷனில் வாங்க கிடைக்கும்.
14-இன்ச் எச்பி எலைட்புக் எக்ஸ் பிளிப் ஜி1ஐ (HP EliteBook X Flip G1i Price in India) இந்தியாவில் ரூ 2,58,989 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அட்மாஸ்பியர் ப்ளூ மற்றும் க்ளேஸியர் சில்வர் என்கிற 2 கலர் ஆப்ஷனில் வாங்க கிடைக்கும்
14-இன்ச் எச்பி எலைட்புக் அல்ட்ரா ஜி1ஏ (HP EliteBook Ultra G1i Price in India) இந்தியாவில் ரூ 2,67,223 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அட்மாஸ்பியர் ப்ளூ கலர் ஆப்ஷனில் வாங்க கிடைக்கும். இந்த 4 புதிய லேப்டாப் மாடல்களுமே ஹெச்பி ஆன்லைன் ஸ்டோர்களின் வழியாக வாங்க கிடைக்கும் என்று ஹெச்பி நிறுவனம் கூறியுள்ளது.
14-இன்ச் எச்பி எலைட்புக் அல்ட்ரா ஜி1ஏ முக்கிய அம்சங்கள்: இது ஒரு ஏஐ பிஸ்னஸ் நோட்புக் ஆகும். இது 120 ஹெர்ட்ஸ் 3K OLED டிஸ்பிளே, ஹாப்டிக் டிராக்பேட், இன்டல் கோர் அல்ட்ரா 5 மற்றும் 7 (சீரீஸ் 2) சிப்கள், 48 TOPS வரை NPU செயல்திறன், 9 மெகாபிக்சல் கேமரா, டூயல் மைக்ரோஃபோன்கள் ஆகிய முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது
14-இன்ச் எச்பி எலைட்புக் எக்ஸ் ஜி1ஐ மற்றும் எச்பி எலைட்புக் எக்ஸ் பிளிப் ஜி1ஐ முக்கிய அம்சங்கள்: இது 48 TOPS வரை NPU செயல்திறன், இன்டல் கோர் அல்ட்ரா 5 மற்றும் 7 (சீரீஸ் 2) சிப்கள், 1.4 கிலோ எடை, லேப்டாப், டேப்லெட் மற்றும் டென்ட் மோட்கள், எச்பி ரீசார்ஜபிள் ஆக்டிவ் பென் சப்போர்ட், எச்பி சுயர் சென்ஸ் ஏஐ, எச்பி எண்ட்பாயிண்ட் செக்யூரிட்டி கண்ட்ரோலர் ஆகிய முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது
14-இன்ச் எச்பி எலைட்புக் எக்ஸ் ஜி1ஏ முக்கிய அம்சங்கள்: எச்பி-யின் இந்த புதிய ஏஐ பிசி சீரீஸில் இதுதான் மலிவான மாடல் ஆகும். இது ஏஎம்டி ரைஸன் 7 ப்ரோ மற்றும் 9 ப்ரோ சிப்கள், 55 TOPS NPU செயல்திறன், ஏஐ செயலாக்கத்தைக் கையாள 8000 Mbps இல் இயங்கும் 64GB LPDDR5x ரேம், 40W தெர்மல் டிசைன் பவர் (TDP) உடனான எச்பி ஸ்மார்ட் சென்ஸ், வெப்ப செயல்திறனைப் பராமரிக்க டூயல் டர்போ ஹை டென்சிட்டி பேன்ஸ், பேக்கிரவுண்ட் அட்ஜெட்ஸ்மென்ட்ஸ் மற்றும் ஆட்டோ ஃப்ரேமிங் போன்ற அம்சங்களை கொண்ட பாலி கேமரா ப்ரோ சூட் ஆகிய முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








