ஹெட்போன் வாங்குறீங்களா: சிறந்ததை தேர்வு செய்வது எப்படி?

ஹெட்போன்கள் நீங்கள் இணைக்கும் கருவியிலிருந்து மின்சாரத்தை பயன்படுத்திக்கொள்கின்றன. மின்மறுப்பு என்பது மின்சாரத்தை தடுக்கும் ஓர் அளவீடு ஆகும்.

|

காதலி இல்லாமல் கூட இருந்துவிடலாம். காது இல்லாமல் இருக்கமுடியுமா? நம்மை சுற்றியுள்ள அனைத்து இரைச்சல்களில் இருந்தும் தற்காத்துக் கொள்ள நமக்கு பயன்படுவது ஹெட்போன்கள் என்றால் மிகையாகாது. ஆனால் சந்தையில் ஏகப்பட்ட ஹெட்போன் வகைகள் நிரம்பி வழிகின்றன. நம் முன் இருக்கும் பல்வேறு வகைகளில் எதை தேர்வு செய்வது என்று தலையை பிய்த்துகொள்ள நேரிடும். இந்த பதிவின் மூலம் எப்படி ஹெட்போன் வாங்க வேண்டும், எந்தெந்த விசயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும் என்ற வழிமுறையை அறியலாம்.

ஹெட்போன் வாங்குறீங்களா: சிறந்ததை தேர்வு செய்வது எப்படி?


ஹெட்போனின் வகைகள்
ஹெட்போன்களை பொறுத்தமட்டில் முக்கியமாக இருவகைகள் உள்ளன. முழுவடிவ ஹெட்போன்கள் மற்றும் காதுகளுக்கு எடுப்பாக இருக்கும் ஹெட்போன்கள்(full-size headphones and ear-fitting headphones). முதல் கேள்வி என்னவெனில், எதற்காக ஹெட்போன்கள் நமக்கு தேவை என்பது தான். பாடல்கள் கேட்பதற்கு என்றால், வலுவான அடித்தளம் மற்றும் சிறந்த சுற்றுப்புற ஒலி வசதிகளை கொண்ட முழுவடிவ ஹெட்போன்களை வாங்கலாம். சப்தம் இல்லாத சுற்றுசூழல் வேண்டுமென்றால் காதுகளுக்குள் பொருந்தும் ஹெட்போன்களை பயன்படுத்தலாம். மேலும் ஹெட்போன்கள் எந்த பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஹெட்போன் வாங்குறீங்களா: சிறந்ததை தேர்வு செய்வது எப்படி?


அலைவரிசை வரம்பு
ஒலிஅலைகளின் திறன் அவற்றின் அலைவரிசையை பொறுத்தே அமையும். மனிதனின் காதுகள் 20முதல் 20,000 ஹெர்ட்ஸ் ஒலியை தாங்கக்கூடியது. எனவே ஹெட்போன்கள் இந்த அலைவரிசையில் அளவில் உள்ளதா என பார்க்க வேண்டும். நீங்கள் ஆழ்ந்த ஒலியை அனுபவிக்க விரும்பினால், 20ஹெர்ட்ஸ்க்கு கீழே உள்ள ஹெட்போன்களை தேர்வு செய்யுங்கள். ஆனால் 20,000 ஹெர்ட்ஸ்க்கு மேலே உள்ள ஹெட்போன்களிடம் இருந்து தள்ளியே இருங்கள். உண்மையை சொல்லப்போனால் அவற்றால் ஒரு பயனும் இல்லை.
ஹெட்போன் வாங்குறீங்களா: சிறந்ததை தேர்வு செய்வது எப்படி?


மின்மறுப்பு (Impedance)
ஹெட்போன்கள் நீங்கள் இணைக்கும் கருவியிலிருந்து மின்சாரத்தை பயன்படுத்திக்கொள்கின்றன. மின்மறுப்பு என்பது மின்சாரத்தை தடுக்கும் ஓர் அளவீடு ஆகும். எளிதாக கூறினால், ஒரே மின்சார உள்ளீட்டில் குறைந்த மின்மறுப்பு என்றால் அதிக ஒலியை வெளிப்படுத்தும். எனவே அதிக மின்மறுப்பு ஹெட்போன்களில் நிறைய நன்மைகள் உள்ளன. குறைந்த மின்மறுப்பு ஹெட்போன்களை காட்டிலும் இவை குறைவாக பாதிக்கப்படுகின்றன. உங்களின் ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப்பில் பயன்படுத்துவதற்கு என்றால் குறைந்த மின்மறுப்பு ஹெட்போன்கள் சிறந்தது. ஆடியோ மக்சர் வேண்டுமென்றால் அதிக மின்மறுப்பு ஹெட்போன்களே சிறந்து தேர்வு.

ஹெட்போன் வாங்குறீங்களா: சிறந்ததை தேர்வு செய்வது எப்படி?

காந்த வகை
ஹெட்போன் தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் காந்த வகைகள் பெர்ரைட் மற்றும் நியோடியம். இதில் சிறந்தது எதுவென்றால் நியோடியம் தான். ஏனெனில் இதன் காந்தவிசை பெர்ரைட் போலவே இருந்தாலும் எடை குறைவாக இருக்கும். எடை குறைவான ஹெட்போன்களை அணிவது தானே எளிதாக இருக்கும்.

அடுத்தமுறை ஹெட்போன்கள் வாங்கும் போது இந்த விசயங்களை கருத்தில் கொள்ளுங்கள். இணையத்தில் ஹெட்போன்கள் வாங்கும் கூடுதல் விவரங்கள் என்ற பிரிவில் இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.

Best Mobiles in India

English summary
How you should choose a headphone ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X