அலிபாபா முதல் நம்ம தல அஜித் வரை ட்ரோன்களை பறக்க விடுவதற்கு காரணம் என்ன தெரியுமா?
2017-ஆம் ஆண்டில், ஸ்காட்லாந்து போலிஸ் இரண்டு ட்ரோன்கள் பயன்பாட்டை பரிசோதிக்கும் திட்டங்களை அறிவித்தது. பின்பு 2018 மார்ச் மாதம் இந்த திட்டம் உறுதி செய்யப்பட்டது.
தற்சமயம் ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களை பயன்படுத்துவது தொடர்பாக இந்திய அரசு பல்வேறு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. குறிப்பாக நமது நாட்டில் ட்ரோன்கள் பகல் நேரத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது, அதுவும், 450 மீட்டர் உயரத்தில் மட்டுமே இயக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ட்ரோன் எனப்படும் தொழில்நுட்பம் மக்களுக்கு பல்வேறு வகையில் உதவியாய் இருக்கிறது என்று தான் கூறவேண்டும். அதன்படி அலிபாபா முதல் நம்ம தல அஜித் வரை ட்ரோன்களை பயன்படுத்துவது எதற்கு என்று பார்ப்போம்.

ஸ்காட்லாந்து
2017-ஆம் ஆண்டில், ஸ்காட்லாந்து போலிஸ் இரண்டு ட்ரோன்கள் பயன்பாட்டை பரிசோதிக்கும் திட்டங்களை அறிவித்தது. பின்பு 2018 மார்ச் மாதம் இந்த திட்டம் உறுதி செய்யப்பட்டது. அதவாது காவல்துறையினர் காணாமல் போனவர்களைத் தேடுவதற்கும், பின்பு குற்றவாளிகளை கண்காணித்து செயல்படுவதற்கும்,போக்குவரத்து கண்காணிப்பு போன்ற வசதிகளுக்கும் மூன்று பவுண்டுகள் கொண்ட ட்ரோன் மாடல்களை வாங்கினர்.

மலை மீட்பு குழு
2017 ஆம் ஆண்டில், Brecon மலை மீட்பு குழு, ட்ரோன் தொழில்நுட்பத்தை விசாரணையை எதிர்கொள்வதற்கு அதன் திட்டங்களை அறிவித்தது. மேலும் 2017 ஆம் ஆண்டில் 122 தேடல்களில் 4,784 மணிநேரத்தை செலவிட்டிருந்தது இந்த அரசு.
எனவே எதிர்காலத்தில் தேடல் மணிநேரத்தை குறைக்க ட்ரோன்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. பின்பு Brecon நாடு
இந்த ஆண்டு தொடக்கத்தில் ட்ரோன் தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ருவாண்டா
ருவாண்டாவை அடிப்படையாகக் கொண்ட இரத்த விநியோக சேவை மையம் Zipline ட்ரோன் மாடல்களைப் பயன்படுத்துகிறது.

அலிபாபா
இந்த ஆண்டு தொடக்கத்தில், சீன அரசாங்கத்திடமிருந்து ஷாங்காயில் உணவு விநியோக ட்ரோன்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தது. இது அலிபாபாவின் சொந்தமான உணவு விநியோக சேவை மையம் ஆகும். பின்பு ஷாங்காய்யில் உள்ள சில தொழிற்சாலைகளில் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் ஆர்டர்களைப் பெற எளிதாக உள்ளது என அலிபாபா நிறுவனம் தெரிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட்
மைக்ரோசாப்ட் அதன் வருடாந்திர பில்ட் டெவலப்பர் மாநாட்டில் டி.ஜே.ஐ. உடன் இணைந்து ட்ரோன் நிறுவனத்தை உருவாக்க முயற்சிக்கின்றது என்று அறிவித்தது. டி.ஜே.ஐ-உடன் ஒரு சீன ட்ரோன் உற்பத்தியாளர் - வர்த்தக டிரோன்களுக்கான மைக்ரோசாப்ட்டின் இயந்திர கற்றல் திறன்களைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டது மற்றும் DJI ட்ரோன்களை கட்டுப்படுத்த விண்டோஸ் மென்பொருள் டெவலப்மெண்ட் கிட் (SDK) துவங்குவதை நோக்கமாகக் கொண்டது.

