முரட்டு கேமிங் லேப்டாப்.. 16 இன்ச் டிஸ்பிளே.. 32GB ரேம்.. 1TB மெமரி.. RTX 50580 ஜிபியு.. எந்த மாடல்?
இன்டல் கோர் அல்ட்ரா 9 ப்ராசஸர், விண்டோஸ் 11 ஹோம் ஓஎஸ், 16 இன்ச் டிஸ்பிளே, எண்விடியா ஜிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 50580 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு, 32 ஜிபி ரேம், 1 டிபி ஸ்டோரேஜ் போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் கேமிங் பிரியர்களை தட்டித் தூக்கும்படி எச்பி ஓமன் மேக்ஸ் 16 (HP OMEN MAX 16) லேப்டாப் களமிறங்கி இருக்கிறது. இந்த பிரீமியம் கேமிங் லேப்டாப்பின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது பார்க்கலாம்.
கேமிங் பிரியர்கள் விரும்பும்படியான டிசைனில் பில்ட் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, ஆர்ஜிபி லைட் பார் (RGB Light Bar) மற்றும் ஆர்ஜிபி கீ-போர்ட் (RGB Keyboard) கிடைக்கிறது. இதை கஸ்டமைசஸ் செய்துகொள்ள ஓமன் லைட் ஸ்டூடியோ (OMEN Light Studio) சப்போர்ட் கிடைக்கிறது. ட்வின் ஃபேன் செட்டப் மற்றும் டெம்ப்ஸ்ட் கூலிங் ப்ரோ சிஸ்டம் (Tempest Cooling Pro System) கிடைக்கிறது.

கேமரா பிரைவசி ஷட்டர் (Camera Privacy Shutter) கிடைக்கிறது. எச்பி ட்ரூ விஷன் ஐஆர் (HP True Vision IR) கேமரா கிடைக்கிறது. இந்த டிசைனில் செராமிக் ஒயிட் (Ceramic White) மற்றும் ஷேடோ பிளாக் (Shadow Black) கலர்களில் வருகிறது. 2.68 கிலோ எடை கொடுக்கிறது. இப்போது, டிஸ்பிளே, ப்ராசஸர், ரேம், ஸ்டோரேஜ் மற்றும் பேட்டரி போன்ற பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
எச்பி ஓமன் மேக்ஸ் 16 அம்சங்கள் (HP OMEN MAX 16 Specifications): இந்த லேப்டாப்பில் 16 இன்ச் (2560 X 1600 பிக்சல்கள்) ஐபிஎஸ் (IPS) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் WQXGA ரெசொலூஷன், 240Hz ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எஸ்ஆர்ஜிபி (sRGB) சப்போர்ட் கிடைக்கிறது. மைக்ரோ எட்ஜ் (Micro Edge) மற்றும் ஆன்டி கிளார் (Anti Glare) சப்போர்ட் கொடுக்கிறது.
விண்டோஸ் 11 ஹோம் (Windows 11 Home) ஓஎஸ் மற்றும் இன்டர் கோர் அல்ட்ரா (Intel Core Ultra 9) ப்ராசஸர் கிடைக்கிறது. இன்டல் எச்எம்870 (Intel HM870) சிப்செட் கிடைக்கிறது. அல்ட்ரா பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்க இன்டர் டர்போ பூஸ்ட் டெக்னாலஜி (Intel Turbo Boost Technology) கிடைக்கிறது. 32 ஜிபி ரேம் (2 x 16) மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் கிடைக்கிறது.

இதுபோக 25 ஜிபிக்கான டிராப்பாக்ஸ் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. ஆனால், இதை 12 மாதங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். ஆடியோவை பார்க்கையில், டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers) கிடைக்கின்றன. இதில் எச்பி ஆடியோ பூஸ்ட் (HP Audio Boost), ஹைப்பர்எக்ஸ் (HyperX) மற்றும் டிடிஎஸ்:எக்ஸ் அல்ட்ரா (DTS:X Ultra) சப்போர்ட் கிடைக்கிறது.
ஐஆர் தெர்மல் சென்சார் (IR Thermal Sensor), எச்பி இமேஜ்பேட் (HP Imagepad) உள்ளது. 330W ஏசி அடாப்டர் கிடைக்கிறது. 6-செல் லித்தியம்-அயன் பாலிமர் பேட்டரி கிடைக்கிறது. 30 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜ் செய்து கொள்ளலாம். என்விடியா ஜிபோர்ஸ் ஆர்டிஎக்ஸ் 50580 ஜிபியு (NVIDIA GeForce RTX 5080 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.
இது 16 ஜிபிக்கான கார்டாக இருப்பதால் அவுட்புட் பிரீமியமாக இருக்கும். வை-பை 7, ப்ளூடூத் 5.4 கனெக்டிவிட்டி, 2 தண்டர்போல்ட், 2 யுஎஸ்பி, 2 எச்டிஎம்ஐ போர்ட்கள் கிடைக்கின்றன. இவ்வளவு பிரீமியம் பீச்சர்களை கொடுப்பதால், இந்த எச்பி ஓமன் மேக்ஸ் 16 மாடலின் விலை ரூ.3,09,999ஆக இருக்கிறது. அமேசான் (Amazon) மற்றும் எச்பி ஆன்லைன் ஸ்டோரில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications