Home
Gadgets

சர்வதேச பயணிகளுக்கான அசத்தல் சாதனம்: இனி அந்த பிரச்சனை இருக்காது.!

நம்மில் சிலர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட சமயத்தில் நம் செல்போன் அல்லது லேப்டாப் சார்ஜ் இல்லாமல் போகும் போது நம்மிடம் இருக்கும் சார்ஜர் ப்ளக்கும், அந்நாட்டில் உள்ள ப்ளக் பாய்ண்ட்-ம் சரிவர பொருந்தாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருப்போம்.

சர்வதேச பயணிகளுக்கான அசத்தல் சாதனம்: இனி அந்த பிரச்சனை இருக்காது.!

இதுபோன்ற சமயங்களில் இரண்டே வாய்ப்புகள் தான். ஒன்று தங்கியிருக்கும் நகரத்தில் அலைந்து திரிந்து அந்நாட்டிற்கு ஏற்றவாறு சார்ஜர் வாங்குவது மற்றும் இரண்டாவது உங்களது செல்போனை பயன்படுத்துவதை மறந்துவிடுவது! இருப்பினும் இதுபோன்ற சிறிய சிரமம் உங்களது வெளிநாட்டு பயணத்தை அனுபவிக்க தடையாக இருக்ககூடாது.

இதுபோன்ற ஒரு எண்ணம் தான் மின்னணு சாதனங்கள் பிராண்டான ஐபிளாக்க்யூப் நிறுவன தொழில்முனைவோர்களை ஊக்குவித்து, பயணங்களை சவுகரியமானதாக மாற்றுவதற்கான தீர்வை தேட வைத்தது. அந்த தேடலில் உருவான யோசனை தான் நிம்பில்(Nimble) . இந்த பன்னோக்கு நிம்பில் அடாப்டர் சாதனம் பல்வேறு நாடுகளில் உள்ள ப்ளக்பாய்ண்ட்கள் மற்றும் பல கருவிகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனத்தை உலகெங்கும் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தலாம்.உங்கள் மடிக்கணினியில் நெட்ஃபிக்ஸ் நிகழ்ச்சியின் கடைசி பகுதியை பார்த்து முடிக்க அல்லது மொபைலை முழுவதுமாக சார்ஜ் என ஒரே நேரத்தில் 6 வெவ்வேறு கருவிகளை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. ஐப்ளாக்க்யூப் குழு இதுகுறித்து கூறுகையில், இந்த சாதனம் சர்வதேச பயணங்களை மேற்கொள்ளும் போது அதிக சவுகரியமானதாக இருப்பதுடன், வேகமாக சார்ஜ் செய்யும் வசதி இருப்பதால் நேரத்தை மிச்சப்படுத்துகிறது.

இந்த சாதனம் கையடக்கமாகவும் நீடித்து உழைக்கக்கூடியதாகவும் உள்ளது. மேலும் இது பாரம்பரிய பயண அடாப்டர்களை போலில்லாமல், அனைத்து USB-C மற்றும் USB-A போர்ட்களுக்கும் மின்சாரத்தை பகிர்ந்து கொள்ளாது. மொபைல் மடிக்கணினிகள், டேப்லெட் மற்றும் பிற இணக்கமான கேஜெட்டுகளுக்கு உகந்ததாக சார்ஜ் செய்ய USB- C QC / PD போர்ட் இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பயணிகளுக்கான அசத்தல் சாதனம்: இனி அந்த பிரச்சனை இருக்காது.!

இதிலுள்ள 18W டைப் சி QC / PD (போர்ட் 1) பயனர்களை முதன்மை போர்ட்-ஐ தேர்வு செய்ய அனுமதிக்கிறது மற்றும் 17w ஐ 3 USB + டைப் சி (போர்ட் 2) பகிர்ந்து கொள்ளும்.இந்த நிம்பில் பயண அடாப்டர்கள் தனித்த போர்ட்களுடன் இணக்கமான சாதனங்களின் திறமையான சார்ஜ் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்கின்றன.

Best Mobiles in India

English summary
How to Travel Smarter for Tech Lovers and more details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X