தற்காலிக இணைய பாதுகாப்பு
BT என்ற நிறுவனம் போர்க்களங்கள், பேரழிவு மண்டலங்கள் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு தற்காலிக இணைய பாதுகாப்பு வழங்குவதற்காக ட்ரோன்களைப் பயன்படுத்தி பரிசோதனை செய்து வருகிறது. நெட்வொர்க்குகள் எதிர்காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படாவிட்டால், முதலில் UAV கள் சேதத்தை மதிப்பீடு செய்யலாம், பின்னர் டிரான்ஸ் மற்றும் பலூன்கள் மூலம் அந்த பகுதிக்கு இணைய அணுகலை வழங்க முடியும்.

இஸ்ரேல்
இஸ்ரேல் நாட்டில் Flytrex என்ற ஒரு நிறுவனம் உள்ளது, இது உணவு மற்றும் நுகர்வோர் பொருட்களை 25 நிமிடங்களில் பயனர்களுக்கு கொண்டு சேர்க்கிறது. பின்பு அந்த நாட்டில் உள்ள பல்வேறு பாதுகாப்பு பணிகளுக்கு இந்த ட்ரோன்
மாடல்கள் பயன்படுத்தப்படுகிறது.

ஆபிரிக்கா
ஆபிரிக்காவில் உள்ள தேசிய பூங்காக்களில் காண்டாமிருகங்கள் நோயினால் அதிகமாக பாதிக்கப்படுகிறது எனவே அதன் வெப்ப நிலையை கண்டறிவதற்கு கத்தோலோனியாவின் பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் ஒரு ட்ரோன் மாடல்களை உருவாக்கியுள்ளனர்.

கனடா
கனடாவில் பிறந்த ராயல் மெயில் தலைமை நிர்வாக அதிகாரி மொயா கிரீன், 2015 ஆம் ஆண்டில் தபால் சேவை ட்ரோன்கள் மூலம் தானாகவே விநியோகிக்கப்படும் என்று கூறினார். அதன்படி இந்த ட்ரோன்கள் கிராமப்புற மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.

அஜித் & தக்ஷா குழு
அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்தியா முழுவதுமுள்ள 111 பொறியியல் கல்லூரி மாணவர்களுக்குள் ஆளில்லா குட்டி விமானம் பறக்கவிடும் போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு குழுக்களுடன் அஜித் ஆலோசகராக உள்ள எம்.ஐ.டி மாணவர்கள் குழுவும் பங்கேற்றது. அதில், எம்.ஐ.டி மாணவர்கள் தயாரித்த தக்ஷா என்ற ஆளில்லா குட்டி விமானம் பறக்கவிடப்பட்டது. அது, தரையில் இருந்து 10 முதல் 15 அடி உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டதுடன், 6 மணி நேரம் 7 நிமிடம் 45 விநாடிகள் வரை பறந்தது. இந்த சாதனையைத் தொடர்ந்து நடிகர் அஜித் ஆலோசகராக இருக்கும் தக்ஷா குழுவுக்குத் தமிழக அரசு உயரிய விருந்து வழங்கி கவுரவம் செய்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் இம்மாதம் நடைபெறும் ஆளில்லா விமானம் பறக்கவிடும் போட்டிகளிலும் சாதனை படைக்க முயற்சித்து வருகிறது.
முன்னதாக அஜித் ஆலோசகராக இருந்து பயிற்சி அளித்து வரும் தக்ஷா குழு தயாரித்த ட்ரோன் 10 கிலோ வரையிலான எடையை சுமக்கும் என்பதால், ஏர் ஆம்புலன்ஸாக இதை பயன்படுத்தலாம் என்று அஜித் ஆலோசனை கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications