தரமான விர்சுவல் ரியலிட்டி ஹெட்செட்-ஐ தேர்வு செய்வது எப்படி?

சிக்னல் தாமதமானால் விர்சுவல் ரியாலிட்டி உலகின் சிறப்பான அனுபவத்தை பெறமுடியாது என்பதால், குறைந்த சுற்றுபுறமே பயன்படுத்தினாலும் இணைக்கப்பட்ட ஹெட்களும் சிறந்ததே.

|

நாம் வசிப்பது போன்ற அல்லது அதை விடச் சிறந்த உலகம், மற்றவர்களோ அல்லது மற்றவையோ வசிக்கும் ஓர் உலகம், உங்களை நீங்களே முழுவதுமாக மூழ்கடிக்கும் செயற்கை உலகத்திற்குள் செல்லுவது போன்ற புதுமையான தொழில்நுட்ப படைப்புகள் விர்சுவல் ரியாலிட்டி துறையில் நடக்கின்றன.இது போன்ற எதிர்பார்ப்புகளுக்காகவே சந்தையில் நிறைய விர்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்கள் கிடைக்கின்றன.

தரமான விர்சுவல் ரியலிட்டி ஹெட்செட்-ஐ தேர்வு செய்வது எப்படி?

ஆனால் அவற்றின் ஒவ்வொரு வகையையும் அறிந்து கொள்வது மிகவும் எரிச்சலூட்டக்கூடிய ஒன்று. எனவே சந்தையில் உள்ள ஹெட்செட் வகையை அறிந்து தேவையானதை எளிதில் தேர்வு செய்ய இந்த கட்டுரை உதவும்.

தனித்து இயங்குபவை Vs இணைக்கப்பட்டவை (Standalone VS Tethered)

தனித்து இயங்குபவை Vs இணைக்கப்பட்டவை (Standalone VS Tethered)

இவை இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் பொதுவானதே. ஆனால் இவற்றின் மூலம் கிடைக்கும் அனுபவம் மிகவும் நுண்ணியமானது. கருவிகளுடன் இணைக்கப்படாததால், தனித்து இயங்கும் ஹெட்செட்களை கையாளுவது என்பது சுலபம். இதில் ஒயருடன் இணைப்பு இல்லாததால் குறிப்பிட்ட சுற்றளவில் மட்டுமில்லாமல் பெரிய பரப்பளவில் பயன்படுத்தமுடியும்.

ஆனால் இணைக்கப்படாமல் இருப்பது என்பது கருவியின் செயலற்ற நிலைக்கு வழிவகுக்கும். இதில் கருவியில் இருந்து ஹெட்செட்டிற்கு சிக்னல் கிடைக்க தாமதம் ஏற்பட்டால் , சிறப்பான அனுபவத்தை பெறவியலாது. இவ்வகை விர்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்கள் அதிக எடையுடனும் அசவுகரியமாகவும் இருக்கும்.

சிக்னல் தாமதமானால் விர்சுவல் ரியாலிட்டி உலகின் சிறப்பான அனுபவத்தை பெறமுடியாது என்பதால், குறைந்த சுற்றுபுறமே பயன்படுத்தினாலும் இணைக்கப்பட்ட ஹெட்களும் சிறந்ததே. முக்கியமாக படங்களை பார்க்க மட்டுமே பயன்படுத்துவதாக இருந்தால் தாராளமாக இவற்றை பயன்படுத்தலாம்.

வடிவமைப்பு

வடிவமைப்பு

ஹெட்செட் வடிவமைப்பை பற்றி பேசும் போது அதன் வெளிப்புறம் பிடித்தமாறி உள்ளதா என பார்க்காமல், அது சவுகர்யமாக உள்ளதா என பார்க்கவேண்டும். நீண்ட நேரம் பயன்படுத்த வேண்டும் என்பதால், மோசமாக வடிவமைக்கப்பட்ட ஹெட்செட்கள் வெர்சுவல் ரியாலிட்டி அனுபவத்தை கெடுப்பதுடன் உங்கள் உடல்நலத்தையும் கெடுக்கிறது.

திரை

திரை

நீங்கள் மற்றொரு உலகத்தில் இருக்கும் போது மோசமான திரையை கொண்டிருந்தால் உங்களை நீங்களே சமாதானம் செய்துகொள்ள முடியாது. எனவே சிறப்பான திரையின் மூலம் சிறந்த அனுபவத்தை பெறுங்கள். இந்த ஹெட்செட்கள் திரையுடன் இணைந்தே வருகின்றன. மேலும் சில ஸ்மார்ட்போன்கள் இணைக்கும் வகையில் உள்ளன.

பார்க்கும் திறன்

பார்க்கும் திறன்

மனிதனின் கண் 180-240 டிகிரி வரை பார்க்கக்கூடியது.எனவே இந்த ஹெட்செட்கள் நாம் உருவாக்க விரும்பும் உலகை நம் கண்முன்னே நிறுத்தும் வகையில் இருக்க வேண்டும். மனித கண்கள் நாம் உருவாக்கும் மெய்நிகர் சூழலில் உள்ள தவறுகளை எளிதில் கண்டறியவல்லது. இது ஸ்னோர்கில் மாஸ்க் எப்பெக்ட் எனப்படும்.

சரிசெய்துகொள்ளும் வகையிலான லென்சுகள்
சரியான லென்சுகளை கண்டறியும் போது பின்வரும் மூன்று விசயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

1)போகஸ்

2) இன்டர்புபில்லரி டிஸ்டன்ஸ்

3)லென்ஸ்-ஐ டிஸ்டன்ஸ்

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
 டிராக்கிங் மற்றும் கன்ட்ரோலர்ஸ்

டிராக்கிங் மற்றும் கன்ட்ரோலர்ஸ்

இதை பின்வரும் விசயங்களை கொண்டு மதிப்பிடலாம்.

1) டிராக்கிங் ஏரியா

நாம் வெர்சுவலாக உருவாக்க விரும்பும் பகுதியில் அளவீடுகள் டிராக்கிங் ஏரியா எனப்படும்.

2) பொசிசனல் டிராக்கிங்

ஒரு பொருள் அல்லது மனிதன் உள்ள இடத்தை டிராக் செய்வது என்பது வெர்சுவல் ரியாலிட்டி அனுபவத்தை மேலும் சிறப்பாக மாற்றும். துல்லியமான இடத்தை விட குறைவு என்பது பொருளை தவறான இடத்தில் வைப்பது அல்லது மாற்றி வைப்பது ஆகும். எனவே இதை தவிர்த்து விட முடியாது.

Best Mobiles in India

English summary
How to choose the right VR headset ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X